நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 30 அக்டோபர், 2019

ஒத்த செருப்பு – திரை விமர்சனம்


ஒத்த செருப்பு  திரை விமர்சனம்

மனித குலம், தன் இறந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றை நிகழ்காலத்தில் சோதித்துப் பார்த்திருக்கிறது. அப்படிப்பட்ட சோதனைகளே புதிய பரிமாணத்திற்கு வழிவகுத்துள்ளன. புதிய பரிமாணத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழ்த் திரையுலகில் ஒத்த செருப்பு எனும் திரைப்படத்தை சோதனை முயற்சியின் வெற்றி என்று கூறலாம்.
தனிநபர் நடிப்பு, அதாவது (Mono acting) என்ற பிரிவில் ஒரு திரைப்படத்தையே வெளியிட முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று விடையெழுதியுள்ளார் பார்த்திபன். இன்றைய காலகட்டத்தில் வெற்றிகரமான படமெடுக்க ஒரு நாயகன் போதாதென, பல நட்சத்திரங்களை வைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 
அதற்கும், ட்ரெய்லர், டீசர், இசை வெளியீட்டு விழா என பல முன்னெடுப்புகளைச் செய்யவேண்டியுள்ளது. இச்சூழலில் எவ்வித ஆடம்பரமுமின்றி ஒத்த செருப்பு படத்தை தனிஒருவனாக இயக்கி, நடித்து, தயாரித்திருக்கிறார் பார்த்திபன்.
ஒரு கதாப்பாத்திரத்தை மையமிட்டு சில அயல்மொழி திரைப்படங்கள் வந்துள்ளன.  ஆனாலும், அத்திரைக்கதையில் பிற பாத்திரங்கள் அவ்வப்போது வந்து செல்வதும் உண்டு. ஆனால், பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படத்தில் அவரைத் தவிர வேறெந்த கதாப்பாத்திரங்களும் திரைக்கதையில் தோன்றவேயில்லை. அவற்றின் குரல் மட்டும் பின்னணியில் ஒலிக்கின்றன.  அக்காதாப்பாத்திரங்களை நாம் அடையாளங்காண இலகுவாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ராம்ஜி.
படம் முடிவடையும்வரை திரை முழுவதும் பார்த்திபனே நிறைந்திருக்கிறார். பார்த்திபன் திரையில் வராத காட்சிகள் மிகச்சொற்பம்.  கூத்துக் கலையில் கட்டியங்காரன், கதையை எப்படி எடுத்துரைத்து விவரிப்பாரோ! அப்படியே ஒத்த செருப்பு படமும் விவரிக்கிறது. இதைக் கூத்து மரபின் நீட்சியாகக் கருதமுடியும்.
பார்த்திபனின் குரலாலும், அவருக்கு மட்டுமே கேட்கும் மனக்குரலாலும் நம் கண் முன்னே கற்பனையில் காட்சிகள் விரிகின்றன.  திரையில் என்னவோ பார்த்திபன் மட்டும்தான் தோன்றுகிறார். ஆனால், அவரது நடிப்பும், குரலும், உடல்மொழியும் நடந்தவற்றைக் காட்சிப்படுத்துகிறது.  இதற்கு வலுவாகப் பின்னணி இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். 
கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவரா எனும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள, பார்த்திபனைப் பிடித்து வருகின்றனர். தான் செய்த கொலையை  விவரிக்கும் பார்த்திபன் அதற்கான பின்னணியையும் விவரிக்கிறார். முற்றாக மாட்டிக்கொண்டோம் எனத்தெரிந்தபின், முன்னர் செய்த பிற கொலைகளையும் அதற்கான காரணங்களையும் நியாயப்படுத்துகிறார்.
பெயரிடுதலில் சில காரணங்களைக் காண முடியும். கொலைகள் செய்திருந்தாலும் அதற்கு  நியாயம் சொல்லும் பார்த்திபனின் கதாப்பாத்திரப் பெயர் மாசு இலா மணி = மாசிலாமணி.  Muscular Dystrophy எனும் தசைஅழிவு நோயால் பாதிக்கப்பட்ட மகனின் பெயர் (முழுமுதற் கடவுளாக வணங்கப்படும்) மகேசுவரன் என்பதே.

