நடிகர் விஜய் வென்றதும், வெல்ல வேண்டியதும்…
#பிறந்தநாள்_பதிவு #விஜய் #நடிகர்
விஜய் வெற்றி பெற்ற பயணம்
நடிகர் விஜய்யின் கரியரை கவனித்திருக்கிறீர்களா? கடந்த 20 வருடங்களாக விஜயின் கரியரை பார்த்ததில் ஒரு விஷயத்தை கவனித்தேன். விஜய் பாக்ஸ் ஆபிஸீல் கில்லியாக இருக்க அவர் ஆன் ஸ்க்ரீன் மட்டுமே காரணமில்லை. பல புறக்காரணிகளும் உண்டு. அதில் முக்கியமானது திட்டமிடல்.
2000க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை இது
2000 – 3
2001 – 3
2002 – 3
2003 – 3
2004 – 3
2005 – 3 ( பந்தயமெல்லாம் சேர்க்கவில்லை)
இது விஜய் வேகமாக வளர்ந்த காலம். அவரது போட்டியாளராக அப்போது உருவாகியிருந்த அஜித், சூர்யா, விக்ரம் யாருக்குமே இந்த மாதிரி அமையவில்லை. அல்லது, அவர்கள் அபப்டி திட்டமிடவில்லை. ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு இது மிக அவசியம் என நினைக்கிறேன். ஆண்டுக்கு 2 படங்கள் தோல்வியானால் கூட ஒரு படம் காப்பாற்றிவிடும். அப்படித்தான் இந்தப் படிட்யலில் குஷி, ஃப்ரெந்ஸ், யூத், திருமலை, கில்லி, திருப்பாச்சி எல்லாம் விஜயை வளர்த்தன. சென்ற ஆண்டுக்கு கூட பைரவா என்ற தோல்வியை மெர்சல் மேஜிக் மறக்க வைத்ததை கவனிக்கலாம்.
mersal movie scene |
ஆனால், அதே சமயம் வளர்ந்த பிறகும் ஆண்டுக்கு மூன்று படங்கள் என்பது எதிர்பார்ப்பைக் குறைக்கலாம். 2007ம் ஆண்டு போக்கிரி, அழகிய தமிழ்மகன் என எண்ணிக்கையை இரண்டாக குறைத்தார். அது 2012 வரை தொடர்ந்தது. அதன் பின், இப்போது 2 ஆண்டுக்கு 3 படங்கள் என வெளிவருகின்றன. அதில் ஒன்று பைரவா , ஜில்லாவென இருக்கும். விஜயின் படங்கள் எல்லோருக்குமானவை. ஒரு வீட்டிலிருந்து 5 பேர் படம் பார்க்க சென்றால், எல்லோருக்கும் அந்தப் படத்தில் எதாவதொரு விஷயம் இருக்க வேண்டும். போலவே, ஏ,பி,சி என அனைத்து சென்டர்களுக்கும் படம் எடுக்க வேண்டும். வசூலில் சாதனை செய்த கஜினியை விட சண்டக்கோழிதான் பி&சி ஹிட். அந்த ஏரியாதான் கோலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட். அவர்களுக்காக அவ்வப்போது ஒரு படம் விஜய் நடித்தே ஆக வேண்டும்.
இது யதேச்சையாக நடந்ததல்ல. தெளிவான திட்டமிடல். இதுதான் விஜயை இன்று நெம்பர் ஒன் ஆக்கியிருக்கிறது என நினைக்கிறேன்.சினிமாவில் விஜய் எப்போதும் நேரம் தவறாத ஆள் என்பார்கள். அதை சில சமயம் நேரில்(விகடன் அவார்ட்ஸ்) பார்க்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இத்தனை மணிக்கு வருகிறேன் என்றால் வந்துவிடுவார். அதுமட்டுமில்லாமல், எல்லா விஷயங்களிலும் விஜயின் திட்டமிடல் பக்காவாக இருக்கும். அது அனிதாவை பார்க்க போவதென்றாலும் சரி, அழகிய தமிழ் மகன் பட ரிலீஸ் என்றாலும் சரி. பணம் விளையாடும் சினிமா துறையில் வசூல் சக்ர்வர்த்தியாக இருக்க ஆன் ஸ்க்ரீன் திறமை மட்டுமே போதாது. அது விஜய்க்கு நன்றாக தெரிந்திருக்கிறது. (மேற்கண்ட தரவு கார்க்கி பவா அண்ணன் முகநூலில் எழுதியது)
விஜய் வெல்ல வேண்டிய பயணம்
கிட்டத்தட்ட இடைநிலைக்கல்வி பயின்றுகொண்டிருந்த காலம் அது.
அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில்
வழிபாட்டுக்கூட்டம் தினமும் நடக்கும். அதில் செய்தி வாசிப்பதற்காக
தினசரி வீட்டிற்கு ஆஜராகும் தினமணியை வாசிப்பது வழக்கம்.
