நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 15 மார்ச், 2018

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நாம் ஏன் படிக்க வேண்டும்...!

பிளஸ் 2 தேர்வுகள் நடந்துகொண்டிருக்கஒருபுறம் வெயில் அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டது.  11ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு என களைகட்டத் தொடங்கி விட்டன பொதுத்தேர்வுகள். மே மாத துவக்கத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் எல்லாம் வெளியிடப்பட்டு. அதற்கடுத்து தங்கள் வாழ்வை நிர்மாணிக்கப்போகிற படிப்பைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

பிள்ளைகள் அடுத்த என்ன படிக்கலாம் என பெற்றோர்களும், தான் என்ன படிக்க வேண்டும் என்பதை பிள்ளைகளும் இணையத்தையும்,சுற்றத்தாரையும் நாடித் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த கல்லூரி சிறந்தது, அந்த கல்வி நிறுவனம் சூப்பர்... இங்கே படித்தால் உடனே வேலை கிடைக்கும், அங்கு படித்தால் எல்லோரும் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகலாம்...”' என இப்போதிருந்தே ஊடகங்களில் விளம்பரங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, மாணவர்களிடையே எதை தேர்ந்தெடுப்பது என்பதில் அதிக குழப்பம் நிலவுகிறது.  

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும்,
 வழக்கம்போல் அதிகப்படியான நபர்களின் விருப்பம் டாக்டர், என்ஜினியர் கோர்ஸ்கள்தான். ஆனால், இவற்றையும் தாண்டி பட்டப்படிப்பு என ஒன்று இருக்கிறது? டாக்டர், இன்ஜினியர் தாண்டி கலை மற்றும் அறிவியல் துறைகளில் படிப்பதற்கும் இப்போது மவுசு கூடி வருகிறது.

கலை மற்றும் அறிவியல் துறைகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு சரியான இடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (Central University of TamilNadu).
  

தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகம் 

              மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 42 மத்திய பல்கலை கழகங்கள் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT போன்ற முக்கிய கல்விநிறுவனங்கள் வரிசையில் மத்திய பல்கலைகழகமும் இடம் பெறுகிறது.  இதில் படித்து நாம் பெறுகிற பட்டம் என்பது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

       அத்தகைய சிறப்புரு பல்கலைகழகம் தமிழகத்தில் அமைந்திருப்பது பலரும் அறியாததாக இருப்பதுதான் அறியாமையின் உச்சம். ஏனெனில், தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது மக்கள் கல்வியில் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிற காரணத்தினால்.   மற்ற மாநில மாணவர்கள் அதிகம் படித்தாலும் அவர்களோடு போட்டி போட்டு படிக்கும் திறன் படைத்த தமிழ் மாணவர்கள் இதை பற்றி அறியாமலே பல்வேறு வகையில் தங்கள் வட்டத்தை சுருக்கிக் கொள்கின்றனர் எனலாம்.

       விவசாயப் பின்புலம் கொண்ட, கல்வியில் பின் தங்கிய
 திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடியது தான் இந்த மத்தியபல்கலைக்கழகம் (CUTN - Central University of Tamil Nadu ).  திருவாரூருக்கு செல்லக் கூடிய மயிலாடுதுறை சாலை, கும்பகோணம் சாலை இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் வெட்டாறு ஆற்றாங்கரையில் அமைந்திருக்கிறது இந்தப் பல்கலைக்கழகம்.

திருவாரூர் மாவட்டத்தில் நீலக்குடி, நாகக்குடி எனும் இரு கிராமத்தில் 516 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது சியுடிஎன்.  உயர் தர வடிவமைப்பிலான கட்டடங்கள்,  பல்கலைக்கழகமென அடையாளம் காட்டுகின்றன.

சுற்று வட்டாரத்தில் இக்கட்டிட அமைப்பு அதிகம் காணப்படவில்லை. பல்கலைக்கழக நுழைவு வாயில் தாண்டி நேரே உள்ளே சென்றால், அங்கே பந்து நிற்கிறது நிர்வாக அலுவலகம். அதை சூழ்ந்து நிற்கும் கட்டடங்கள் என்ன? அங்கே என்ன படிக்கலாம்? அதனால் என்ன வாய்ப்புகள் கிடைக்கிறது?


தமிழ்நாட்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் மிகமுக்கியமானது.இந்தப் பல்கலைக்கழகத்தில் பிளஸ் டூ தேர்வு  எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கவும், தற்போது இளநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கவும் விண்ணப்பிக்கலாம். 

