நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்

திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்


(பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரை. நூலின் பதிப்பாசிரியர்: தங்க. ஜெய்சக்திவேல் )


கட்டுரையாளர்:

த.க.தமிழ்பாரதன் 

முனைவர் பட்ட ஆய்வாளர்

சிறப்புநிலைத் தமிழ்த்துறை

ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம்

புதுதில்லி – 110067

asktotamil@gmail.com

 

1.1    முன்னுரை 

விடுதலைக்கு முன்பு சிதறுண்டு கிடந்த நிலப்பரப்பில் அனைத்துத் தரப்பு மக்களிடையே தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் முதன்மையாக விளங்கியது வானொலி. ஆங்கிலேயர் காலத்தில் முதன்மை ஊடகமாகத் திகழ்ந்த அகில இந்திய வானொலி 1936ஆம் ஆண்டு சூன் மாதம் 8ஆம் நாள் தொடங்கப்பெற்றது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலகட்டத்தில் 1939ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் நாள் அகில இந்திய வானொலி அயல்நாட்டு ஒலிபரப்பைத் தொடங்கியது. போர் குறித்த ஜெர்மனிய செய்திகளுக்கு மாற்றாகஆப்கானிஸ்தான்ஈரான் மற்றும் அரபு நாடுகளுக்கு புஸ்து(Pashto) மொழியில் செய்திகள் தில்லியிலிருந்து ஒலிபரப்பாகின. அதே காலகட்டத்தில் மலேசியாசிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழர்களுக்காகதமிழில் போர்ச் செய்திகள் ஒலிபரப்பாகின. 

1941 டிசம்பர் மாதம் ஜப்பான் உலகப் போரில் களம் கண்டபோது தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கான தென்கிழக்காசிய – கிழக்காசிய ஒலிபரப்பு தில்லியிலிருந்து தொடங்கப்பட்டன. மியான்மர், சிங்கப்பூர்,மலேசியாஇலங்கை உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் சிற்றலை அலைவரிசைகளில் ஒலிபரப்பான இந்தச் சேவையால் பயனடைந்தனர். இந்த அலைவரிசைகள் அவ்வப்போது மாற்றத்திற்குட்பட்டுள்ளன. பிற்காலத்தில்இந்தத் தென்கிழக்காசிய ஒலிபரப்புதூத்துக்குடி வானொலி நிலையம் வாயிலாக இலங்கைக்கு மத்திய அலைவரிசையில் ஒலிபரப்பானது. தென்கிழக்கு ஆசிய ஒலிபரப்பாகத் தொடங்கிதலைமுறைகளைக் கடந்து படிமலர்ச்சியுற்ற தமிழ்ப்பிரிவு 1994 ஏப்ரல் 1ஆம் நாளிலிருந்து திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம் எனும் பெயரில் ஒலிபரப்பானது. 

1.2    பங்காற்றியோர்

இரண்டாம் உலகப் போரின் போது போர்ச் செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்குவதற்காக ஒய்.ஜீ.பார்த்தசாரதிகிருஷ்ணஸ்ரீநிவாஸ்இரா. பத்மநாபன் உள்ளிட்ட கலைத்துறை ஆளுமைகள் பணியாற்றினர். 1943 சனவரியில் பி.வி. கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சி உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். இதே காலகட்டத்தில்உமாசந்திரன்பூர்ணம் விஸ்வநாதன்ஆர்.எஸ்.வெங்கடராமன் முதலானோரும் பணியில் சேர்ந்தனர். கூடுதல் தென்னிந்திய சேவையும் அக்காலகட்டத்தில் ஒலிபரப்பானது. 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்ததைக் காலை 05.35 செய்திகளில் ஆர். எஸ்.வெங்கட்ராமனும் காலை 07.15 செய்திகளில் பூர்ணம் விஸ்வநாதனும் வாசித்துள்ளனர்.

பிற்காலத்தில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கர்ளாகப் பொறுப்பாற்றிய அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் செய்தி வாசிப்பாளராகவும் பேராசிரியர் ஒளவை நடராசன் அறிவிப்பாளராகவும் தமது இளமைப் பருவத்தில் தில்லியிலிருந்த தமிழ் ஒலிபரப்புக்காகப் பங்காற்றியுள்ளனர். இசை விமர்சகர் சுப்புடுஎழுத்தாளர்கள் தி. ஜானகிராமன்மாயாவிகடுகு பி.எஸ். ரங்கநாதன்ஆனந்தம் கிருஷ்ணமூர்த்திபத்திரிக்கையாளர் ஏ.ஆர். இராஜாமணிநாடக-திரைப்பட நடிகர் பாரதி மணி உள்ளிட்டோர் 1970-80 காலகட்டங்களில் இந்தத் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் பங்களித்துள்ளனர். 

