நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 2 டிசம்பர், 2020

நம் சமையலறையில்...| ஒரு இலட்சம் வென்ற சிறுகதை

வணக்கம்.

குமுதம் இதழ் மற்றும் கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு (ஒரு இலட்சம் உரூபா) பெறும் நம் சமையலறையில்... கதை 09.12.2020 நாளிட்ட குமுதம் இதழில் வெளியானது. கதை படித்தபின், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் மகிழ்வேன். 

நன்றி : குமுதம் & கொன்றை அறக்கட்டளை





நம் சமையலறையில்…                                             

                    -த.க.தமிழ்பாரதன்

இன்னும் சில மணிநேரமே இருக்க, அவசர அவசரமென அம்மாவுக்கு அழைத்தான். இக்கட்டான பொழுதுகளிலெல்லாம் இவ்வுலகை அறிமுகப்படுத்தியவரிடமே ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன. நான்கைந்து முறை அழைத்தும் அம்மா எடுக்கவில்லை. கடைசி முயற்சியாய் அழைத்துப்பார்ப்போம்.  எடுத்தால் சரி, எடுக்காவிட்டால்.... அந்தப் பேச்சுக்கே இடமில்லை, எடுத்துவிடுவார். எண்ணிக்கொண்டிருக்கையில், ‘ஆசப்பட்ட எல்லாத்தையும்..' ஒலித்தது.

இப்பதான் நியூசு பாத்தன். இராத்திரிலருந்து ஊரடங்கு அமலுக்கு வருதாம். ஹாஸ்டல் காலி பண்ணிட்டு கிளம்பி வாரேன்னு சொன்னீயே? எங்க இருக்க?”

அலோஓ, அம்ம்மா இங்க ஒரே கூட்டம். ரயில்லாம் இல்ல. கார் எடுக்க மாட்டேங்கறாங்க. பஸ்ல தான் வந்தாகணும். இந்தக் கூட்டத்துல வர்ரதுக்கு வராம இருக்கலாம். ஆனா, சென்னையில எங்க தங்கறது? யாருமே வீட்டுக்குள்ள விடமாட்டாங்க, ஒன்னுமே புரியல. ஏதாச்சும் ஐடியா கொடேன்.

கன்சல்டன்சியில் பணிபுரிபவனுக்கு அம்மா ஆலோசனை தந்தாள்.

கோவிச்சிக்கலனா ஒன்னு சொல்லுவேன்!

ஏது வள்ளி வீட்டுக்குப் போகணுமா? பேசவே வேணாம் போன வை!

நிரம்பி வழியும் கோயம்பேடு, தாம்பரம் தாண்ட மறுக்கும் கார்கள், நிலையத்திலே தூங்கும் ரயில்கள் என  இயல்பைப் புரட்டிப்போட்டிருந்தது கொரோனா. 144 தடை உத்தரவு 48 நாட்களுக்கு அமல் என அரசு அறிவித்தவுடன் வாடகைக்குத் தங்கியுள்ள விடுதி வாட்சப் குழுவில் நிர்வாகி ஒரு பதிவிட்டார். "உணவு சமைக்க ஆள் வரமாட்டார், உணவகங்களும் இருக்காது". கண்ணில்பட்டதும் காலி செய்துவிட்டு ஊருக்குக் கிளம்பினான். மாலை வரை சுய ஊரடங்கென்று ஆட்டோ, டாக்சி எதுவும் ஓடவில்லை. விடுதிவாசலில் நின்று ஆன்லைன் அப்டேட் செய்தவனுக்கு, கோயம்பேடு சென்றால் கொரோனா தொற்றிடுமோ எனும் பயம்.

உறவினர் வீட்டுக்குச் செல்லலாம். 48 நாள் உட்கார வைத்து சோறுபோடுமளவுக்கு நெருங்கிய உறவினர் இல்லை. நண்பர்களோடு இருக்கலாம். தனியனாய் இருந்த கடைசி நண்பனும் கடந்த மாதம் இணையராய் மாறிவிட்டான். தான் தொந்தரவாகிவிடுவோமோ என்றஞ்சி யாரையும் தொந்தரவு செய்யவில்லை. அம்மா கூட புரிந்துகொள்ளாமல் வள்ளி வீட்டில் தங்கச் சொல்கிறாள் என்கிற எரிச்சல் வேறு.

தன்னைத் தானே நொந்துகொண்டு, விடியும் கிழக்கை நோக்கி நடக்கத்தொடங்கினான். வள்ளியின் வீடும் வீடிருக்கும் ஊரும் கிழக்கில் எதேச்சையாக அமைந்திருக்கவில்லை. அங்கங்கு நாய்களும், கண்ணுருட்டும் ஆந்தைகளும் கூடடங்கிய பறவைகளும் தவிர விண்மீன்களும் அறிய நடந்தான், நடந்தான், நடந்தான்.... நிலையா உலகில் இயற்கை அடக்குகிறது. தற்காத்துக்கொள்ள ஓடி ஒளிய வேண்டியிருக்கிறது. இந்த எதார்த்தம் வாழ்வின்மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

சற்றும் எதிர்பாரா நேரம், காலம், பொழுது அது. 'உனக்கே உயிரானேன், எந்நாளும் எனைநீ மறவாதே, நீ இல்லாமல் எது நிம்மதி, நீதான் என்றும் என் சந்நிதி; கண்ணே கலைமானே கன்னி மயிலென...' அழைப்பு ஓய்ந்தது. வள்ளியின் அழைப்பு. கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து இந்தப் பாடலை கேட்கிறான். இந்த வரிகளும் வரிகளேற்படுத்திய வசந்தமும் நினைவுகளைக் கிளறிவிட்டன.

'உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ..' அழைப்பை ஏற்றான். ஏதும் பேசவில்லை.

நீ என்ட்ட பேசமாட்டேன்னு தெரியும். பேசவும் வேணாம்.  நானும் உன்ட்ட பேசிருக்க மாட்டேன்.  இராத்திரி அம்மா பேசனாங்க. கோவத்துல வச்சிட்டியாம். நட்ராத்திரில இங்கதான் சென்னைல எங்கயாவது நின்னிட்டிருப்ப, லொகேசன் அனுப்பு, நான் வந்து அழைச்சிட்டு போயிடறேன்.

பதில்களை எதிர்நோக்காமல் துண்டித்துவிட்டாள். அவன் லொகேசன் அனுப்புவதற்குள் காரினை எடுக்க அடுக்குமாடிக்குடியிருப்பின் தரைகீழ்தளம் வந்திருந்தாள். லொகேசன் பார்த்தவளுக்கு கலைந்த முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததுபோலாயிற்று. அவளது குடியிருப்பின் வெளியே நிற்கும் அவனைப் பார்த்தாள், அழைத்தாள்; நகரவில்லை. மீண்டும் அழைத்தாள்பலனில்லை. அழைத்துக்கொண்டு ஏற 18ஆம் தளம் சென்றது மின்னேணி.

*

வள்ளி. திறமையான வளமையான பெண். கணிப்பொறித்துறையில் மென்பொறியாளர். மாதச்சம்பளம் நான்கு லட்சத்தைத்தாண்டும். அதை எப்படி பதினாறாக்குவது என்பதில்தான் அவளது நோக்கமெல்லாம். பெற்றோர் இல்லை அல்லது பெற்றோர் பிரிந்துபோய்விட்டனர். பெற்றோர் இல்லை என்பதையே விரும்புவாள் வள்ளி. பள்ளி முதல் கல்லூரி வரை விடுதியே கதியாய் இருந்தவள், வேலை சேர்ந்த பின்னும் பேயிங் கெஸ்ட்டாக இருந்தாள். மாதச்சம்பளம் இலட்சத்தைத் தாண்டுகையில் ஈஎம்ஐ-யில் வாங்கியதே 18ஆம் தளத்திலிருக்கும் வீடு. அது வீடு என்று சொல்வதைவிட ஓய்வெடுக்கும் கூடு என்று சொல்லலாம். அதுதான் வள்ளிக்குப் பிடிக்கும். சிறகை விரி, பற எனும் வரிகளின்படி சமூகத்தில் பறப்பவள். தன் வாழ்வின் வெறுமைகளை பறத்தலின் வெற்றியினால் மட்டுமே ஈடுகட்ட முடியுமென நினைத்திருந்தாள். வள்ளியைப் பொறுத்தவரை வெற்றியே மகிழ்ச்சி.

