நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 8 பிப்ரவரி, 2018

காதல் இரண்டு எழுத்து..! (கதை?)



விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து.!


என நீண்டு ஒலித்த பாட்டு உள்ளுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்த போது அடித்துக் கொண்டிருந்த ரிங்க்டோன் ஆப் ஆனது. அப்ப தான் நான் நிகழ்காலத்திற்கே லேண்ட் ஆனாள். அது 'வாட்ஸ்அப் கால்' என்று ரிங்க்டோன் செட்டிங் செய்த அவளுக்குத் தான் தெரியும்.  இரவு பத்து மணிக்கு அதுவும் புது எண்ணிலிருந்து!  'யாரா இருக்கும்', என மனதுக்குள் சர்ச் செய்து கொண்டிருந்த அவளுடைய செல்போன் இறப்பதற்குத் தயார் நிலையில் இருந்தது.


4% தான் சார்ஜ் இருக்கு. இப்போது எதுவும் செய்ய முடியாது என்றுஅங்கிருந்த ஸ்விட்ச் போர்டில் அவசர அவசரமாக மின்தானம் பெற எத்தணித்தாள். ஒரு பத்து நிமிடம் ஆன பின் பதினைந்து தாண்டியிருந்தது செல்போனின் உடல்நலம்.! அந்த எண்ணை ஆவலாகப் பார்த்தாள். வாட்ஸ் அப்ல மியுட்சுவலா எந்தக் குழுவிலும் அந்த நம்பர் இல்லை. தன் கான்டாக்ட் லிஸ்ட்ல இல்லாத யாரோ ஒருத்தரின் போனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது அவள் நம்பர்.

யாரா இருக்கும்.?”  என்கிற சிந்தனைகளுடன் அந்த எண்ணிற்கு மறுபடியும் வாட்ஸ் அப் ல போன் செய்தாள். அவள் அழைப்பை ஏற்க எதிர்முனையில் அந்தக் கணம் வரை யாருமில்லை.  நீண்ட ஒலிப்பிற்குப் பிறகு அழைப்பைத் துண்டித்தாள்.  மீண்டும் அழைக்கலாம் என நினைத்த போது இரவு 10.30ஆகியிருந்ததை கடிகாரத்தின் பின்னிருந்த கவுலி அடித்த பல்லியால் அறிய முடிந்தது.

சரி காலையில் போன் செய்துகொள்வோம் என அசதியில் கண்ணயர்ந்த அவள் உறங்கிக் கொண்டிருக்குமிடம் இடம் கல்லூரி மகளிர் விடுதி.
கண்மூடி நெடுநேரம் கழித்துவந்த தூக்கத்தில் உலவியது கனவு!  “பையனா,பொண்ணாபொண்ணா இருந்தா யாரா இருக்கும்எந்த ஊரா இருக்கும்பையனா இருந்தா அவன் எப்படி இருப்பான்,  எதுக்காக போன் செய்திருக்க வேண்டும்" யாரெல்லாம் போன் செய்வதற்கான நிகழ்தகவு  உள்ளதென கபளீகரம் செய்துவிட்டது அதிகாலைக் கனவு.
சூரியன் வேலைக்கு வர காலை 08.13 மணி பூபாளமாக இருந்தது,    

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து. 

என்ற ரிங்டோன். இரவு 100% சார்ஜ் செய்யப்பட்ட போன்! அதே வாட்ஸ்அப் அழைப்பு!  அதே நம்பர்!   இப்போது பல் விளக்காமல் போன்ல பேசலாமா ? பேசவேண்டாமா ? என மனசுக்குள் மல்யுத்தம் நடத்தி அதன் பின் முடிவுக்கு வந்தாள்.


அதற்குள்ளே அழைப்பு துண்டிக்கப்பட்டது!