பத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் சேர்ந்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பொது நுழைவுத் தேர்வினை(CUCET) நடத்துவதால் நுழைவுத் தேர்வுக்குப் பின்பு கலந்தாய்வு நடைபெறும்.
பல்கலைக்கழக வாழ்க்கை

பல்கலைகழகத்தில் ஹாஸ்டல் வசதி உள்ளது.  இதில் இரண்டு பேருக்கு ஒரு அறை எனும் விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வெந்நீர், குளிர்நீர் என தண்ணீர் கிடைக்கிறது.  உணவுக்கு தட்டுப்பாடு இல்லை.  ஹாஸ்டலில் தங்குபவர்களுக்கு மெஸ் தனியாக வைக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் வாசிகளுக்கு உணவுக்குத் தான் கொஞ்சம் செலவாகிறது. முனைவர் பாடம் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு தனித் தனியாக குடியிருப்பு வீடுகளே ஒதுக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்தில் வைபை இணைய வசதி
  தரப்பட்டுள்ளது. பல்கலை முழுமையும் நவீன அறைகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் வகுப்பறை முறையும் பின்பற்றப்படுகிறது. அறிவியல் ஆய்வகங்கள் வசதிகளுடன் தரப்பட்டுள்ளன. நூலகமும் இயங்கி வருகிறது.


ஏதேனும் ஒரு நிகழ்வு பல்கலை வளாகத்தினுள் நடந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. 'எலெக்டிவ்' எனும் துணைப் பாடங்களை தானே தேர்ந்தெடுக்கும் முறையும் இங்கு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது வரப்பிரசாதம் எனலாம்.

பல்கலைகழகம் நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்குவதால் ஏராளமான வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இங்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பெறும் செம்மொழி தமிழ் எம் ஏ படிப்பிற்கு மாதாமாதம் மூன்றாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பெறுகிறது. பிற உதவித் தொகைகளும் கிடைக்க வழிவகை இருக்கிறது.


ஒவ்வொரு துறைகளிலும்
 கருத்தரங்கம், செமினார் போன்றவை அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல மாநிலத்து மாணவர்களும் இங்கு படிப்பதால் கலாச்சார ஒற்றுமை மேம்பட வாய்ப்புள்ளது. பயிற்று மொழி ஆங்கிலமாக உள்ளது.


அகில இந்திய அளவில் நிகழும் மாணவர்களுக்கானப் பொது
 நுழைவுத் தேர்வில் (CUCET) தேர்வாகிற நபர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதில் தேர்வாகிற நபர்கள் இங்கு படிக்க தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.




 
என்னென்ன படிப்புகள்

இங்கு பிளஸ் டூ  முடித்த மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள்
·           வேதியியல் (Chemistry 5 year),
·         உயிரி அறிவியல் (Life Sciences 5 year),
·         கணிதம் (Maths5 year),
·         இயற்பியல் (Physics5 year) 
·         பொருளியல் (Economics 5 year),
·         இசை (BPA Music - 4 year)
·         ஒருங்கிணைந்த கணிதம் மற்றும் கல்வியியல் (inte. B.Sc B.Ed - 4 year)
      
இளநிலை முடித்து இரண்டு ஆண்டு முதுநிலை அறிவியல் படிக்க

·           நூலகக் கல்வி (library and information science)
·           வணிகவியல் (commerce)
·           அப்லைடு உளவியல் (applied psychology)
·           வேதியியல் (Chemistry),
·           கணினி அறிவியல் (Computer Sciences),
·           நோயியல் மற்றும் பொது சுகாதாரம் (Epidemiology & Public Health),
·           புவியியல் (geography)
·           மைக்ரோபயாலஜி (microbiology)
·           எம்.டெக் பருப்பொருள் அறிவியல் (material sceince)

முதுநிலை கலைப் பிரிவில்
·           செவ்வியல் தமிழ் (classical tamil)
·           பொருளாதாரம் (economics)        
·           ஆங்கிலம் (English)
·           ஹிந்தி (hinid)
·           வரலாறு (history)
·           மீடியா & கம்யூனிகேஷன் (mass communication)
·           வணிக மேலாண்மை (MBA)
·           சமூகப்பணிகள் (social work)
Mphil , Phd உள்ள துறைகள்
·           அப்லைடு உளவியல் – applied psycology
·           வேதியியல் - chemistry
·           வணிகவியல் - commerce
·           கணினி அறிவியல் – computer science
·           ஆங்கிலம் - english
·           புவியியல் - geography
·           நூலக நிர்வாகம் – library information science
·           வணிக மேலாண்மை - MBA
·           மீடியாமாஸ் கம்யூனிகேஷன் – mass communication
·           கணிதம் - maths
·           இசை - music
·           இயற்பியல் - physics
·           சமூகப்பணிகள் – social work
·           தமிழ் - tamil
பி.எச் டி மட்டும் உள்ள துறைகள்
·           பொருளாதாரம் - economics
·           கல்வியியல் - education
·           நோயியல் மற்றும் பொது சுகாதாரம் - Epidemiology & Public Health
·           ஹிந்தி - hindi
·           உயிரி அறிவியல் - lifescience
·           பருப்பொருள் அறிவியல் – material science
·           நுண்ணுயிரியல் – micro biology