அகவை கால்நூற்றாண்டைக் கடப்பதற்குள் உடலுக்கும் உள்ளத்துக்குமென ஒருவனை அடையாளங்கண்டாள். அது அவன்தான். சிறுநகரத்திலிருந்து படியேறி சென்னை வந்தவன். அம்மா உழைப்பில் படித்தவன், இலட்சங்களையே அப்போதுதான் அறுவடை செய்யத்தொடங்கியிருந்தான். ஒரே அலுவலகம், அலட்டிக்கொள்ளாத '90களின் குழந்தை முகம், முன்காதல் ஏதுமில்லை, பெண்களிடம் வழிவதுமில்லை. அவனைத் திருமணம் செய்வது சரியான முடிவு என உறுதிப்படுத்தக்கூட அவளுக்கு யாருமில்லை. முடிவெடுத்தாள். அவனிடம் சொல்லிவிட்டாள்.

*

இங்கேயே இரு…”

வீட்டிற்குள் சென்றவள், வாளியும் வெளிநாட்டுக் கிருமிநாசினியும் கொண்டுவந்தாள். பையை வாளியில் வைக்கச்சொல்லிவிட்டு கையிலிருந்த கிருமிநாசினியை அவன்மேல் தெளித்தாள். பூச்சுக்கொல்லியில் மடியும் பூச்சைப்போல அவன்முகம் பாவனை செய்தது.

இங்கேயே தூங்கிக்க?”

ஹம்ம்.

உள்நுழைந்தவன் முகப்பிலேயே படுத்துக்கொண்டான். ஏசி போட்டிருக்கும் இரண்டாம் அறையை அவளது தூக்கம் ஆக்கிரமித்தது.

*

மற்ற பெண்களைப் போலில்லை வள்ளி. சுய அறிவும் கனவும் சராசரி அளவுக்கும் அதிகமாயிருந்தது அவனுக்குப் பிடித்திருந்தது. ஒருவருக்கொருவர் புரிந்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபின், வழக்கமான மார்கழி இரவொன்றில்தான் இதே வீட்டுக்குள் முதல்முறை வந்தான். அரிதான நுண்கலைப்பொருட்கள், மென்காந்தள் நிறம்கொண்ட சுவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே குடிகொண்ட வீட்டில் கூடுதலாக அவன் மட்டுமே இருந்தான்.

கதைத்தான், கதைத்தாள், கதைத்தார்கள். வான்முகில்கள் வலசை போகும் வரை கதைத்தார்கள்.

சாப்பிட ஏதாவது ஆர்டர் செய்யவா?” என்றாள்.

அதெல்லாம் வேண்டாம். ஒரு காபி குடிப்போமா? ஆர்டர் செய்ய வேண்டாம், நானே செஞ்சி தரேன்என கிச்சனுக்குள் நுழைந்தான்.

ஆச்சரியமாக இருந்தது, அதிர்ச்சியாகவும் தான். அவ்வளவு பெரிய கிச்சனுக்குள் பாத்திரங்கள் ஏதுமில்லை; பண்டங்கள் ஏதுமில்லை. குடிப்பதற்கு ஆர்ஓ வாட்டர். பழங்கள் கெடாமலிருக்க ப்ரிட்ஜ்.

ஹே! என்ன இது, உன் கிச்சன்ல ஒன்னுமே இல்ல?”

கிச்சனே இருக்கக்கூடாதுங்கறது தான் கனவே. ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கும் சமைத்தலுக்கும் எவ்வளவு நேரம் எவ்வளவு செலவு செய்றாங்க தெரியுமா? கடந்த பல தலைமுறைகளா பெண்கள்னாலே சமைக்கணும்னு இருந்திருக்கு. புருசனுக்கு அவன் குடும்பத்துக்கு அப்புறம் புள்ளைங்களுக்குசாகுற வரைக்கும் அடுப்படிதான் பெண்களுக்கு. சரி, அறிவு வளர்ந்து சமூகத்தில் பெண்கள் வளர ஆரம்பிச்ச அப்புறமாவது மாறினிச்சா இல்லயே.. ஏன்? இன்னிக்குக்கூட பெண்களுக்குக்குனு தனி இதழ்கள் நடத்துற பத்திரிக்கைகள் இலவச இணைப்பா சமையல் குறிப்புகள் தானே கொடுக்கறாங்க? சமூக இயங்கியல்ல பெண்கள்னா சமைக்கணுங்கறது ஊறிப்போயிருக்கு. அத மாத்தனும்..!

ஹே! மதியம் ஆஃபிஸ்ல சாப்டுவ., அப்ப காலையில, இராத்திருக்கு?”

ஜூஸ் காலைல, இராத்திருக்கு ஆர்டர் செஞ்சிடுவேன். இடையில தீணிக்குப் பதிலா பழங்கள்…”

ஊப்ஸ்! நாளைக்கு நான் வீட்டுக்கு வந்தாலும் இதே கதிதானா?”

கம்ப்பள் இல்ல!  ஆனால், நீயும் ஃபாளோ செய்தால் நல்லா இருக்கும். ஆண்கள் சமைக்கறதுலயும் உடன்பாடில்லை. பத்து நிமிசம் சாப்டறதுக்காக ஒரு மண்ணேரம் சமைப்பாங்களா., அந்த நேரத்தை எப்படி ப்ரடக்டிவிட்டியா பயன்படுத்தனும்னு யோசி. ஆயிரம் குடும்பம் ஒருமணிநேரம் செலவு செஞ்சு, ஒருவேளை உணவு செய்றாங்க. அதே உணவை மொத்தமா தயாரித்தால் ஆயிரம் குடும்பத்தின் ஒருமணிநேரம் அதாவது ஆயிரம் மணிநேரம் மிச்சம்தானே

*

திருமணம் முடிந்த நாளோடு தேனிலவுக்குக் கண்டம் தாண்டினார்கள். மாதமொன்று கழிந்தது, இயல்பு வாழ்க்கையும் புலர்ந்தது. திருமணமான புதிதென்பதால் அவள் பேச்சுக்கே அவன் கட்டுப்பட்டான். உணவு ஆர்டர் செய்தே சாப்பிட்டார்கள். சில மாதங்களில், அம்மா கதிரறுத்தனுப்பிய மாப்பிள்ளைச் சம்பா அரிசி மூட்டை 18ஆம் தளத்திற்கு வந்திருந்தது. இதைச் சமைக்க வேண்டாம்! வீணாக்கவும் வேணாம் திருப்பி அனுப்பிடேன்என்றாள். அம்மாவின் உழைப்பினை-தன் நிலத்து அரிசியைத் திருப்பியனுப்ப விருப்பமில்லை அவனுக்கு. பயன்படாத ஒன்று வீட்டிலிருக்க பிடிக்கவில்லை அவளுக்கு. முரண் தொடங்கியது; மூப்படைந்தது; முற்றியது. மணமுறிவிற்கே வழிகோலியது. மணமுறிவுக்கு முன்பே மனம்முறிந்தது. வக்கீல் நோட்டீஸ் வருமுன்னரே வீட்டைவிட்டு வெளியேறி பழையவிடுதிக்கே சென்றான்.

