அன்புத் தோழிக்கு,
வணக்கம்.
தங்களை யாரென்று அறிந்திருக்கவில்லை.
தாங்கள் அனுப்பிவைத்த “ Happy Valantien's Day” வாழ்த்து அஞ்சல் கிடைத்தது
தங்கள் பரிசுகளுக்கு நன்றி
எனக்கு kit kat பிடிக்காது. ஆதலின், இனிமேல் இதை அனுப்ப வேண்டாம்.
அந்த ஜிகினாதாள் ஒட்டப்பட்ட குடுவைக்குள் Ray Ban சன்கிளாஸ் இருந்தது. நல்லது. பெருஞ்செலவு செய்துள்ளீர்கள் போலும்.
ஆனால், என்ன செய்வது! என்னிடம் ஏற்கெனவே இருக்கிறதே. இப்போது இதனை என்ன செய்வது? தேவையின்றி செலவு செய்யாதீர்கள்.
அவசர அவசரமாக பிப்.14ஆம் நாள் விரைவு அஞ்சலில் அனுப்பியுள்ளீர்கள். பொறுப்புணர்வே இல்லை. பிப். 15தான் எனக்குக் கிடைத்தது.
ஆமாம்! அது என்ன "Happy Valantien's Day". இப்படியான எழுத்துப்பிழைகளை இனிமேல் செய்யாதீர்கள். உங்கள் மீதான மதிப்பு குன்றிவிடுகிறது.
அஞ்சலுறையில் உள்ள விவரங்கள் வாயிலாக உங்களை யாரென்று அறியமுடியவில்லை. அது போலி முகவரி. அதன் உண்மைத்தன்மை குறித்து மெனக்கெட விரும்பவில்லை.
போலி முகவரியிலிருந்து அனுப்புபவை என்னை ஈர்ப்பதில்லை/ஈர்க்கப் போவதுமில்லை. இனிமேல் போலி அடையாளங்களுடன் எதையும் அனுப்பாதீர்கள்.
புரிதலுக்கு நன்றி.
இப்படிக்கு,
தங்களை யாரென்றறியாத
தக | 15.02.2022
பின்குறிப்பு :
போலி முகவரியிலிருந்து அனுப்பப்பெறும் அஞ்சல்களை இனிமேல் பெறப்போவதில்லை.