(காவல்துறை விசாரணையில் தன் மனைவியைப் பற்றிப் பேசத்தொடங்கும் போது, பார்த்திபன் மேல்நோக்கி பார்ப்பார். மேலே உஷா நிறுவனத்தின் மின்விசிறி ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய மனைவியின் பெயர் உஷா என்பதும் அவர் இறந்து மேலே சென்றுவிட்டார் என்பதற்கான குறியீடாகக் கொள்ளமுடியும்.) 

தன் மகனுக்குக் காற்றாடி பிடிக்கும் என்பதால் அது பார்த்திபனுக்குப் பிடித்த ஒன்றாகிறது. காற்றாடி கையிலிருக்கும்போது பறக்காது. ஆனால், காற்றில் பறக்கும் போது, அதன் பிடிமானம் கையிலிருக்கும். அவ்வப்போது, தன்னை விட்டு மனைவி வெளிச்சென்றுவிடுகிறாள். பிடிமானத்திற்காக மீண்டும் வீடு வருகிறாள். கடற்கரை அருகே மனைவி விபத்தில் இறக்கும்  போது, காத்தாடி பிஞ்சி போச்சி என மகன் அழுவதாக வசனம் வரும்.  இவ்விடங்களில் காற்றாடியை மனைவிக்கான குறியீடாகக் கொள்ள முடியும்.
வசனத்தைப் பொறுத்தவரையில் பஞ்ச் வசனங்கள் எதார்த்தத்தை எடுத்துரைக்கின்றன.  உலகமயமாக்கலால்  பொருளாதாரத் தன்னிறைவடையாமல் ஆற்றாமையில் இருக்கும் ஒருவனின் வெளிப்பாடு அவை.
"காசில்லாதவனுக்குத்தான் கடவுள் பவரு
உண்மையிலே, பவர்தான் சார் கடவுள்",
"பூனைக்கிட்ட குருவி மாட்டிக்கிடிச்சினா,
குருவியா இருந்து பாருங்க! அதோட வலி தெரியும்'', 
"அதிகாரமென்பது,  இருக்குறவங்கள்ட்ட பணத்தையும்
இல்லாதவங்கள்ட்ட உயிரையும் எடுத்துக்கறது தானே".
அழ வைக்கும் சில கணங்களிலேயே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வசனங்களை எழுதியுள்ளார். இவ்விடங்களிலெல்லாம் பார்த்திபனாக மாசிலாமணி மாறியிருக்கிறார்.
மனைவியை இரசிக்கும் தருணங்களில் கணவனாக உள்ளத்தைத் தழுவுகிறார். "குத்து விளக்குக்குப் பட்டுப்புடவை கட்டுன மாதிரி இருப்பா" என்றும், தன்னுடைய அழகோடு ஒப்பிடுகையில், "தலகாணிக்குப் பஞ்சிருந்தா தூங்கலாம், தங்கமிருந்தா தூங்க முடியுமா?" மனைவி அழகானவள் என்பது கிளாசிக் ரகம். இப்படிக் காதல் செய்யும் கணவனே மனைவியைக் கொலைசெய்திருப்பான் என சந்தேகிக்கும் காவல்துறையின் எண்ணத்தை குருவிகளிடம் பேசும் பார்த்திபன் செய்திருக்க மாட்டான் என உளவியல் நிபுணர் நம்புகிறார். அதுவும் உண்மையே. தாய்மை என்பது பெண்பால் மட்டும் தொடர்புடையதில்லை அன்பாலும் தொடர்புடையது என்பதை நோயுற்ற மகனைப் பாதுகாக்கும் தாயுமானவனாக பார்த்திபன் நிறுவுகிறார்.
சிலநாட்களில் சாகவிருக்கும் மகனையும் அவனுக்காக வாழும் அப்பாவையும் அனாதையாக்கிய சூழலை கதைசொல்லியாகக் கேள்விகேட்கும் ஒத்த செருப்பாக பார்த்திபன் இருக்கிறார்.  பிற பாத்திரங்களைக் காட்சிப்படுத்தாததால், இச்சமூகத்தையும் கேள்வி கேட்டிருக்கிறார்.  படத்தின் நிறைவில் படத்தலைப்பான ஒத்த செருப்பிற்கான காரண முடிச்சை அவிழ்க்கிறார்.
மொத்தத்தில், நடைமுறை உலகில் பயன்பாடற்றதாகக் கருதப்படும் ஒத்த செருப்பினை மையப்பாத்திரமாக்கி படமெடுத்திருப்பதில் வென்றிருக்கிறார் பார்த்திபன்.