எதிர்ல இருந்தா தானே பேச ஒரு மாதிரி இருக்கும்(!?). போனில் பேசும் போது வெறும் ஒலி தானே போகப்போகுது. ஒலி தாங்கிய வளி பரிமாற்றம் ஆகாது என்பதால்மீண்டும் அந்த நம்பருக்கு போன் செய்ய அவள் எத்தணித்தாள்.,

விண்மீன் விதையில் நிலவாய் ..........

அடுத்த வரி இசைப்தற்குள்ளேயே,  “வணக்கம்” என்று சொல்லி போனை எடுத்துவிட்டாள்இங்கிலீஷ் பேசுனாலும் தமிழண்டா கொள்கையைப் பின்பற்றுபவள் அவள்!

60 dB டெசிபலில் இவள் சொன்ன வணக்கத்துக்கு பதில் சொல்ல, எதிர்முனையில் தயாராக இருந்தது குரல்...

40 டெசிபல் அளவில் “ஹாய்” என  ஒலித்தது அந்தக் குரல். இப்போது அவள் செவிகளில் தரவிறக்கம் செய்யப்பட்ட அந்தக்குரல் மனம் வரை  வாசம் புரிந்தது. 

மனம் உடனடியாக நினைவிற்கொள்ள முடியாத பழக்கப்பட்ட நெருக்கமான பழைய குரல் அது.

ஹலோ லைன்ல தான் இருக்கீங்கபேசுங்கஎன்று அந்த பழக்கப்பட்ட குரல் உத்தரவு பிறப்பித்தபோது,

ஹான்” சொல்லுங்க என்றாள்.,

நான் தான் க்ரிஷ் பேசுறேன்னு என்றதும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்து போனாள்.

உறைந்து அவள் போன இடம்!

எச்சில்களும் எச்சிளைகளும் குப்பைகளுடன் தாறுமாறாய் அலங்கரிக்கப்பட்ட குப்பைக்கூலம்.

அதற்குப் பக்கத்தில் 18௦ டிகிரி வளைந்த நிலையில் வாலிபத்திற்கு வாய்தா கொடுத்துக்கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம் சூழ்ந்திருந்தது.
"அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான தேசிய நாட்டுநலப்பணித்திட்ட முகாம், இது. இப்ப உத்திரப்பிரதேசத்தில் நடந்துட்டு இருக்குற இந்த கேம்ப்ல திடக்கழிவு மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்போறாங்க, அங்க தான் நாம இப்ப இருக்கோம்.

இந்தியா முழுக்கவுள்ள என்எஸ்எஸ் ஸ்டுடன்ட்ஸ்க்கான கேம்ப். தமிழ்நாட்டிலிருந்து செலக்ட் ஆன இரண்டு பேரில், க்ரிஷ் ஒரு ஸ்டுடென்ட்னா, நான் தான் அந்த ரெண்டாவது ஸ்டுடென்ட்.என அவள் செல்பி வீடியோ எடுத்து முடிக்கவும், க்ரிஷ்இன் கைகள் அவளது தலையைத் தட்டியிருந்தது.

உனக்குலாம் வேற வேலையே இல்லையா., எப்ப பாத்தாலும் போன்ல செல்பி எடுக்றதும், வீடியோ அப்லோட் பண்றதும் ஃபேஸ்புக் வாட்ஸப்னே இருக்கே, இன்னிக்கு மட்டும் 13ஆவது வீடியோ. வந்த வேலைய பாரு! இந்தக் குப்பைகளை அறிவியல் முறைப்படி சுத்தம் பண்ண வந்திருக்கோம், சரியா?
இன்னொரு முறை கேம்ப்ல செல்போனை எடுத்து போட்டோ எடுக்குறத பாத்தேன், கேம்ப் ஹெட் டிடம் கம்ப்ளைன்ட் செஞ்சுடுவேன்என்று சீரியசாக அதட்டி விட்டு குப்பைகளைச் சுத்தம் செய்தான்.

பூத்திருந்த அவள் முகம், முழுவதும் காய்த்து, கனிந்து, காய்ந்து போயிருந்தது. இப்போது அவளும் நேர்கோட்டிலிருந்து 18௦ டிகிரி கவிழத் தொடங்கினாள். குப்பைகளை முறைப்படி அப்புறப்படுத்துவதே அவர்களுக்கு முதல் பணியாகத் தரப்பட்டிருந்தது.

