நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

வானத்தில் எழுதிய முதலெழுத்து ....



"வானத்தில் எழுதிய முதலெழுத்து" 

சாதாரண வாகனமாக
சரியாய் திரும்பி,
திடீரென கிளம்பி,
காதில் அடைத்து,

காற்றில் தவழ்ந்து,
வானில் மிதந்து,
வையத்தை விட்டு
பிரிகிற வேலையில்,
மனமெல்லாம் மகிழ்ச்சியில்லை.

இதுவரை ஏதோ
ஒரு வகையில் கால்கள் -
பூமியில் ஊன்றியே இருந்தது.

முதல் முறை
பாதத்திற்கும் பூமிப்பந்திற்கும்
தொடர்பு அறுகிறது.

மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல
30, 45 கோணம் சுழல
காதுகளில் காற்றடைப்பு
நிகழ்கிறது.

இருட்டடிப்பு செய்யப்பட்ட
என் போன்றவர்களின்
விமான ஆசையில்,
முதல் முறை
பிரவேசித்த போது
ஒரு துளி கூட
உணர்வில்லை.

நம்மூர் டவுன் பஸ்,
எக்ஸ்பிரஸ் டிரெயின் -
போன்றவைகளைப் போல
உதறல் மட்டுமில்லை.

மற்றபடி ஆங்காங்கே,
விற்கும் சம்சா - பீட்சா ஆனது.
காபி - கேபசினோ ஆனது.

ஆயிரம் விதி விதித்தும்
அழகு கண்களை
பணிப்பெண்களாக
அனுப்பி

பணம் பறித்தார்கள்,.

இளித்த முகத்துக்காக
இளைக்காத பலரும்
சலிக்காமல்
வேண்டாமென்றனர்.

அந்த வகையில்
நானும் ஒருவன்.
ஒரு வகையில்
அதுவும் சேமிப்பு.

தண்ணி மட்டும் இனாம்.
அதுவும் மினரல் தண்ணீர்
மட்டும் என்பதால்.

தண்ணி என்பதில்
பலரும் ஏமாறவில்லை.
ஏனெனில்,  

சென்றவர்களில் பலரும்
தமிழ்க் குடிமகனில்லை.
தோராயமாக 30,000 அடி
என வந்த அறிவிப்பில்
அடி வயிறு கலங்கவில்லை.


எனில், நான் ஏற்கனவே
சனிபெயர்ச்சி
அன்று சனிக்கு 
சென்று வந்திருக்கிறேன்
என்ற திமிர்.

கனவிலே, காதலிலே
நிலவில் கால் பதிக்கும்
எனக்கும் - இது
பழக்கப்பட்ட
சைக்கிள் பயணமாகவே
தென்பட்டது.


எப்போதும் போல்
ஒரு மணி நேரத்தில்
பயணிகள் ஓய்ந்து விட
என் ஆட்டம் ஆரம்பித்தது.

Flight Mode இல்லாத என் பேசியில்
Switch Off செய்ய முடியாத
என் மனநிலையில்
முகநூலும் முகம் காட்டவில்லை
காரணம் பேசியில் டவரில்லை.

வேண்டாம் என நினைத்தாலும்,
சரி என, 
ஆதிப் பயன்பாடு
ஆரம்பமானது.

வந்தது தூக்கமில்ல்லை.
எப்போதும் போல் காதில்,
ஏர்போன் மாட்டி
“மாங்குயிலே பூங்குயிலே”
கேட்கையில்தான்
மனசுக்குள் மகிழ்வு.

* மாங்குயிலே  

*மலர்ந்தும் மலராது
*மூன்றாம் பிறை
அணிவகுத்த
வகுத்த பாடலால்
கண்ணயர்ந்தன.

விமான சேவை
பலருக்கு Call Taxi
போன்றது.

சிலருக்கு அமரர் ஊர்தி
போன்றது.

சிறிது நேரம் கழிந்தவுடன்,
வேடிக்கை பார்க்க
விடுத்த விண்ணப்பம்
மேல் முறையீடு இன்றி
ஒப்புதல் ஆனதால்,
சன்னல் இருக்கை
சாய்வில் இடம் கிடைத்தது.

அநேகமாய் நாக்பூர் இருக்கும்,
மேகக் கூட்டமெல்லாம்
மின்மினிப் பூச்சாய்
ஒளிர்ந்தனைய,
ஒற்றை பாம்பாய் ஓங்கி நீள்கிறது
ஏதோ ஒரு நதி.

மீதி சிறிது ஓய்வுக்குப் பின்,

.
.
.


கூகிள் சர்ச்சில் காணப்படும்
நில வரைபடம்
நிஜமானதென்பதையும்
காண முடிந்தது.


யாருக்கும் தெரியாமல்
நானடித்த கண்ணிற்கு
வெயிலில் வெள்ளை கண்சிமிட்டி
அடித்தது ரேடார்.


வழக்கம் போல் வண்டிகளில்
சாய்ந்து வேடிக்கை பார்க்கையில்,


”வலைந்த கண்ணாடி

உடைந்து போய்
காற்று உள் நுழைந்து
காற்றழுத்தம் கருவாகி,
நிழற்கதவை துளைத்து,
காதினைக் கண்ணாடியை
விட்டுக் எடுக்கச் செய்தது
வந்த கனவு”.

ரயில் எஞ்சின் சப்தம் போய்
தொடர் சப்தத்தில்
முழு ஒலியில்
பேசியின் பாடலும்
பாழடைந்து சீரடைந்தது.

மேகம் மீது கை வைத்த வானம் !
அண்ணாந்து பார்க்கையில்
அழகாய் இருந்தது.

நானெப்போது இப்படியாவது ?

தில்லி வந்து முடிப்பதற்குள்
முதற் பாகம் முடித்து விட்டேன்.

கண் அயர்ந்து
மறுபடி எழுதுகிறேன்,



வான்வெளியில் தில்லிக்கு முதன் முதலாய் பயணித்த போது எழுதியவை

02.04.2015
த.க.தமிழ் பாரதன்