-த.க.தமிழ் பாரதன், புதுதில்லி

புதுதில்லி அகில இந்திய வானொலியின் தமி்ழ்ப்பிரிவில் 13.10.2019 காலை ஒலிபரப்பில் ஒலிவலம் வந்தது. குரல் : திரு. சுந்தரமூர்த்தி, AIR 

(அடைப்புக்குறிக்குள் இடம்பெற்றவை தணிக்கை செய்யப்பெற்றவை)


புதன், 9 அக்டோபர், 2019

The Concept of Place and Time in Tolkāppiyam and Aristotle’s Physics

Tamil Bharathan T K

M. Phil. Scholar in Tamil

Centre of Indian Languages / School of Language

Jawaharlal Nehru University, New Delhi

                                                                                                                                                09.10.2019


The Concept of Place and Time in Tolkāppiyam and Aristotle’s Physics

A common perception, supposed to have no connection between “Space and Time”. However, there existing a scientific perception about the concept of “Physical Space”, which is conceived as “Place”. The “Physical Space” is an unlimited expanse of the universe, in which all material objects are located and all phenomena occur. The concept of “Place and Time” has been discussed in the ancient civilization of Tamil and Greek. The present paper is an introductory part of the basic understanding of the notions of “Place and Time”. We have taken two works – Tolkāppiyam from Tamil and Aristotle’s Physics from Greek. These two works speak elaborately about “Place and Time”. 

Tolkāppiyam

            Tolkāppiyam is a comprehensive treatise of linguistics and poetics in Tamil. It is the earliest extant grammar in Tamil. It is supposed to have been written by Tolkāppiyar and named after him. There are different views about the date of Tolkāppiyam. Some scholars speculated that it belongs to the period of before Christ. It is undated but not outdated. Most of the Scholars tend to place it before Caṅkam literature. Recently, Kīḻaṭi excavation report was published by Archaeological Department of Tamilnadu. It reveals that “the sample collected at the depth of 353cm goes back to end of the 6th century BCE. As there is a considerable deposit below the dated layer and also above the layers, the Kīḻaṭi cultural deposit could be safely dated between 6th century BCE and 1st century CE” (2019:8). It is a turning point in the cultural historiography of Caṅkam age. Hence, Tolkāppiyam probably dates before the Caṅkam age.

            Tolkāppiyam as such, seems to be a synthesis of all that had been practiced and recorded by the best of his predecessors, as well as the contemporary linguistic realities. It is necessary to have a look into the structure and organization of this magnum opus in Tamil. It contains 1602 verses in the formulaic structure called nūṟpā, which are extremely condensed statements of norms and conventions (2001: ix). It is divided into three major sections.

1.      Phonological aspects of language (483 verses)

2.      Morphological aspect of language (463 verses)

3.      Glossed as content, deals with the formulation and study of the principles of literary production (656 verses)

Each section is comprised of nine chapters, marked as it is by a perfect symmetry of organization. Particularly, in the third section, poruḷatikāram, treat of the materials and structuring of akam and puṟam literature, the science of creativity, theories of literature, theory of emotions, prosody, imagery, rhetoric, sociology and psychology of literature, etc. First chapter of poruḷatikāram is akattiṇaiyiyal. This chapter deals with the general theory of akam theme. Akam stands for the intimate love relationship between a man and a woman. Tolkāppiyam describes the relationship with reference of place and time too.

Aristotle’s Physics

            Aristotle (384 – 322 BCE) is one of the greatest philosophers of ancient Greek. He made pioneering contributions to all fields of philosophy and science. He invented the field of formal logic. He wrote extensively on a wide variety of subjects including logic, metaphysics, ethics and politics. We do not know their order of compositions.