மொழி வாரி மாநிலப் பிரிவால், பிற மாநில மாணவர்களுக்கு க்ரிஷ் திட்டின எதுவும் காதுகளுக்குள் விழவில்லை. விழுந்தாலும் விளங்கிக்கொள்ளும் அளவுக்குப் பொருள் புரியாது.

மேலும்குப்பைக்கூலத்தை சுத்தம் செய்ய வந்த இடத்தில், செய்யும் சேவையைத் தவிர புற உலகச் சிந்தனைகளுக்கு எந்த மாணவர்களும் காது கொடுக்கவில்லை. ஒரு வழியா மாலையில் ப்ராக்டிகல் தியரி என முழுவதுமாக திடக்கழிவு மேலாண்மை வகுப்பும் முடிந்தது.

அன்றைய நாளின் நிறைவில் குப்பைக்கூலம் முழுவதும் சுத்தமாகி மறுசுழற்சியாயிருந்தது. இன்னும் அவளது மனம் மட்டும் சுத்தமாகவில்லை., க்ரிஷ் திட்டியதும், தலையில் தட்டியதும் டாக்டர் படிக்கும் அவளுக்குக் கொஞ்சம் தன்மானத்தைத் தராசில் ஏற்றிப் பார்த்திருந்தது.

முகாம் நிறைவடையும் நாளும் வந்தது. முகாமின் நிறைவு நாளின் கேம்ப் பயர்க்கு எல்லாரும் அழைக்கப்பட்டிருந்தனர். எந்தப் பிரிவிலும் தமிழ்நாடு பரிசு வாங்கவே இல்லை. கடைசியாக கேம்ப் ஹெட் பேசினார்.

இங்க நிறைய மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்காங்க, அது அவங்க வாழ்க்கையில உதவிருக்கலாம், ஆனா அடுத்தவங்க வாழ்க்கைக்கு உதவிருக்கான்னு எனக்கு சரியா சொல்லத் தெரியலை. இப்ப இங்க சொல்லப்போறது, முக்கியமான விசயம். நான் பேசிகிட்டிருக்க இந்த நிமிட இந்தியா முழுக்க ஒரு வீடியோ பேசப்படுது. 
அறிவியல் முறைப்படி திடக்கழிவு மேலாண்மை பத்தி. அரசாங்கமே விளம்பரப்படுத்திருந்தா கூட இவ்வளவு ரீச் இருந்திருக்குமான்னு தெரியலை

தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு ஸ்டூடண்ட் தன்னோட பேஸ்புக் பக்கத்துல போட்ட ஒரு வீடியோ வைரல் ஆகிருக்கு

உத்திரப்பிரதேசத்தில உள்ள கடைகோடி கிராமத்துக்கு ஒரே வீடியோவாலஅதிகப்படியான ஆதரவு கிடைச்சிருக்கு. பல டிவி செட்களில் கோட் அணிந்த செய்தியாளர்கள் விவாதம் பண்றதுக்கு,.  

நாம் செய்யும் உழைப்பு 1௦௦% பலன் தருவதை விட, 1௦௦ மடங்கு பலனைத் தர வேண்டும். அப்படி நடந்துட்டா இந்தியா வல்லரசு ஆவது சீக்கிரமே
என்பதை ஆங்கிலத்தில் சொல்லி முடிக்க அரங்கமே கைதட்டிக்கொண்டிருந்தது. எல்லார் கண்களும் அவளை நோக்கியிருந்தது. ஆனால், நிலன் நோக்கிக்கொண்டிருக்கும் இவள் இப்போது க்ரிஷ் முகத்தை பார்க்கவில்லை. 

ஆனால், இவள் தன்னை ஏளனமாகப் பார்ப்பாலென க்ரிஷ் வெட்கிப் போயிருந்தான்.