இந்தத் தமிழ் ஒலிபரப்பில் புகழ்பெற்ற அறிவிப்பாளர்களாகதர்மாம்பாள்பூர்ணர் விசுவநாதனின் சகோதரி லெட்சுமிஇராஜகோபால்பாலரமணிகனகம் முதலானோர் திகழ்ந்துள்ளனர். 1990களில் நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இருந்த சுப்ரா நடராஜன் பல்வேறு நிகழ்ச்சி மாற்றங்களைக் கொண்டு வந்தார். பின்னாட்களில் தமிழ் ஒலிபரப்பை மேம்படுத்தியதில் துணைத் தலைமை இயக்குநராகப் பதவி வகித்த ஏ.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பங்களிப்பும் முதன்மையானது. 

நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தில் ஊடகப்பிரிவில் பணியாற்றிய சாம்பசிவம் தில்லி ஒலிபரப்பில் தமிழ் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பஞ்சாபகேசன்இராமநாதன்விஜயம்சு. சமுத்திரம்செபஸ்டியன் ராபர்ட், சரோஜ் நாராயணசாமிவிமலா ஜெயராமன்எச். இராமகிருஷ்ணன்சிவராமன்இராஜாராம்கிருஷ்ணசாமி ஜான் சுந்தர், ஹேமா சத்தியமூர்த்திசாவித்திரிசபிதா குமார் உள்ளிட்டோர் உள்நாட்டு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான தமிழ்ச் சேவையில் செய்தி வாசிப்பாளர்களாக இருந்துள்ளனர். தமிழ்ச் செய்திப் பிரிவு 2016ஆம் ஆண்டு சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகுதிரைகடலாடி வரும் தமிழ் நாதத்தின் ஒலிபரப்புக்கான தமிழ்ச் செய்திகள்சென்னையிலிருந்து அஞ்சலாகின. 

1.3    நிகழ்ச்சிகளும் நேர்காணல்களும் 

தில்லியிலே உள்ள துறைசார் ஆளுமைகளின் அறிவைத் தமிழ்கூறு நல்லுலகத்துக்குப் பகிர்ந்தளித்த பெருமை திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்துக்கு உண்டு. சான்றாகஅறிவியல் அரும்புகள் எனும் நிகழ்ச்சியை மத்திய அரசின் அறிவியல் பத்திரிக்கையின் ஆசிரியர் முனைவர் எஸ். சிவகாமசுந்தரிவிஞ்ஞான் பிரசார் அமைப்பைச் சேர்ந்த அறிவியலாளர் முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன் முதலானோர் வழங்கியுள்ளனர். நாட்டின் தலைநகரான தில்லியிலிருந்து தமிழ் ஒலிபரப்பு என்பதால் முதன்மையான ஆளுமைகள்,கலைஞர்கள்படைப்பாளர்கள்திரைபிரபலங்கள் எனப் பெருவாரியானோர் நேர்முகம் அளித்துள்ளனர். 

·       மேனாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் 

·       மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் 

·       மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் 

·       மேனாள் முதலமைச்சர் மு. கருணாநிதி 

·       நடிகர் சிவக்குமார்

·       நடிகர் கமலஹாசன் 

·       நடிகர் விவேக் 

·       இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் 

·       கவிஞர் வாலி 

·       கவிப்பேரரசு வைரமுத்து 

·       இலக்கியவாதி வலம்புரி ஜான் 

முதலான பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்கள் ஒலிபரப்பில் இடம்பெற்றுள்ளன. சந்திப்பில் இன்றுஎன்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த நேர்முக நிகழ்ச்சிகள் திரைகடலாடி வரும் தமிழ் நாதத்திற்குச் சிறப்பு சேர்த்துள்ளன. சிறந்த படைப்பாளிகளான ஆர். கே. நாராயணனை தி.ஜானகிராமனும்சுந்தர ராமசாமியை வெங்கட்சாமிநாதனும்நீல பத்மநாபனை சிற்பி பாலசுப்பிரமணியமும் நேர்முகம் கண்டுள்ளனர். ஆண்டுதோறும் சாகித்திய அகாதமி விருது விழா தில்லியில் உள்ள சாகித்திய அகாதமி வளாகத்தில் பிப்ரவரி-மார்ச் மாதம் நடைபெறும். தமிழ் மொழிக்காக சாகித்திய அகாதமி விருதுபெறும் படைப்பாளரிடம் நீண்ட நேர்காணல் செய்யப்பெற்று ஒலிபரப்பப்பெறும். இவ்வாறு திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தின் ஒலிக்களஞ்சியத்தில் பல முதன்மையான ஆவணப்படுத்தங்கள் உள்ளன. 2004ஆம் ஆண்டு நடிகர் விக்ரமுடன் நடைபெற்ற நேர்காணல் மிகவும் தனித்துவமானது. தில்லி வாழ் நேயர்கள் நேரடியாகப் பங்குபெற்று ஒருமணி நேரத்திற்கு அவருடன் கலந்துரையாடினர். மக்களுடனான பொதுக் கலந்துரையாடலான அஃது அப்படியே முழுமையும் ஒலிபரப்பானது. 