பொருளாதாரப் படிப்பில் நாட்டின் முன்னணியில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து பொருளியல் -
பொது (Economics - General), 
நிதி பொருளியல் (Financial Economics), 
காப்பீட்டுப் பொருளியல் (Actuarial Economics), 
சுற்றுச்சூழல் சார்ந்த பொருளியல் (Environmental Economics), 
பயன்பாட்டு நிதி பகுப்பாய்வு (Applied Quantitative Finance) 

போன்ற பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.மேலும், செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து முதுகலை தமிழ் பட்டப்படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது


எப்படி விண்ணப்பிப்பது

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர பத்து மத்திய பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து நடத்தப்படும் நுழைவுத் தேர்வினை எழுதி இருக்க வேண்டும்.  ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது நீங்கள் கொடுக்கும் அலைபேசி எண்ணுக்கு, பதிவு செய்த விவரங்கள் கிடைத்துவிடும்.

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள் : 19.02.2018
விண்ணப்பிக்க இறுதி நாள் : 02.04.2018
ஹால்டிக்கட் பதிவேற்றப்படும் நாள் : 13.04.2018
தேர்வு நிகழ வுள்ள நாட்கள் : 28&29.04.2018
விடைகள் பதிவேற்றப்படும் நாள் : 30.04.2018
முடிவுகள் வெளியாகும் நாள் : 25.05.2018

மற்ற மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க இயலும்.  மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள நல்ல இது வாய்ப்பாக அமையும்.


மத்திய பல்கலை நுழைவுக்கான இணையதளம்
 : http://cutn.ac.in/ ., http://admissions.cutn.ac.in/
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க : https://www.cucetexam.in/

FOR MORE DETAILS





syllabus https://cucetexam.in/Document/UGSyllabus.pdf


Paper Pattern
CUCET 2018 Paper Pattern:-
All Question Papers will be MCQ based consisting of: -
(i) Part A : English Language, general awareness, mathematical aptitude and analytical skills – comprising of 25 MCQs.
(ii) Part B: Domain Knowledge – comprising of 75 MCQs. This part may consist of one/two/three or more sections. Each section can have 25 or more questions. A candidate is required to answer a set of ‘X’ sections (75 questions) as specified on the front cover of the Test Question Booklet. However, he must ensure that he fills right circles in the OMR Sheet corresponding to the question numbers attended.
(iii) For example, Part B of Entrance Test-Paper (eg. UGQP01) shall consist of four sections i.e. Physics, Chemistry, Mathematics and Biology comprising 25 questions each. A candidate shall be required to attempt any three sections with combination of either PCM or PCB. While choosing the combination the candidate must ensure that he/she has appeared in respective subjects at 10+2 or Pre-board or equivalent qualifying exam.
(iv) If an Entrance Test-paper contents X number of sections and a candidate is required to answer Y number of section but if a candidate attempt all ‘X’ sections then best of ‘X’ sections as per instructions on the question booklet will be considered for preparation of Merit list.
(v) For Admission to some Integrated Courses/B.Voc./MBA/MCA/LLB or any other general course(s), only one paper comprising of 100 MCQs covering English language, reasoning, data interpretations/ numerical ability, general awareness and analytical skills will be held.
(vi) The candidate will have to choose one correct answer and mark on OMR Sheet. However if a candidate marks multiple entries in the OMR Sheet for particular question(s), it will be treated as wrong answer with negative marking.
(vii) Each paper will be only of Two Hours Duration.
(Viii) There will be negative marking in CUCET-2018. Each correct answer will carry 01 mark and for eachwrong answer, 0.25 mark will be deducted. Questions not attempted will not be assessed and hence will not be considered for preparing final merit list.

த.க.தமிழ்பாரதன்
படங்கள் : க. சதீஷ்குமார்