*

ஹேய்! ஏந்திரி…. எவ்வளோ நேரம் தூங்குவ

என்ன?” எனும் பாவனையில் அவனிரு புருவங்களும் விண்நோக்கின.

பசிக்கலையா? மணியப் பாரு

அவனுக்கு ப்ரட்டும் ஜாமும் எடுத்துத் தந்தாள். பல்லிளிக்கும் சூரியன். பால்கனியிலிருந்து பூமியை நோக்கினால் ஆள் நடமாட்டமின்றி மரங்களும் கட்டடங்களுமே இருந்தன. பேருந்துகள் ஓடலை, பயணிக்க வகையில்லை. தங்குவதற்கு உரிமையில்லா வீட்டில் இருக்க வேணாம். முகம் கழுவி எப்படியேனும் ஊருக்குக் கிளம்பிட முடிவெடுத்தான்.

நீ சாப்டியா?” எனும் கேள்வியை அவன் கேட்க மாட்டானா! என்றிருந்தது. கொரோனாவால் வொர்க் ப்ரம் ஹோம் அறிவிச்சப்பறம் இப்படித்தான். ஆளே மாறிட்டாள்! பறந்து கொண்டே இருப்பவளுக்கு இந்தக் கூடு மட்டுமே வானமானது. அதுவே தண்டனையும்.  ஊரடங்கால் சமைக்க யாரும் வரவில்லை, வைரஸ் பரவலால் யாரை நம்பியும் உணவு வாங்க முடியவில்லை. எடையிழந்த உடலின் கலையிழந்த முகத்தைப் பார்த்து,

நீ?”

அத்திபூத்தாற்போல் சொல்லொன்று உதிர்த்தான். வான்மதகுடைத்துப் பயிர் வளர்க்கும் கார்முகிலாய் அழத் தொடங்கினாள். அவளைத் தொடக்கூடத் தயக்கம். “இரு வரேன்”. தண்ணீர் கொண்டுவர கிச்சன் சென்றான். அதிர்ச்சி, ஆச்சரியமும்தான். புதுப்பாத்திரங்கள் குடிபுகுந்திருந்தன. மின்னடுப்பும் உதயமாகி அலங்கோலமாக இருந்தது. சமையலுக்குதவும் சின்னச்சின்ன தானியங்கள், பருப்புகள் இருந்தன. ப்ரிட்ஜ் முழுதும் காய்கறிகள். அப்புறம் ஓரத்தில் அரிசி மூட்டை. எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், தண்ணீரெடுத்து வந்தான். தந்தான்.

போறேன்எனக் கிளம்பினான்.

சமைச்சி கொடுத்துட்டுப் போறியாஎன்றாள்.

அழுதான், அணைத்தான், சமைத்தான், சாப்பிட்டான், சாப்பிடவைத்தான். அவளும்தான். போறேன் என்றவன் ஒரு மண்டலம் அங்கேயே இருந்தான். வாட்சப் அழைப்பில் பாட்டி சமையல் கற்பித்தாள் அம்மா. உணவு அடிப்படையானது; சமையற்கூடமே கதியெனக் கிடப்பது அநாவசியமானது. அரிசி மூட்டையும் தீர்ந்தது. 48 நாட்கள் முடிந்து ஊரடங்கும் தளர்ந்தது. வள்ளிக்கோ மனம் நிறைந்து கலைகூடி எடை அதிகரித்தது. இருவர் இப்போது மூவராகியிருந்தனர். யாருக்குத் தெரியும் நால்வராகக்கூட இருக்கலாம். அம்மாவுக்கு மகிழ்ச்சி; அம்மாவாகப் போகிறவளுக்கும்தான்.

வாசல் வந்த வக்கீல் நோட்டீசை ஒன்றாகக் கிழித்தனர். மனமுறிவுக்கு வித்திட்ட சமையலறை சமையலே; அன்பையும் அன்யோன்யத்தையும் பெருக்கியது. இந்த எதார்த்தமே நம்பிக்கையானது.

அன்று வெளியான நாளேட்டின் தலைப்புச் செய்தி :

நாட்டிலிருந்து கொரோனா தொற்று முற்றிலும் ஒழிந்தது ; சமூக விலகல் இனி தேவையில்லை

டாட்

 






In Our Kitchen... | Short Story | 3rd Prize - 1 Lakh

Vanakkam

In our kitchen… story Got 3rd Prize (1 lakh) in Sangam poetry based TAMIL Short Story Competition Organized by Kumudam magazine & Konrai foundation. This Story based on Sangam poetry Kuṟuntokai 167. poetry & its meaning given below the story. I'd like to hear your thought & Comments about the story.

 

In our kitchen…                                                                    

Author & Translator : Tamil Bharathan

English Editor : Saranya M.A M.Phil

 

With only a few hours left, he dialed his mother frantically. Only she who introduced him to the world could advise him in times of confusion. The phone completed four to five full ring cycles without any answers..  will give another try for one last time. If she picks, fine. If not…Nothing like that.. She will definitely pick up. When his mind wanders, the tune ‘Ācaippaṭṭa ellāttaiyum..’[1] phone rings.

“I have watched the news just now. The Lockdown will be implemented tonight. You told me that you would vacate the hostel and come back? Where are you?”

“Hellooo, Mommm, It’s so crowdy here . No trains. No car pickups. Bus is the only way to travel. It is better to stay put instead of venturing into this crazy crowd. But, where will I stay in Chennai? No one will welcome into their house, totally confused. Give me an idea. ”

The irony is Mother advised to him who is working in consultancy.

“If you won’t get angry, I'll tell you something.”

“whattt? Go to Valli’s home ah? Don’t speak anymore. Cut the call!”

The  Corona has changed the normal situation with Overcrowded Koyambedu(CMBT), Cars not crossing Tambaram, Trains sleeping at the stations. After the announcement of 144 for the upcoming 48 days by the Government, the hostel manager has pinged a post in whatsapp group. “No cooks available and so are the restaurants”. He is out of the hostel by the time he has finished reading the message. No autos and taxis as there is a self curfew too. He who updates online by standing near the door has the fear that he may infect corona if he will go to Koyambedu(CMBT).

He could have gone to his relative’s place. But neither him nor his relative would be able to bear each other for 48 days straight. Staying with friends would have been a better option, but  his last bachelor friend was married off last month. After thinking long and hard, and counting the number of people he has already known, he has come to the decision of not to be of any disturbance to anyone else. He is even more irritated when his mother has asked him to go to Valli’s home.

He groans to himself and begins to walk east at dawn. Valli's house and his town are not arbitrarily located in the east. He continues to walk and further kept walking to witness stray dogs, the shining rolling eyes of the owls, and some chirping birds huddled with in the nest, in-front of the stars. Nature controls the unstable Earth. In this world, one has to run and hide to defend oneself. The reality brings sadness about the life.

Totally Unexpected time, place, situation. ‘Uṉakkē uyirāṉēṉ, ennāḷum eṉainī maṟavātē, nī illāmal etu nim'mati, nītāṉ eṉṟum eṉ canniti; kaṇṇē kalaimāṉē kaṉṉi mayileṉa...’[2] The call has ended. That is Valli's call. It is already been two months since he heard the song. The lines and the impact of the lines has made rekindled his memories.

‘Uṉakkē uyirāṉēṉ, ennāḷum eṉainī maṟavātē’ (again ringed) He accepts the call. Speaks nothing.

“I know that you won’t talk to me. Neither do you have to. I myself wouldn’t have spoken to you either. Mother called me last night. She told that you cut the call angrily. You would be roaming around in Chennai during this midnight, send the location, I will come and pick you up.”

She cut the call without expecting answers. Before he has sent the location, she has reached the ground floor of the apartment to start her car. It seems to her as if she is looking a weird face in front of the mirror. She sees him standing outside her apartment. She calls him; He does not move. Calls back; No use. The lift starts to climb 18th floor as she has boarded with him.