என்எஸ்எஸ் அம்பாசடர் ஆப் தி இயர் என்ற அறிவிப்புடன் விருது வழங்க, மேடையில் ஒரு போட்டோ கூட எடுத்துக்காமல், விருது எடுத்துகிட்டு க்ரிஷ்ஷிடம் வந்தாள் அவள்.

பத்து நாள் கேம்ப்ல நல்லா பேசிகிட்டிருந்தோம், ஆனா, இன்னிக்குக் கடைசி நாள் குப்பைக் கூலத்துல தான் என்னய திட்டுன, ஐ நோ., போட்டோ போடுறதும், வீடியோ எடுக்கறதும் வேஸ்ட் ஆப் டைம் னு, ஆனா யாரோ ஒருத்தருக்கு அது தான் இன்ஸ்பிரேஷனாக, இன்னோவேசனாக இருக்கும். தட்ஸ் வொய் ஐ டேக் அன்ட் அப்லோட் போட்டோஸ்.என அவள் தெளிவுரை சொல்ல,

ஐ யம் சாரி”, என க்ரிஷ் அடித்தொண்டையிலிருந்து வடிகட்டிப் பதிலுரைத்தான்.

எல்லா விசயத்துக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கம் இருக்கும், உன் கோணத்தில் அது தப்பா தெரிஞ்சிருக்கலாம். நத்திங் ஐ வான்ட், ஐ நோ, ஹூ இஸ் யம்அ யம் பிராக்டிகல் ப்ராக்டிகல் பர்சன். பாரு, தமிழ்நாட்டு ஸ்டுடன்ட்டுனு விருது வாங்குனேன், உணர்ச்சிவசத்துல தமிழ்ல பேச வரலே, இதான் நான். 

எதாச்சும் நான் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சூ!என்று சொல்லிவிட்டு க்ரிஷ்ஷின் பதிலுக்குக் காத்திருக்காமல் நகர்ந்தாள்.

முகாம் மாணவர்களுக்குப் பல வாழ்க்கைப் பரிமாணத்தைத் தந்திருந்தது. அடுத்த நாள் ட்ரெயின்ல ஏறி தமிழ்நாடு வரும்வரை அவளும் பேசவில்லை. க்ரிஷ்ஷும் கூட. ஃபேஸ்புக் ல நாலு நாள் முன்னாடி கொடுத்து க்ரிஷ் அக்செப்ட் பண்ணாத அவளுடைய நட்புக்கோரிக்கையையே அவளே நீக்கினாள். சேஃப்டிக்கு என்று சேமித்து வைத்திருந்த அவனது நம்பரைக் கூட டிலிட் செய்துவிட்டாள்.

எதிரெதிர் இருக்கை என்றாலும், எதுவுமே பேசவில்லை. பேசுவதற்கு அவ்வளவு இருந்தாலும் ஈகோவால் அவர்கள் உதடுகள் உணவைத் தவிர வேறெதையும் சுகிப்பதற்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டுவிட்டன.
ஒரு வழியாய் தமிழ்நாடு வந்து சேர, க்ரிஷ் எவ்வளவு தான் முயற்சித்தும் அவளிடம் பேசவில்லை. உதட்டுப் புன்னகையில் ஓராயிரம் கேள்விகளை நிரப்பி, கன்னக்கண் அசைவினில் போய்ட்டு வருவதாய் ஜாடை செய்ய’.,

தலை குணிந்து ஆமோதித்தான்

அத்தோடு விடைபெற்ற அந்தக் க்ரிஷ் தான் இப்ப போனில் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை யோசித்துப் பார்க்கையில் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்து போனாள்.

இத்தனை ஆண்டுகாலம், அவனை பேஸ்புக், வாட்ஸப், டிவிட்டர், டிண்டர், மேட்ரிமோனி சைட் என எதில் தேடியும் கிடைக்கவில்லை. அவன் திட்டிய சுவடுகளில் அவனது பெயர் மட்டுமே எஞ்சியிருந்தது. அவனை எப்படியாவது பார்த்து ஒரு முறை பேசி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த இந்த நான்காண்டுகால விரதத்தை

ம்ம்ஃஃஃ சொல்லு க்ரிஷ் என்று, தென்றலை துணைக்கழைத்து பேச....