முதற்
பக்கத்தில் அச்சான செய்தி முதலாவதாக வரும். நடுவே உள்ளூர்ச் செய்திகள்.
நிறைவுச்செய்தியாக விளையாட்டுச்
செய்தி வரும். தினமணியின் நிறைவுப் பக்கத்தில் விநோதச்
செய்திகளும், முக்கியச்
செய்திகள் சிலவும் இடம் பெறும்.
அப்படித்தான்,
அப்போதைய மத்திய சுகாதாரத் துறை
அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் பல அறிவிக்கைகளைச் செய்திருந்தார்.
நடிகர்களை பலர் முன்மாதிரிகளாக
வைத்துக்கொள்கிற காரணத்தால், திரைப்படங்கள் தாக்கத்தை
தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனால், திரைப்படங்களில் புகைப்பிடிப்பது
போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டார்.
அப்போது நடிகர் விஜய் மட்டுமே,
என் படங்களில் புகைபிடிப்பது
போன்ற காட்சிகள் இடம்பெறாதென அறிவித்தார். அதனை பள்ளிக்கூடத்தில் வாசித்த
நினைவு இன்றுமுள்ளது. சில செய்திகள்
காலம் கடந்தாலும், மாறதவை,
மறையாதவை.
மறையக்கூடாதவை.
அந்த வயதில் தோன்றியதென்னவோ,
ஏன் பிற நடிகர்கள் இதற்கு
ஒத்துக்கொள்ளவில்லை? குடிப்பது
போன்ற காட்சிகள் மட்டும் சரியானதா என்ன? போன்ற கேள்விகளே. ஆனால்,
வளர வளர சினிமா என்பதன் வடிவமும்,
வர்த்தகமும் புலனாக ஆரம்பித்தது. நடிகர்கள் பேசுவதெல்லாம்
வசனங்கள்,
யாரோ எழுத,
எல்லாரிடத்திலும் கொண்டு
சேர்க்கும் கருவி நடிகர் என்பதெல்லாம் பின்னர் அறியலாயிற்று,.
anbumani ramadoss tweet about vijay's sarkaar movie first look |
21.06.2018 அன்று நடிகர் விஜய்யின் 62ஆவதுபடத்தின் ஃப்ர்ஸ்ட்லுக்
வெளிவந்ததும், பெரும்பான்மையோரின்
வாட்ஸப் நிலைத்தரவும் அப்படத்தால் நிறைந்திருந்தன. அவர் புகைபிடிப்பது போன்ற
காட்சியை விமர்சித்திருந்தனர் சிலர். புகைப்பிடிக்கமாட்டேன் என விஜய்
சொன்னதாக வெளிவந்த தினத்தந்தி செய்தியை பதிவேற்றியிருந்தனர்.
ஆனால், மெர்சல்
படத்தில் மேஜிசியன் விஜய்யை அடையாளப்படுத்த வேண்டுமென்று சிகரெட் புகைக்க
வைத்திருப்பார் இயக்குநர். கையில் உருண்டை
சுற்றும் காட்சியோடு நிறுத்தி இருந்தாலே, அவர் மருத்துவர் விஜய்யிடமிருந்து
தனித்து தெரிந்திருப்பார். (இதில் உள்ள சிக்கல் என்னவெனில், கையில் உருண்டை சுற்றும் காட்சி
பைரவா படத்தில் கையில் காசு சுற்றும் காட்சியின் நகல் என்று சொல்ல வாய்ப்பிருப்பதால்
சிகரெட் கூடுதல் தனித்துவமாக காட்டப்பட்டுள்ளது என்பது என் கணிப்பு)
கோகோ கோலா சோடா விளம்பரத்தில் நடித்தவரே, கத்தி படத்தில் ‘கோலா’ கம்பெனியை விமர்சித்திருப்பார். காலப்போக்கில்
தன் கடந்தகாலத்தை திரைமொழியால் மாற்றியிருக்கிறார் என்ற நேர்மறை வரவேற்பு இருந்தது.
ஆனால், இப்போது கடந்தகாலத்தில் கொடுத்த வாக்கை திரைமொழியால் மீறியிருக்கிறார் என்ற
எதிர்மறை வசைபாடல் இருக்கிறது.
ஜல்லிக்கட்டு களத்திலும், தூத்துக்குடிக்கு ஆறுதல் சொன்ன இரவிலும் அமைதியாக சமூக வெளியில் களமிறங்குவது பாராட்டுதற்குரியது. தனக்கான அடையாளங்களை வெள்ளித்திரையிலும், வெளித் திரையிலும்
ஏற்படுத்திவரும் நடிகர் விஜய் இவற்றை கவனத்தில் கொள்வது, மேலான வளர்ச்சிக்கு
உதவுமென்பது கண்கூடு.
https://youtu.be/iMNtkyn8dNQ