            The word “Physics” is a transliteration of Aristotle’s Greek and not a translation. The proper translation would be “On Nature”. Aristotle’s many writings fall under this general heading “On Nature”. Although the physics is Aristotle’s prologue to natural science, he is writing here as philosopher, and not as we would expect a scientist to write. Aristotle’s physics initiates that tradition, and that its contribution remained a dominant influence until the 17th century when Galileo and others founded the modern physics. Aristotle focuses the problem and finds the philosophical solution. In this work, he discusses the concepts of nature.   The work is in eight books,

1.      The principles of nature

2.      The study of nature

3.      Change, infinity

4.      Place, void, time

5.      Change

6.      Continuity

7.      Various points about change

8.      The eternal and unchanging cause of all change

In this above work, the Book 4 “Place, void, time” speaks about the place and time. Place and time were divided as different chapters by later period editors.

Place and Time

Aristotle said that “if place is none of these three – form, matter, and some kind of unchanging extension over and above the extension of the displaced object” (2008:87). For instance, a vessel can move from place to place, but place cannot move as a vessel. However, the place of things is not the same as the world; their place is a part of the world, a limit, which is in contact with the movable body. And so earth is in water, water is in air, air is in fire, and fire is in the heavens.

Aristotle, in the Book 4, defined time as the number of changes with respect to before and after the place of an object as the innermost motionless boundary of which surrounds it. What is worth considering is the prevalent idea that time is variation and change. Now, the change of anything exists only in the thing that is being changed, or where that changing thing happens to be.

On applying the concept of place and time in Tolkāppiyam on Aristotle’s concept of place and time. Tolkāppiyam divide topography of Tamil land as five major divisions.

Kuṟiñci            - hills and its surrounding area

Mullai              - forest and its surrounding area

Marutam         - agricultural and its surrounding area

Neytal              - sea and its surrounding area

Pālai                - desert and its surrounding area

He develops the division of land as tiṇai concept which identifies three components, mutal, karu and uri in akam poem. Mutal and karu constitute the background while uri deals with the emotional aspect. 

Mutal - mutal or primary object is later defined as the description of land and time.

Karu - karu is the description of representative tokens of an assigned land at a particular time.

Uri - uri is the emotional manifestation of love pertaining to a particular division.

mutaleṉap paṭuvatu nilam poḻutu iraṇṭiṉ

iyalpeṉa moḻipa iyalpuṇarn tōrē

Mutal’ is the nature of the land type and time, say, those who know the nature of things. (akat.4) (2010:6). Nilam - it is the division of the earth; poḻutu – this denotes the time segment. From later nūṟpā it is evident that time is of two kinds – one based on the seasons of the year and the other based on the different periods of the day. The former is known as perumpoḻutu (larger time segment) and the latter as ciṟupoḻutu (smaller time segment) .

All of these are merged with human life as human emotions reflect on the land basis and time basis. In earlier Tamil civilzation, every major five land divisions had individual day and year time segments, based on emotional aspect uri.

Land

Day time segment (4 hours)

Year time segment (2months)

Love theme (Emotional aspect)

Kuṟiñci            -  hills and its surrounding area

Midnight

Cold winter, also dewy season

Union

Mullai              - forest and its surrounding area

Evening

Rainy season

Endurance of  wife in separation

Marutam         - agricultural and its surrounding area

Early dawn

(2am - 6am &  6am -10am)

All six season

Sulking

Neytal              - sea and its surrounding area

Sunset

All six seasons

 

Pining

Pālai                - desert and its surrounding area

Midday

Early summer, Late summer, later dewy  season

Separation

     

Conclusion

In the Greek civilization, many thinkers discussed the concept of place and time. Aristotle philosophically explicated time and place through his work “Physics”.   In Tamil, Tolkāppiyam also dealt with place and time through five divisions of land. In ancient Caṅkam literature like akam poems is based on the place itself, while place reveals emotional feelings and on the time. Hence, Tamil and Greek civilization attributes to both time and place. 

 

 

 

 

 

 

 

 

 

Notes and References

Gloria Sundaramathy. L & Indra Manuel, Tolkāppiyam - Poruḷatikāram. Thiruvananthapuram: International School of Dravidian Linguistics, 2010.

Kandasamy, S.N., Kirēkka Ilakkiyam Pakuti 1. Thanjavur: Tamil University, 2014.

Murugan, V., Tolkāppiyam in English. Chennai: Institute of Asian Studies, 2001.

Rajan K. (critical editor), KEELADI - An urban settlement of Sangam age on the banks of river Vaigai. Chennai: Department of Archaeology, 2019.

Robin Waterfield (Trans.), Aristotle Physics. New York: Oxford World’s Classics, 2008.