”நியாபகம் இருக்கா?” என்றான்.

“ஏன் நியாபகம் இல்லாமா! மறக்கும்படியான விசயமா நீங்க செஞ்சது” எனக் குமுறத் தொடங்கினாள்.

”ம்ம்.. ஆமா, ஆமா. எனக்கே தெரியும் மேன்.” அவளை ஆசுவாசப்படுத்த முயற்சிக்க.

“தெரிஞ்சு என்ன புண்ணியம், ஒரு பொண்ணுகிட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னு கூட தெரில., அன்னிக்கே அவ்ளோ கோவம்., இந்த நாலு வருஷத்துல இரத்தஓட்டம் இல்லாம மறத்துப் போனது மாதிரி, நீ அன்னிக்கிப் பண்ணதெல்லாம் மறத்துப்போயிடுச்சி” ஹ்ம்ஹ்ம் என தத்துவம் பேசினாள்.

“விடு விடு. இன்னுமா மனசுல வச்சிருக்க, சரி அதெல்லாம் இருக்கட்டும் உண்ட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்”

“எண்ட்ட, சொல்ல என்ன இருக்கு? உன் நம்பர் கூட எண்ட்ட இல்ல.,” காலம் கடந்து பேசும் அவனுக்கான வசை மொழிகள் அவனிடமிருந்து புறப்பட்டன.

“கொஞ்சம், பேசவிடுறியா.. எங்க வீட்டுல கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிட்டாங்க.” என்றவனின் கேள்விக்கு

“அதுக்கு,“ என்று அவளிடமிருந்து பதில் வந்தது.

”ஐ லவ் யூ” என்ற அவனது குரல் சற்றே உச்சஸ்தாயி சென்றது.

“க்ருஷ், யூ கிராஸ் யுவர் லிமிட்ஸ், உனக்கு என்னாச்சு! எப்போதும் இப்டி தான் பிஹேவ் பண்ணுவியா. இன்னிக்குப் பேசவே பேசாதே! லெட் அஸ் ஸ்பீக் டுமாரோ” என போன் கட் செய்ய எத்தணித்தாள், இல்லை கட். செய்தே விட்டாள்.

துண்டிக்கப்பட்ட அழைப்பைப் பற்றி அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். வகுப்புக்கு ஆன நேரத்தால் வயிற்றை நிரப்பாது நடக்கத் தொடங்கினாள்.

இதுவரையிலான சம்பவங்கள் ரீவைண்ட் ஆகத் தொடங்கியது.
போன வாரம், புதுக்கோட்டையில் மாற்று நாடக இயக்கத்தின் விசாரணை நாடகம் பார்த்தது நியாபகம் வந்தது. ஒரு வேளை உண்மையிலேயே பேசியது க்ரிஷ் தானா? அல்லது வேறு யாராவதா? வேறு யாராவது விளையாடி இருப்பார்களோ? அப்படி விளையாடி யிருந்தாலும் ஐ லவ் யு சொல்லுமளவு யாருடனும் நட்பு பாராட்டியதில்லையே? மேலும், க்ரிஷ் விசயத்தை யாரிடமும் பகிர்ந்து கொண்டது கூட இல்லையே..  நான் க்ரிஷ் மீது கொண்ட தேடல் அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? ஒரு வேளை அவனும் என்னைத் தேடிக் கொண்டிருந்திருப்பானோ? எப்படி என் நம்பர் கிடைத்திருக்கும்? ஹர்ட் பண்ண ஒரு பொண்ணுகிட்ட எப்படி அவனால் இப்படி லவ் சொல்ல முடியும்.?