திரைகடலாடி வரும் தமிழ்நாதத்திற்கு முன்பு நாடகங்கள் தில்லியிலேயே தயாரிக்கப்பட்டன. பின்னர்,தமிழ்நாட்டிலுள்ள வானொலி நிலையங்களில் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் மறுஒலிபரப்பு செய்யப்பட்டன. தில்லியிலிருந்து நான்கு ஆண்டுகளாகச் சனிக்கிழமைதோறும், புகழ்பெற்ற கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கேற்ப குரலை மாற்றி மாற்றி குருமூர்த்தி நடித்து வழங்கியது நேயர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.

1.4    பகுதிநேர மொழிபெயர்ப்பாளர்கள்/அறிவிப்பாளர்கள் 

இந்த ஒலிபரப்பில் பகுதிநேர மொழிபெயர்ப்பாளர்/அறிவிப்பாளர்களாக மத்திய அரசுத் துறைகளில் உயர் பதவி வகித்தவர்களும் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்காற்றியுள்ளனர். அன்றாடம் ஒலிபரப்பாகும் ஆய்வுரையில் இன்று’ எனும் பகுதியில் முந்தைய நாள் ஆங்கில ஒலிபரப்பில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இடம்பெறும். இக்கட்டுரையானதுநாட்டின் நிலைஅரசின் செயல்பாடுகள்வெளியுறவுக் கொள்கைகள்பிரதமரின் திட்டங்கள்மூலோபாயக் கொள்கைகள் குறித்ததாகவே அமையும். இதனால்அறிவிப்பாளரே மொழிபெயர்ப்பாளராகவும் செயலாற்றுவர். 2015இல் இருந்து 2021 வரை தமிழாக்கம் செய்த இந்த ஆய்வுரைகள் அகில இந்திய வானொலியின் வெளிநாட்டுச் சேவைப் பிரிவின் இணையதளத்தில் உள்ள திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்திற்கான இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டன. 



1.5    அறிவிப்பு 

திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதமானது காலை 05.30 மணிமுதல் 06.15 வரை ஒலிபரப்பானது. 05.50மற்றும் 06.00 மணி நிகழ்ச்சிகள் கிழமைகளுக்கேற்ப ஒலிபரப்புக்குரியனவாக இருந்தன. நிகழ்ச்சி நிரல் அவ்வப்போது மாற்றத்திற்கு உள்ளானது. கடைசிக் காலகட்டத்தில்  திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தின் நிகழ்ச்சி நிரல் வருமாறு: 

 

·       05.30 - வந்தே மாதரம் திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம் தொடக்கம் -நிகழ்ச்சிக் குறிப்புகள் 

·       05.31 - மங்கல இசை 

·       05.35 - தமிழ்ச்செய்திகள் 

·       05.45 - ஆய்வுரையில் இன்று 

·       05.50 வேறுபட்ட நிகழ்ச்சிகள் 

· 06.00 - நேயர் விருப்பம்/திரையிசை/பக்திச்சரம்/உங்களுக்காக/இசையருவி 

·       06.14 - குறளமுதம்/நிறைவுக் குறிப்பு 

·       06.15 - நிறைவு 

கிழமைதோறும் 05.50 மணி நிகழ்ச்சிகள் 

● ஞாயிறு    – நாளேடுகள் நவில்வன  செய்தி ஏடுகளின் கருத்துரை 

● திங்கள்           - அறிவியல் அரும்புகள் 

● செவ்வாய்       - அங்கும் இங்கும் 

● புதன்              - சந்திப்பில் இன்று 

● வியாழன்  - இன்றைய இந்தியா/பாரதஉலா/இலக்கியஉலகம்/தில்லியிலிருந்து

● வெள்ளி          - வான் அஞ்சல்நேயர் நெஞ்சம் 

● சனி                - நாடகம்/சிறுகதை /மெல்லிசை கிழமைதோறும் 

 

06.00 மணி நிகழ்ச்சிகள் 

● ஞாயிறு       - நேயர் விருப்பம் 

● திங்கள்        - திரையிசை 

● செவ்வாய்   - பக்திஇசை 

● புதன்           - திரையிசைத் தொகுப்பு 

● வியாழன்    - உங்களுக்காக 

● வெள்ளி      - இசை யருவி/கர்நார் டக இசை 

● சனி             - (05.50 நிகழ்ச்சி தொடரும்) 