*

Valli. Talented prosperous woman. Software Engineer in Computer Sector. Monthly salary is above four lakhs. Her vision is to mount that even more. No parents or her parents get separated. Valli wants to quote no parents. She was a hostelite stayed in a hostel from school to college and was a paying guest after joining the work. The house on the 18th floor was bought at EMI when the monthly salary exceeded 1 lakh. It is more of a resting nest than a house. That's what Valli likes. As the saying goes ‘spread your wings and fly’, she flies her living. She thinks that the emptiness of her life can only be filled by the success of flying. For Valli, victory is happiness.

Within a quarter of a century, she had identified someone as her life partner for body and soul. Yes. It was him. He came to Chennai from a small town. He was educated through his mother’s hard work. He had just started harvesting some lakhs per month. Same office, indifferent '90s kids face, no love experience, no flirting to women. She had no one to advise her that her decision of marrying him was right. She decided & expressed her love to him.

*

“Stay here”

She has inside the house and brought the bucket and the foreign disinfectant. She is asked to keep the bag inside the bucket and she has sprinkled the disinfectant on him. His face is like a plaster which is folding in a pesticide.

“Sleep right here?”

“Hmm”

He sleeps on the façade. She has a sound sleep in the second room where the AC is installed.

*

Valli was not like other women. She had a high level of self-made knowledge and dreams above average. He liked that. After understanding each other and deciding to get married, he came into the same house for the first time on a regular Mārkaḻi[3] night. He was the only addition to the house which was filled with rare fine art things, Flame lily colored walls, and essentials things.

He Talked, She talked, They talked. They talked until sky-clouds migrated.

She asked “could I order something to eat?”

“No need. Shall we drink a coffee? No need to order, I will make it.” On saying this, He entered into kitchen.

It was amazing and also shocking. There was no utensils in such a large kitchen; No goods. There was RO Water for drinking & a Fridge to extend the life of perishable fruits.

“Hey! What is this, there is nothing in your kitchen? ”

“Not to have a kitchen is my dream. Do you know how much time each house spends on cooking and food? For the past several generations, women are meant for cooking. For Husband, then to his family and then to children. Kitchen is the only room meant for women until she dies. Well, Even if the society grows with women who has umpteen amount of knowledge, there is no change. Why? Even today, the proper women magazines are tend to give only the footnotes of recipes. In the social trauma, it is destined that women are meant for cooking only. Want to change it!”

“Hey! You have lunch at the office, what will you do for the breakfast and dinner?”

“Juice for the morning and I order for dinner. I will have fruits instead of the snacks…”

 “Oops! Is it the same for me when I come home tomorrow? ”

“No compulsion! But, it would be nice if you follow too. I don’t want the men to do cooking. Think about how you can use that time productively to cook a meal for ten minutes. A thousand families spend an hour to make one meal. If the same food is prepared in bulk, there will be one thousand hours saved for one thousand families. ”

*

They crossed the continent for their honeymoon the day after the wedding. A month passed, life became normal. He was bound by her speech as it was a new beginning. They ordered food. Within a few months, the ‘Māppiḷḷai campā’[4] rice sack which was harvested & sent by his mother had reached the 18th floor. She said, ‘Don’t cook this! Don't waste it, just send it back'. He did not want to return his mother's diligence - the rice of his land. She did not like to have something unused at home. The paradox began; developed; ended. It led to divorce. Heart broke before they divorced. Before he received the legal notice, he left her apartment and he went back to the old PG hostel.

*

 “Hey! Wake up. How long will you sleep?”

“What?”  Both his eyebrows looked up to sky.

 “Don’t you feel hungry? See what the time now is.”

She has brought him bread and jam. The Shining Sun. He can see nothing other than trees and buildings from the balcony. No Buses, so no way to travel. He does not want to stay in the home where he does not have a right to. He has washed his face and decided to go to hometown anyway.

“Had your food?” this is what she has expected from him. After the implementation of work from home due to corona, this is the situation. She has changed. Her home is the only place for her to do everything. Punishment too. No cooks available due to the Curfew. The frequent spreading of the virus has made us not to buy food from the outside. Looking after how lean and pale she has become,

“You?” He has uttered a word like a flower bloomed once in a blue moon.

She has started crying like the dark clouds which was growing the crops. He is reluctant even to touch her. Wait. He has gone into the kitchen to fetch water. Shocking and surprising. Some new utensils are there with a disrupted Induction stove. There are some small grains and nuts for cooking. The fridge is filled with vegetables. There is a rice sack in the corner. He has given her water without expressing anything.

“I'm leaving,” he said.

“Could you please cook for me?” she said.

He has cried, hugged, cooked, ate and also made her to eat. She too. He who wanted to leave immediately has been there for 48 days. Mom has taught ‘Pāṭṭi samaiyal’[5] through whatsapp call. Food is base; it is not necessary to spending many hours in the kitchen. The rice sack is over. After 48 days the curfew is relaxed. Valli is satisfied, looking good and gained weight. The two now becomes three. Who knows maybe even four! Happiness is for the mother; even she one who is going to be a mother.

They have torn the legal notice. The frustrated kitchen-cooking which was the reason to the separation, multiplied the love and intimacy.  This reality is optimistic.

The Day’s headline of the newspaper leads:

Corona infection is completely eradicated from the country; Social distancing is no longer necessary.

Dot

 

.

 

Kurunthokai 167

Author : Koodalūr Kilār,

Note : Mullai Thinai – What the foster mother said to the heroine’s mother (The foster mother who visited the couple in their marital house, said this to the heroine’s mother on her return)

English Translation : Mrs : Vaidegi 

 

Poetry :

Wearing a garment that was not

washed after she mashed mature

curds and wiped on it with her

delicate fingers that resemble glory

lily petals, she cooked.

 

Smoke from her cooking spread

around and touched her kohl-lined

eyes that are like blue waterlilies.

 

She made sweet tamarind curry that

he enjoyed and ate.

Her face revealed her happiness in

a delicate manner, the young woman

with a bright forehead.

 

Source: https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-kurunthokai-1-200/

 

 





[1] Mother Praising Song in Tamil https://www.youtube.com/watch?v=hmTY39EY0Uc

[2] One of the Best Lovable lyric Song in Tamil Cinema industry (also last song of Kannadasan) https://youtu.be/fNRV_gVI1B4?t=181

[3] Mārkaḻi – Tamil month, (This month Winter season in Tamil Nadu)

[4] Māppiḷḷai campā – One of the Traditional Rice in Tamil Nadu. It is too good for Health & gives more stamina. for more details read https://www.standardcoldpressedoil.com/hub/mapillai-samba-rice/

[5] Patti samaiyal – Traditional food from previous Ancestor

வியாழன், 19 நவம்பர், 2020

அரிஸ்டாட்டிலின் இயற்பியல் மொழிபெயர்ப்பு முறைகள்

..தமிழ்பாரதன்

19.11.2020

 

அரிஸ்டாட்டிலின் இயற்பியல் மொழிபெயர்ப்பு முறைகள்

தமிழ்ச்சூழலில் மொழிபெயர்ப்பானது காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியத்தில் இடம்பெறும்

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே (தொல். மரபியல் 98)

எனும் அடிகள் தக்க சான்றாகும். பிற்காலத்தில், பண்பாட்டு ஊடாட்டத்தால் வடமொழிச்சொற்கள் தமிழில் கலப்புற்றன. தொழிற்புரட்சிக்குப் பின் ஏற்பட்ட தாக்கத்தால் மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பெற்ற தொழில் துறைகள்/முறைகள் தமிழ்ச்சூழலுக்கு அறிமுகமாகின. இவை, வாழ்விலும் வாழ்வில் எழுந்த சிந்தனையிலும் மாற்றத்திற்கு வழிவகுத்தன. தமிழ் அல்லாத சொற்கள்  தமிழர்களிடையே புழக்கமாகின. தமிழற்ற பிறமொழிச் சொற்களின் ஒலிப்புப் பெயர்கள் சமூகத்தில் நிலைபேறடைந்துவிட்டன. இச்சூழலில் கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு என்பவை தமிழின் இருப்பைத் தக்கவைக்கத்தக்கவை.

