இறக்காமல் ஓராண்டு காலம் உணவுண்டு உயிர் வாழ்ந்தது சாதனையா? அல்லது சாகடிக்காமல் ஓராண்டு இவ்வுலகம் உணவூட்டியது சாதனையா? எது சாதனை? சரி, ஒரு வாதத்துக்கு இதுவும் சாதனைதான் என வைத்துக்கொண்டால், வாழும் ஒவ்வொரு நொடியும் சாதனைதானே? ஆம், இந்த வேகமான கார்ப்பரேட் மாசு நிறைந்த உலகில் இந்த நொடி என்னால் உயிர்வாழ முடிகிறது, அடுத்த நொடி வாழ்வதற்கான நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால், அதுவே சாதனை தான்.இன்று ஒரு குழந்தை பிறக்கிறது. அடுத்த ஆண்டு அதே மாதம், அதே நாள், வேறு கிழமையில் வரும்! [பிப்ரவரி 29 விதிவிலக்கு]பிறந்தநாள் என நாம் தவறாக சொல்வது “பிறந்தநாளின் நினைவுநாள்” என்பதே.சான்றாக..ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்கிறது. அடுத்த வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அவருக்குத் 'திருமண நாளா'? இல்லை!அடுத்த மாதம் அதே தேதி வருமா? வரும்! அப்போது அவருக்குத் 'திருமண நாளா'? இல்லை! "மாதாந்திர திருமண நினைவு நாள்".
அடுத்த ஆண்டு அதே மாதம் அதே தேதி வருமா? வரும்! அப்போது “திருமணம் நிகழ்ந்த ஓராண்டு நினைவு நாள்” சரிதானே.
ஆனால், ஏனோ... ஆண்டுக்காண்டு வரும் 'பிறந்த நினைவு நாளுக்கு' "wish you happy birth anniversary" என்று ஒருவரும் சொல்வதில்லை!
மாறாக, 'அன்றுதான் அவர் பிறந்தது' போல "wish you happy birthday" என்கிறார்கள்! தர்க்கப்பூர்வமாக இதை ஆயுசுக்கு ஒருமுறைதான் ஒருத்தர் கிட்டே சொல்ல முடியும். அதாவது ஒருவர் பிறந்த அன்றைய நாளில் மட்டும் சொல்ல முடியும் தர்க்க ரீதியாக!
சரி இருக்கட்டும், பிறந்தநாள் மட்டும் இந்தளவு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது..?
ஒவ்வொரு ஆண்டும் வரும் பிறந்தநாளன்றாவது, புதிய பிறப்பு எடுக்க வேண்டும் புதிய உத்வேகத்தோடு இயங்க வேண்டும். இந்தச் சூரியக் குடும்பத்தின் ஓர் அங்கமான நீயும் இந்தச் சூரியனை ஓராண்டு சுற்றிவிட்டாய்(அதாவது ஒருமுறை) உன் வயது ஒன்று கூடியிருக்கிறது. உனக்கான பொறுப்பும் வேகமும் கூடியிருக்கிறது. உன்னைச் சுற்றி இருக்கிற உலகம் உன்னிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறது. அதற்காக உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியதை நினைவு படுத்துகிறது.வள்ளுவர் சொன்னது :ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்தாயைப்போலத் தான் பிள்ளைக்கும். பிறந்தகணத்தை நினைவுபடுத்தும் ஆண்டில் ஒருநாள் தலையாயது. இந்த அவசர உலகில் நம் இருப்பைத் தகவமைத்துக்கொள்ள நம்மைப் பற்றிச் சிந்திக்க அடுத்த ஓராண்டிற்கானத் திட்டமிடலைச் செய்வதற்கும் இந்தநாள் அவசியமானதும் கூட.நினைவு தெரிந்து கேக் வெட்டி கொண்டாட்டம் எதுவும் செய்ததில்லை. செய்ய எதுவும் ஆசையில்லாத சராசரி மனிதர்களில் நானும் ஒருவன்.
பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் என்ன ? எனக் கேட்பவருக்கெல்லாம். பிறந்தநாளுக்கு நான் தான் ஸ்பெஷல் என்றே பதில் வரும் வாழ்வை அதன்போக்கில் வாழ்பவர்களிடமிருந்து.இல்ல கோயிலுக்குப் போனிங்களா ? ஸ்வீட் செஞ்சாச்சா ? டிரீட்லாம் கிடையாதா ? என அடுக்கிக்கொண்டே செல்லும் கேள்விகள்.புதிதாய் ஒரு மேலாடை அவ்வளவு தான். ஸ்வீட் ஒன்றும் இல்லை., செல்லவில்லை கோயிலுக்கும்,. ட்ரீட் எதுவும் இல்லை. வெகு சாதாரணமாய் கேலி கிண்டல் திட்டு எரிச்சல் எனத் தான் செல்லும் சராசரி மனிதனுக்கு.சிலருக்குப் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அதுஎன்றைக்கு உன் பிறந்தநாளை உலகமே கொண்டாடுகிறதோ அதுவே உனக்கு பிறந்தநாள்அருகிலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுடன் நேற்றைய பிறந்தநாளின் நினைவுநாள் கொண்டாடப்பெற்றது.
நேற்று கிடைத்த ஒரே ஒரு பிறந்தநாள் பரிசு அவள் விகடனில் என்னில் எழுதி வெளியான திருவாரூரில் வளர்ந்து சூப்பர் சிங்கர் வென்ற பிரித்திகா குறித்த கட்டுரை. அதுவும் பத்திரிக்கையாளர் பொன் விமலா அக்காவின் நேரடி வாழ்த்துகளோடு.. (கட்டுரை வாசிக்க https://www.vikatan.com/oddities/women/132284-vijay-tv-super-singer-junior-prithika-interview).நேற்று கிடைத்த வாழ்த்துகளிலே மறக்கமுடியாத வாழ்த்து தம்பி தன்ராஜ் முகநூலில் பதிந்திருந்தது. அந்தப் பள்ளிக் கூடத்துப் பதின்பருவ நாட்களில் எல்லா போட்டிகளுக்கும் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் தன்னந்தனியாக முன்னின்று எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு போராடிய போது சக போட்டியாளானாக எதிர்ப்படையில் அமர்ந்து போரிட்டவனின் வரிகள்.சமூகத்தின் ஆதியிலிருந்து அந்தம் வரை அனைத்துப் பரிமாணத்திலும் பரிணமிக்கும் நண்பர்களின் வாழ்த்துகளோடு இந்த ஆண்டுப் பயணம் தொடங்கிற்று. இன்னும் வேகமாக இயங்க வேண்டிய கடப்பாட்டை காலச்சுழற்சி எண்ணிக்காட்டுகிறது.தக | 28.06.2017(2017 ஆம் ஆண்டு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு எழுதப்பட்டது )
அருமையாக எழுதுகிறீர்கள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅருமை தம்பி. மிகவும் சிறப்பான எண்ணம். என்றென்றும் உன் எண்ணம் சிறகு விரித்து ஒவ்வொரு ஆண்டும் புதிதாய்ப் பிறந்து, புதிது புதிதாய் உதவிகள் செய்து பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடு. :) வாழ்க வளமுடன் :)
பதிலளிநீக்குநன்றாயிருக்கிறது,
பதிலளிநீக்குநயமிகு பாராட்டுக்கள்!
வாழ்த்துச் சடங்கிற்கோர் வண்ணமிகு ஆடை கட்டி வாயார நன்றி நவின்ற பாங்கினை வியக்கிறேன். வாழ்த்துகிறேன். அகவை கூட, எழுத்து துலங்கட்டும்.
பதிலளிநீக்கு