1.6    முடிவுரை 

புதுதில்லி சன்சத் மார்க்கில் உள்ள ஆகாசவாணி பவனிலிருந்து அகில இந்திய வானொலியின் வெளிநாட்டுச் சேவையில் 2020ஆம் ஆண்டு (கொரோனா காலம்) வரை 27 மொழிகளில் ஒலிபரப்புச் சேவை இருந்தது. அதில் 16 அயல் மொழிகளும் 11 இந்திய மொழிகளும் இடம்பெற்றிருந்தன. திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தின் கடைசிப் பொறுப்பாளராக மூத்த மொழிபெயர்ப்பாளரும் அறிவிப்பாளருமான பி.குருமூர்த்தி பணியாற்றினார். கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 2020 மார்ச் 23ஆம் நாளுடன் திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம் தம் ஒலிபரப்பை நிறுத்திக்கொண்டது. கடைசி ஒலிபரப்பை மேற்கொண்டவர் ஸ்ரீப்ரியா சம்பத்குமார். அதன்பிறகுதிரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் மொழிபெயர்ப்புப் பணி மட்டும் தொடர்ந்தது. வெளியுறவுஉள்துறைபன்னாட்டு அரசியல் தொடர்பாகத் தமிழாக்கம் செய்யப்பெற்ற கட்டுரைகள் அகில இந்திய வானொலி இணையதளத்தில் திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம் இணையப் பக்கத்தில் வெளியானது. தற்போது அந்தத் தளமும் பயன்பாட்டில் இல்லை.

நேர்காணலொன்றில் மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலு தென்கிழக்காசிய ஒலிபரப்பைக் கேட்டுத் தாம் தமிழ் கற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுபோல் எண்ணற்ற தமிழர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம். எண் பதிற்றாண்டுகளுக்கும் மேலாகக் காலத்தைக் கடந்து எல்லைகளைக் கடந்து தமிழர்களை இணைத்த, தில்லித் தமிழ் ஒலிபரப்புச் சேவை இன்று ஒலிக்களஞ்சியமாக மட்டுமே எஞ்சியுள்ளது.

 

தரவு உதவி : திரு பி. குருமூர்த்திமேனாள் பொறுப்பாளர்திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்புதுதில்லி. 


(எழுத ஊக்கப்படுத்திய பேரா. தங்க. ஜெய்சக்திவேல் அவர்களுக்கு நன்றி)


வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

தொல்காப்பியத்தில் உள்ள ‘காலம்’ எனும் சொற்களின் வகைமை அட்டவணை

 

 

காலப் பெயர் (பொழுது)

வினைத் தன்மை

கால அளவு

காலத் தன்மை

காலம்

மூவகைக் காலம்

கால (5முறை)

உயிர். 39.1

வினை. 10.2

 

 

 

 

செய். 1.6

வினை. 17.3

 

வினை. 22.9

காலத்தானும் (2முறை)

 

 

இடை. 33.2

 

 

 

இடை. 33.3

காலத்தின் (2முறை)

வேற். 20.3

 

 

வேற். மய. 27.6

 

 

காலத்து (16முறை)

 

 

 

எச். 18

எச். 56

வினை. 28.2

அகத். 44.19

வினை. 41.2

கள. 21.14

வினை. 42.3

கள. 22.1

வினை. 43.3

கள. 39.1

வினை. 47.1

கற். 5.8

 

கற். 9.23

கற். 9. 24

கற். 45.2

பொருளி. 11.1

காலத்தும் (2முறை)

 

 

 

 

 

வினை. 42.1

வினை. 42.1

காலம் (18முறை)

கிளவி. 58.1

வினை. 16.4

 

எழுத். 22.5

அகத். 39.5

வினை. 40.1

வினை. 16.7

கிளவி. 38.2

புறத். 35.18

வினை. 40.2

 

வேற். 9.1

புறத். 35.20

 

வேற். மயங். 29.2

பொருளி. 53.2

விளி. 34.3

பொருளி. 53.2

வினை. 30.2

 

இடை. 5.1

இடை. 6.1

காலம்-தாமே (1முறை)

 

 

 

 

 

வினை. 2

காலமும் (11முறை)

 

 

 

 

வினை. 35.1

வினை. 3.2

கள. 22.4

வினை. 41.1

கற். 3.2

வினை. 48.1

 

வினை. 49

எச். 31.2

எச். 41.2

எச். 41.3

புறத். 20.4

காலமொடு (5முறை)

 

 

 

 

 

வினை. 1.2

வினை. 4.2

இடை. 2.3

எச். 41.2

எச். 41.3

தொல்காப்பியத்தில் உள்ள ‘காலம்’ எனும் சொற்களின் வகைமை அட்டவணை