தற்காலத் தமிழ்ச்சூழலில் இலக்கியம் தவிர்த்த பிறதுறைகளில் மொழிபெயர்ப்பின் பங்கு கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு, உலகமயமாக்கல், வணிகமயமாகிவரும் வாழ்க்கை முறை, சந்தைப் பொருளாதாரம் முதலானவை காரணிகளாகும். கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், பொழுதுபோக்குத் துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் மொழிபெயர்ப்பு பெருகி வருகிறது. ஆனால், இவற்றோடு ஒப்பிடுகையில் இலக்கியத் துறையில் மொழிபெயர்ப்பானது சவால்களைச் சந்தித்துவருகிறது. காப்புரிமை முதலான காரணிகளால் உலக இலக்கியங்களின் தமிழாக்கங்கள் வெளியாவதில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது. “தமிழில் மட்டுமே வாசிக்க முடிந்த ஒருவர் இன்று நோபல் பரிசு பெற்ற புத்தகத்தை வாசிக்க இன்னும் ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்[1] என்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கூற்று இங்கு நோக்கத்தக்கது.

பனுவல் நிலையில் ஒன்றைத் தமிழாக்கம் செய்ய வேண்டியிருப்பின் மொழிபெயர்ப்புக்கான பதிப்புரிமை, காப்புரிமை முதலான காரணிகள் இடைவெளியை ஏற்படுத்துகின்றன. மேலும், திருட்டுத்(piracy) தளங்களில் முறையற்றுப் பகிரப்படும் மென்கோப்புகளால் அச்சுநூல்களின் சந்தைப்படுத்தலும் கேள்விக்குறியாகி வருகிறது. இதன் பின்னணியில் மொழிபெயர்ப்பு நூல்களின் சந்தைப்படுத்தும் சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. தமிழர்களிடையே அதிகரித்துவரும் ஆங்கில வாசிப்புப் பழக்கம், சந்தையில் உடன் வெளியாகும் ஆங்கில நூல்கள், அந்நூலைப் பெறுவதற்கான எளிய வாய்ப்புகள் முதலானவை தமிழாக்கம் நிகழ்த்துதலை தாமதப்படுத்துவதற்கான ஏனைய காரணிகள்.

இலக்கியம் தவிர்த்த பிறதுறைகளில் இச்சிக்கல் இருப்பதில்லை. ஏனெனில், பிறதுறை மொழிபெயர்ப்புகள் (தமிழாக்கங்கள்) பனுவல் நிலையில் இருப்பதைவிட தேவையின் அடிப்படையில் உருவாக்கம் பெறுகின்றன. அத்தேவையும் பொருளாதாரத்தால் சமன் செய்யப்படுகிறது. வளர்ந்த அறிவியல் நுட்பங்களுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவே தடுமாறும் எளிய மனிதர்கள் நிறைந்த தமிழ்ச் சூழலில், அவர்களுக்குப் பிற பண்பாடுகளின் அறிவை, இரசனையை உள்ளீடு செய்வதற்கு இலக்கிய/அறிவுப்புல மொழிபெயர்ப்புகள் அடிப்படையானவை.  

மீவளர்ச்சியுற்ற அறிவியற் சூழலில், காலம் கடந்த அறிவுமரபைத் தமிழ்மொழிக்குக் கடத்துவதென்பது, தமிழின் அறிவு மரபோடு ஒப்புநோக்குவதற்கான வாய்ப்பைத் தருகிறது. இதன் பின்னணியிலேயே, ‘காலம்எனும் கருத்தாக்க நிலையில் தமிழறிவு மரபின் வேராக விளங்கும் தொல்காப்பியத்தோடு ஒப்புநோக்கத்தக்குவதற்காக கிரேக்க அறிவு மரபின் அடையாளமாக விளங்கும் அரிஸ்டாட்டிலின் இயற்பியல் நூல் தமிழாக்கம் பெற்றது. அரிஸ்டாட்டில் இயற்பியல் நூலைத் தமிழாக்கம் செய்தபோது, எழுந்த மொழிபெயர்ப்பு முறைகளை இக்கட்டுரை விளக்குகிறது.  

அரிஸ்டாட்டிலின் இயற்பியல்

இயற்பியல்நூலின் சில பகுதிகள் தொடக்கத்தில் ஏதென்ஸ் நகரத்தில் அரிஸ்டாட்டில் இருந்தபோது, எழுதப்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும், இந்நூலின் பிற பகுதிகள் அவரது வாழ்நாளின் பிற்காலத்தில், அவரது உரைகளிலிருந்து விரிவாக்கப்பட்டிருக்கின்றன. “அரிஸ்டாட்டில் எழுத்தாக்கங்களின் தற்போதைய சீரமைப்பு அவரைப் பொறுத்ததா? பிற்கால தொகுப்பாசிரியர்களால் திணிக்கப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை. குறுநூல்களாகவும் தலைப்புகளிட்டும் இதனைப் பகுத்தமை தொகுப்பாசிரியர்களே என்ற பொதுப்பார்வை உள்ளது. அரிஸ்டாட்டிலின் மூலப்பிரதி நிறுத்தற்குறிகள், பத்தி பிரித்தல், தலைப்பிடுதல் போன்றவற்றைக் கொண்டிருக்கவில்லை. அரிஸ்டாட்டிலின் எந்த எழுத்துப் பணியும் அவர் வெளியிடுவதற்காக உருவாக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதை ஒருபோதும் வெளியிட நினைத்ததில்லை[2]. இதன் காரணமாக, ஆங்கிலப் பனுவலில் இடம்பெற்றுள்ள நிறுத்தற்குறி, பத்திப் பிரிப்பு, உட்தலைப்பு முதலானவற்றுக்குத் தமிழாக்கத்தில் முதன்மை கொடுக்கப்பெறவில்லை. தமிழ்ச்சூழலுக்கு ஏற்பவே, தலைப்புகளும் நிறுத்தற்குறிகளும் தரப்பெற்றுள்ளன.

மொழிவல்லுநரும் திறனாய்வாளருமான இமானுவேல் பெக்கர் (21 மே 1785 – 7 சூன் 1871) அரிஸ்டாட்டிலின் ஆக்கங்களைக் கிரேக்க மொழியில் தொகுத்துள்ளார்[3]. இமானுவேல் பெக்கரின் கிரேக்கத் தொகுப்பு ஆய்வாளர்களால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பெற்றது. பெக்கரின் தொகுப்பே அரிஸ்டாட்டிலின் ஆக்கங்களைக் சுட்டும் முதன்மைப் பனுவலாக உருப்பெற்றது. இப்பனுவலை டபுள்யு.டி. ராஸ் 1936இல் பதிப்பித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு, ராபின் வாட்டர்ஃபீல்ட்-இன் ஆங்கில மொழிபெயர்ப்பில் அரிஸ்டாட்டில் பிசிக்ஸ் (Aristotle Physics) 1996இல்  வெளியானது[4]. இந்த ஆங்கில நூலே தமிழாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்றது.