வகுப்பு வந்ததும், நடந்ததும், முடிந்ததும் ஏதும் அறியாது மீண்டும் விடுதிக்கே விரைந்தாள், அவ்வளவு முறை அழைத்தும் பதில் சொல்லவில்லை. வாட்ஸப்பில் ஆன்லைன் கூட காட்டவில்லை. ட்ரூ காலரில் உத்திரப்பிரதேசம் என்று காட்டியது. கொண்டு ஒரு வேளை, க்ரிஷ் தானோ என்ற எண்ணம் வலுப்பெற உள்ளுக்குள் உதறல் ஊற்றெடுத்தது.

அவனப் பொறுத்த வரைக்கும் சொன்னா சொன்னதுதான். நாளைக்குக் காலை வரை பொறுத்திருக்க வேண்டியது தான், எனச் சொல்லிக் கொண்டு தூக்கத்தை வரவழைத்தாள், அதுவோ நினைவுகளை மீட்டி/மீட்டுக் கொண்டிருந்தது.

அந்த எண்ணை மறுமுறை மறுமுறை பார்க்கும் போது, டிலிட் செய்யப்பட்ட அவனது எண்ணைப் போலவே, இருந்தது. ஏன், டிலிட் செய்தது இந்த எண் தான் என்றே தோன்றியது அவளுக்கு. நான்கு ஆண்டுகள் நன்றாக இருந்த அவளது மனநிலை, ஒரே நாளில் இப்படியானது அவளுக்கே தன்னிலை மீதான நம்பிக்கையைக் குலைத்திருந்தது.

விடிய விடிய யோசித்து அசந்த அவளை 8.13க்கு அழைத்த அவனது அழைப்பின் காதல் இரண்டு எழுத்து ஈற்றடி பாடல் எழுப்பியது.

“ஹலோ, யார் நீங்க? எதுக்கு கால் பண்றீங்க” அவள் தூக்கத்திலிருந்து விடுபட்டு உக்கிரமாக,

“சே எஸ் ஆர் நோ.. வில் யூ மேரி மீ?” இது க்ரிஷ்

”ஹூ ஆர் யூ மேன்” கோவத்துடன் அவள் கேட்க

“யுவர் க்ரிஷ்” என்றான்.

”ரியலி?” என்றவளின் கேள்விக்கு,

அவன் எஸ் சொல்லும் போதே இவளது செல்போனும் எஸ் எனும் ஒலிக்கற்றைகளை உட்கிரகித்துக் கொண்டது.

அவள் படிப்பு முடிந்ததும் திருமணமும், ஆயுசுக்குமான காதலும் அவர்களுக்குக் கிடைத்தது. அதோடு ரேஷன் கார்டில் அவர்கள் பெயரோடு இரட்டைக் குழந்தைகளின் பெயரும்.

(நான்காண்டுக்கு முன்னான சண்டையும், அதற்குப் பின்னான இரு நாள் உரையாடல் எப்படி காதலாகும், இதெல்லாம் சாத்தியமா? என்றெல்லாம் நீங்கள் கேட்பீர்களேயானால் வாய்ப்பற்ற வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள க்ரிஷ்ஷாகவும், அவன் சண்டையிட்டவளாகவும் இருந்து பாருங்கள் போதும். காதலுக்கு இரண்டு எழுத்து முக்கியமல்ல., புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட இரண்டு இதயங்கள் முக்கியம்)

-    த.க.தமிழ்பாரதன்
-    14.02.2019


(தூக்கம் வருவதற்காகவும், துயிலெடை எழுப்புவதற்காகவும் எழுதப்பெற்றது ;) இவ்வளவு தூரம் கடைசி வரை படிச்சிருந்தா., மிக்க மகிழ்ச்சி. உங்கள் நம்பிக்கையை எழுத்தில் பெற்றிருக்கிறேன். ஆனால், இக்கதை அதை பூர்த்தி செய்யும் என்பது எனக்கு ஐயமே.)

என்னொட சீரியஸான கதை படிக்கணும்னா.,
https://tamilbharathan.blogspot.com/2018/10/blog-post.html