ஆங்கில மொழிபெயர்ப்பில் டபிள்யு.டி. ராஸ்-இன் பதிப்பிற்கு மாறுபட்ட வாசிப்புமுறை இருப்பின் அவற்றுக்குரிய இடங்களில் (†) குறியிட்டு விளக்கியுள்ளார் ராபின் வாட்டர் ஃபீல்ட். ஆங்கில மொழிபெயர்ப்பில் சொற்றொடர்களுக்கிடையே ஆங்காங்கு நட்சத்திரக் குறியீடுகள் (*) கொடுக்கப்பெற்றுள்ளன. நூலுக்கு அறிமுகவுரை எழுதிய டேவிட் பாஸ்டோக் நூலின் பிற்பகுதியில் நட்சத்திரக் குறியீடுகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். ஆங்கிலப் பனுவல் எடுத்தியம்பும் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் இந்தக் குறிப்புகள் தமிழாக்கத்தில் உரிய இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தனியே அடையாளப்படுத்தவில்லை.

அரிஸ்டாட்டிலின் பிசிக்ஸ் எனும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் மொத்தம் 8 பகுப்புகள் உள்ளன. இந்தப் பகுப்புக்கான தலைப்புகளும் அதன் உட்தலைப்புகளும் கிரேக்கத்தில் உள்ளவை அன்று. பொருண்மை அடிப்படையில் ஆங்கில மொழிபெயர்ப்பாளரால் தரப்பட்டவையே. இந்நூலின் பகுப்புகள் ஆங்கிலத்தில் புக் (book) என்று அழைக்கப்படுகின்றன. தமிழில் நூலின் பகுப்பு படலம், காண்டம், அதிகாரம், மண்டலம், இயல் போன்ற பெயர்களால் விளிக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் புக் என்றழைக்கப்படும் இப்பகுப்புகளைத் தமிழில் இயல்என்றே கொள்ளப்பெற்றது.

சுட்டுக் குறியீடு

இமானுவேல் பெக்கர் தொகுத்த கிரேக்கப் பனுவலில் உள்ள பக்க எண்கள், வரிகளின் எண்களே ஆங்கில நூலிலும் சுட்டுக் குறியீடாக உள்ளன. கிரேக்கத் தொகுப்பில் 184 முதல் 267 பி வரையிலான பகுதிகள் இயற்பியல் நூலுக்குரியன. ஆங்கில நூலில் ஒவ்வொரு தொடருக்கும் இந்தச் சுட்டுக் குறியீட்டு எண்கள் கொடுக்கப்பெறவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பாளரும் தொடருக்குத் தொடர் நேரடியாக மொழிபெயர்க்காமல் பொருண்மை அடிப்படையில் மொழிபெயர்த்திருக்கிறார். கருத்து முதன்மை, பத்தி தொடக்கம் என தேவையின் அடிப்படையில் மொழிபெயர்ப்பாளரால் இந்தச் சுட்டுக் குறியீட்டு எண்கள் ஆங்கில நூல் நெடுகிலும் தரப்பெற்றுள்ளது.

சான்று : The Reason, then, why people think of time as the change of the heavenly sphere is because all other changes are measured by this change and time too is measured by this change என்ற வரிகளின் தொடக்கத்தில் 223b21 என்ற சுட்டுக் குறியீடு இடம்பெறுகிறது. இமானுவேல் பெக்கரின் கிரேக்கத் தொகுப்பில் 223ஆம் பக்கத்தில் b பிரிவில் 21ஆம் வரியில் மேற்காணும் வரிகளின் மூலவரிகள் தொடங்குவதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தச் சுட்டுக் குறியீட்டு எண்கள் தமிழிலும் தரப் பெற்றுள்ளன. கருத்தாக்கத்திற்குரிய ஆங்கிலப் பத்தி/வரிகளின் தொடக்கத்தில் இடப்பெற்றிருக்கும் எண்ணே கருத்தாக்கத்திற்குரியதாக கருதத் தக்கது. மேலும், ஆங்கிலத்தில் a, b என்ற பக்கப் பிரிவுகள் தமிழில் ஏ, பி என்று ஒலிபெயர்க்கப்பெற்றுள்ளன.

மொழிபெயர்ப்பின் தன்மை

சொல்=சொல் நிலையிலோ, தொடர்=தொடர் நிலையிலோ, பத்தி=பத்தி நிலையிலோ தமிழாக்கம் செய்யப்பெறவில்லை. அரிஸ்டாட்டிலின் இயற்பியல் தர்க்கவியல் பின்னணியில் எழுதப் பெற்றிருப்பமையால், அவற்றைத் தொடருக்குத் தொடர் மொழிபெயர்த்தால், புழங்கு தமிழில் அவை நெடுந்தொடர்களாக அமையும். புனைவற்ற மொழிபெயர்ப்பில் இத்தகு நெடுந்தொடர்கள் வாசிப்பு அயற்சியைத் தரத்தக்கன. ஆதலால், ஆங்கிலப் பனுவல் விளக்க முயலும் பொருள்தளத்தைப் பற்றிய கருத்துகளைத் தமிழாக்குதல் எனும் முடிவு எய்தப் பெற்றது.

இம்மொழிபெயர்ப்பானது கருத்துநிலையில் தமிழாக்கம் செய்யப் பெற்றிருக்கிறது. ஒரு கருத்தைப் பற்றிய நெடிய விவாதங்களின் முடிவிலும், ஒரு கருத்தை வரையறுக்குமிடத்தும், ஒரு கருத்தை வகைப்படுத்துமிடத்தும் ஆங்கிலநூல் தரும் தகவல்கள் தமிழில் கருத்தாக்கங்களாக உருப்பெற்றுள்ளன. தகவல்களின் சாரம் கருத்து. அக்கருத்துக்களே தமிழாக்கமானவை.

சான்று : ‘இப்போதுஎன்பது வரம்பு. இது காலம் அன்று. 22021

இக்கருத்தாக்கத்திற்கு வலுசேர்க்கும் வாதங்கள், விளக்கும் சான்றுகள் இத்தொடருக்கு முன்னும் பின்னும் உள்ளன.  அவையாவும் தெரிவிக்கும் முதன்மைக் கருத்தானது மேற்காண்பதே.

ஒலிபெயர்ப்பு

இயற்கை குறித்து அரிஸ்டாட்டில் கிரேக்கத்தில் பதிவு செய்த கருத்துகள் பிசிக்ஸ் எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. பிசிக்கி (Φυσικη) எனும் கிரேக்கச் சொல்லின் ஆங்கில ஒலிபெயர்ப்பே பிசிக்ஸ் (physics). இந்த ஒலிபெயர்ப்பே ஆங்கில நூலின் தலைப்பாக இருக்கிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆன் நேச்சர் (On Nature) ஆகும். ஆங்கில நூலின் பெயரான அரிஸ்டாட்டில் பிசிக்ஸ்’ (Aristotle Physics) ‘அரிஸ்டாட்டிலின் இயற்பியல்என்று தமிழாக்கம் செய்யப்பெற்றது. இங்கு, ‘பிசிக்ஸ்என்று ஒலிபெயர்ப்பதினும் ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் வழக்கத்திலிருக்கும்இயற்பியல்என்ற சொல்லைப் பயன்படுத்தல் தலையாயது. Φυσικη = இயற்பியல்.

நூலின் முகவுரையில் தரப்பெற்றுள்ள ஊர்பெயர்கள், நூலுள் இடம்பெறும் மனிதப் பெயர்கள் ஒலிபெயர்ப்புகளாகவே தமிழாக்கம் பெற்றுள்ளன.

-டு : பிளேட்டோ, அலெக்ஸாண்டர், ஏதென்ஸ், ‘ஏஜியன்கடல்

இவைதவிர்த்து, நூலுள் இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்கள் மொழிபெயர்ப்புகளாகவே தமிழாக்கம் பெற்றுள்ளன.  ஆங்கில நூலில் சான்றுகளுக்காகத் தரப்பெற்றுள்ள A B C... என்ற ஆங்கில அகர நிரல் எழுத்துகள் தமிழாக்கத்தில் தமிழ் அகர நிரலாக மாற்றப்பெற்றுள்ளன.

நிகரன்கள்

''நிகரான சொற்களைக் கண்டு அறிவதும் மூலமொழி நூலுக்கும், பெயர்ப்புமொழி நூலுக்கும் இடையே ஒத்த பொருளையுடைய சொற்களைக் காணுவதும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோரை அடிக்கடி மலைக்க வைக்கும் பெரும் சிக்கலாகும்'' என்பது அறிஞர் ஆர்.எம்.பகாயாவின் கருத்தாகும்.[5] அரிஸ்டாட்டில் இயற்பியல் நூலில் தனித்த சொற்களின் உரிய தமிழாக்கமே சொற்றொடரின் பொருள்தளத்தைக் கட்டியமைப்பதற்குரியதாக உள்ளது. ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்குவதில் மும்முறைகள் பின்பற்றப்பெற்றன.

1.     அகரமுதலி இணையத்தின்[6] வாயிலாக ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ச்சொற்கள் அடையாளங்காணப்பெற்றன.

2.     ஆங்கிலச் சொல்லுக்கேற்ற தமிழ்ப்பொருளை அடையாளங்கண்டு தமிழ்ச்சொல் கிடைப்பதில் தெளிவு கிட்டவில்லையெனில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி[7] வாயிலாகச் சொற்கள் எடுத்தாளப்பெற்றன.

3.     சொற்களுக்கு இணையான வேறு சொற்கள் பொருண்மை அடிப்படையில் தேவைப்படுகையில் தமிழ்மின் நிகண்டு வாயிலாகத் தெரிவு செய்யப்பெற்றன.

இவை தவிர்த்து, தமிழக அரசு வெளியிட்ட துறைசார் கலைச்சொல் அகராதியும், தேவையின் அடிப்படையில் சிகாகோ பல்கலை.யின் தமிழ் மின் அகராதித் தொகுப்பும்[8] பயன்படுத்தப்பெற்றிருக்கிறது. இத்தேடல்களுக்கு அடிப்படை நிகரன்களே. இவையே, மொழிபெயர்க்கு அடிப்படையானவை.

 “தியோடெர் சேவரி, ஜே.சி.காட்ஃபோர்டு, யூன் நைடா, ஆண்ட்டன் போபோவிக், நியூபெர்ட் மற்றும் லோத்ஃபூர் சையதி போன்றோர் நிகரன் பற்றிய கொள்கைகளை விளக்கியுள்ளனர்.”[9] அவை

·         மாய நிகரன் (Illusory Equivalent)

·         பாட நிகரன் (Textual Equivalent)

·         இயக்க நிகரன் (Dynamic Equivalent)

·         மொழியியல் நிகரன் (Linguistic Equivalent)

·         நடையியல் நிகரன் (Stylistinc Equivalent)

·         சொற்படிவ நிகரன் (Paradigmatic Equivalent)

·         பொருள் நிகரன் (Semantic Equivalent)

·         பயன்வழியியல் நிகரன் (Pragmatic Equivalent)

·         தொடர் நிகரன் (Syntactic Equivalent)

·         தொடர்பியல் நிகரன் (Communicative Equivalent)

அரிஸ்டாட்டில் இயற்பியல் தமிழாக்கமானது, கருத்தாக்க நிலையில் செய்யப்பெற்றமையால் சொற்றொடர் நிலையிலான மொழிபெயர்ப்பு குறித்துப் பேசும் வாய்ப்பு இல்லை. சொற்றொடரின் குறிப்பிட்ட சொல்லைத் தமிழ்ச்சொல்லாக்கும் முறையே இங்குள்ளது. காலம் குறித்த அரிஸ்டாட்டிலின் கருத்துகளை மொழிபெயர்ப்பதில் ஏற்பட்ட சொல்நிலைச் சிக்கல்கள் மட்டும் உரிய நிகரன் வகைமையில் இங்கு தரப்படுகின்றன.

பாடநிகரன்  

மொழிபெயர்ப்பாசிரியர் சொல்லின் பொருளுக்கு நிகரன் தேடுவதில்லை. மாறாக, மூலநூலில் காணப்படும் சூழலை இலக்கு மொழியில் உருவாக்கித் தருகிறார்என்பது நிகரன் பற்றிய மொழியியலறிஞர் ஜே.சி.காட்ஃபோர்டு-இன் கருத்து[10]. இவர் பாட நிகரனை இரண்டாக வகைப்படுத்துகிறார்.

·         சூழல் சார்ந்த நிகரன் (Contextual Equivalent)

·         பாடம் சார்ந்த நிகரன் (Co – textual Equivalent)

Time - காலம்

ஆங்கிலத்தின் டைம் (time) என்ற சொல்லுக்கு இணையாக நேரம்-காலம் எனும் இரு சொற்கள் தமிழில் உள்ளன. ஆனால், இவ்விரண்டுக்குமான பொருள் வரையறை வேறுபாடுடையது. தற்காலத்தில் சொற்றொடரின் பொருண்மை கருதி இவ்விரு சொற்களும் ஆளப்படுகின்றன. காலத்தின் குறிப்பிட்ட கூறு நேரம். நேரத்தின் அளவு காலம். காலக்குறுமைகளை நேரம் எனவும் நெடுமைகளை காலம் எனவும் கொள்ளலாம். கால அளவு நேரம். நேர அளவு காலம்.

காலம் என்ற சொல்லுக்கு காலப் பொழுது(time, duration) (காலப்பொழுது என்றே இடம்பெற்றிருக்க்க் கூடும், அச்சுப்பிழையாக இருக்க வாய்ப்புள்ளது[11]), விடியற்காலம்(dawn), தக்கநேரம் (proper time), நற்காலம் (fortune), குறித்தகாலம் (fixed time), கேடுகாலம் (evil time), இளமைக்காலம்(early stage of life), வாழ்நாள்(life time), இறப்புக்காலம் (time of death), அறுவகைப் பொழுது(season of the year), இறப்பு-நிகழ்வு-எதிர்வு எனும் மூவகைத் தொடர்ச்சிக்காலம் (tense, three in number viz., past, present and future), காலமெய்ப்பொருள்(the element time) முதலான 17 பொருண்மைகளைச் சுட்டுகிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.

மேலும், “தமிழிற்போல், கால், காலை என்ற சொற்கள் வடமொழியில் இல்லை. இவ்விரு சொல் போன்றே காலம் என்னும் சொல்லும் தமிழில் அடிப்படைச் சொல்லாகத் தொன்றுதொட்டு இருவகை வழக்கிலும் வழங்கி வருகின்றது. (கால் àகாலம். .நோ. வால் à  வாலம்)”[12] இதன் வழி, காலம் என்பது வழக்கத்திலுள்ளதமிழ்ச்சொல்என்பது தெளிவாகிறது.

தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்டதொல்காப்பியத் தகவல் பெறுவிமென்பொருள்வழித் தேடலில்  தொல்காப்பியத்தில் மொத்தம் 18 முறை காலம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. மேலும், கால (5முறை), காலத்தானும் (2முறை), காலத்தின் (2முறை), காலத்து (16முறை), காலத்தும்(2முறை), காலம்தாமே (1முறை), காலமும் (11முறை), காலமொடு (5முறை) எனும் சொற்களும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன[13].

தமிழில் நேரம் என்ற சொல்லுக்கு வினைநேருங்காலப்பகுதி(Time), தக்கசமயம்; வேளை(தருணம்); பொழுது (opportunity, season), இருசாமங்கொண்ட அரைநாள்; பகலிற் பாதியாகிய காலஅளவு (a measure of the day = 2 Šāmam = 1/2 pagal = about six hours), மணி (hour), இத்தனை மணியெனக் கணக்கிடும் காலஅளவு(length of time) எனப் பொருள் வரையறை செய்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.

நேரம் என்ற சொல் தொல்காப்பியத்தில் இடம்பெறவில்லை. மேலும், பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்கணக்கு நூல்களிலும் நேரம் என்கிற சொல் இடம்பெறவில்லை. “நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை மீட்டிடம் பெற்று (பெருங். உஞ்சைக்.57:74)”[14] எனும் அடிகள் வாயிலாகத் தமிழிலக்கிய வரலாற்றில் பெருங்கதை பனுவலில்தான் முதல்முறையாக நேரம் எனும் சொல் இடம்பெற்றுள்ளது தெளிவாகிறது. இதற்கு, “…… பெரிய பகலினது நாழிகையைத் தப்பாது அளந்து காணும் நாழிகைக் கணக்கர் உணவுண்ணும் பொழுதினையறிந்து பொருத்தமாகக் கூறிநிற்பவும் என்க[15] என பொ.வே.சோமசுந்தரனார் பொழிப்புரை தந்துள்ளார். இங்குகாலத்தின் குறுகிய அலகு/குறிப்பிட்ட கூறாக நேரம் சுட்டப்பெற்றுள்ளது.

எனினும், ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான மணிமேகலையில் மூவகைக் காலத்தையும் விளக்குமிடத்து இடம்பெற்றுள்ள

கால மூன்றுங் கருதுங் காலை
இறந்த கால மென்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கையா னவற்றை
நிகழ்ந்த காலமென நேரப் படுமே
(மணி 30/159,162)

அடிகள் நமக்கு காலம்<நேர்<நேரம் என்பதற்கான திறப்புகளைத் தருகிறது.

இவ்வாறு காலம்நேரம் என்ற சொற்கள் பொதுப்பொருண்மையில் time என்பதைச் சுட்டினாலும் தன்னளவில் தனித்த பொருண்மைகளைக் கொண்டுள்ளன. அதோடு, காலம் என்ற சொல் பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து அதற்கான தனிப்பொருண்மையும் மாற்றமடைகின்றது. போலவே, நேரத்திற்கும். நேரம் என்ற சொல்லின் உருவாக்கம் காலம் என்ற சொல்லுக்கான பரந்த பொருண்மைகளைச்  சுருக்கிவிட்டது எனலாம்.

தற்காலத் தமிழில் நேரம் காலம் இரண்டையும் எல்லாச் சூழல்களிலும் ஒரே பொருண்மையில் பயன்படுத்துவது சாத்தியமற்றதாகிவிட்டது. நேரத்தின் பொருண்மை காலத்துள் அடங்கும். காலத்தின் பொருண்மை நேரத்துள் அடங்காது. அரிஸ்டாடிலின் இயற்பியல் நூலில், இறப்பு நிகழ்வு எதிர்வு என்பவை பற்றியும் அதன்பின்னிருக்கும் மெய்யியல்பொருள்தளம் குறித்தும் பேசுவதால், பாடம் சார்ந்த நிகரனாக டைம் (Time) என்ற ஆங்கிலச் சொல் காலம் என்றே பெயர்க்கப்பட்டிருக்கிறது.

Now – தற்போது இப்போது

Now is a limit, it is not time (220a21) இப்போது என்பது வரம்பு, இது காலம் அன்று.

நௌ (Now) என்ற ஆங்கிலச் சொல்லானது, சொற்றொடர் எடுத்தியம்பும் கருத்தினடிப்படையில் இருவேறாக பெயர்க்கப்பட்டிருக்கிறது. காலத்தின் பகுப்பாகக் கொள்ளுமிடத்தில் நிகழ்காலம்என்றும், வரம்பாக வரையறுக்குமிடத்தில் இப்போதுஎன்றும் பெயர்க்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது என்பதிலிருந்து மருவியதே இப்போது. இப்போது என்ற சொல்லுக்கு, செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலி இப்பொழுது (திவ். இயற். பெரியதிருவ.87) (now, at this time)’ என்று பொருள் வரையறை செய்கிறது. தொல்தமிழ்ப் பதிவுகளில் இப்பொழுது என்பது பொழுது என்ற பொருண்மையைப் பின்னணியாக உடையது. ‘இப்போதுஎன்று மருவிய அதன் பொருள்தளம் சுட்டிக்குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ‘இப்போதுஎன்பதில் பொழுது என்ற பொருண்மை இல்லை. ‘இப்போதுஎன்ற சொல்லுக்கு நெருங்கிய பொருள்தளம் உடையது தற்போதுஎன்ற சொல். ஆனால், சுட்டிக் குறிக்கவும் பிறிதொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஓசை இயைபு கருதியும் தற்போது என்ற சொல்லின் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. நௌ(now) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக இப்போதுஎன்ற சொல்லே தமிழாக்கத்தில் ஆளப்பெற்றுள்ளது.

Part – பகுதி

The now is not a part of time (281a3)

நிகழ்காலம் (இப்போது) என்பது காலத்தின் பகுதி அல்ல.

பார்ட்(part) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பகுப்பைக் குறிக்கிறது. இந்த ஆங்கிலச்சொல்லுக்கு, கூறு, பகுதி, புத்தகப் பிரிவு, காண்டம், பாகம், சம்புடம், முழுமையின் சமக்கூறுகள் பலவற்றில் ஒன்று, ஒதுக்கப்பட்ட பாகம், பங்கீடு, செயலில் ஒருவரது பங்கு, கடமை, அரங்கில் நடிகருக்குக் கொடுக்கப்பட்ட நடிப்புப் பகுதி, அரங்கில் நடிகர் பேசுஞ் சொற்கள், அரங்கில் நடிகர் பக்கம், (இசை.) குறிப்பிட்ட குரல் அல்லது கருவிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பண், (வினை.) கூறுகளாகப் பிரி, தொடர்கிளைகளாகப் பிரி, வகிரெடு, சண்டை செய்பவர்களை விலக்கிவை, நண்பர்களைப் பிரித்து வை, வேறுபடுத்து, கூட்டுறவை விட்டொழி, (பே-வ.) பணங்கொடு, (வினையடை.) பகுதியாக, சிறிதுமட்டில், பாகத்தைப் பற்றிய மட்டில் என்ற தமிழ்ச் சொற்களைத் தருகிறது அகரமுதலி இணையதளம். ஆங்கிலப் பனுவலுள் இடம்பெற்ற பார்ட் எனும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பாகம், பகுதி என்ற சொற்களே பொருண்மையால் அருகே உள்ளன. பாகம் என்பதைப் பருப்பொருளின் பகுப்புகளாகவே கொள்ளவியலும். பருப்பொருளற்ற அருவப் பொருண்மைகளுக்கு பாகம் என்ற சொல் அணுக்கமானதாக இல்லை. பகுதி என்பதே அணுக்கமானதாக விளங்குகிறது. இலக்கணப் பின்னணியில் பகுதி தனித்த பொருள்தளமுடையது. பொதுத்தமிழில் அவ்வாறு இருப்பதில்லை. பகுப்பு என்பதிலிருந்தே பகுதி தோன்றியுள்ளது. ஆதலின், பார்ட் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக, பகுதி எனும் சொல்லே பயன்படுத்தப்பெற்றது.

பொருள் நிகரன்  

பொருளானது பொதுப்பொருள்(Referential Meaning), குறிப்புப் பொருள்(Connotative Meaning) என்று இருவகைப்படுகிறது. ‘இவற்றை அகராதிப் பொருள்(நுண்பொருள்), கருத்துப் பொருள்(மரபுப் பொருள்) என்றும் அழைப்பர்.’[16] அரிஸ்டாட்டிலின் இயற்பியல் புனைவிலி ஆதலால், பொதுப்பொருள் தன்மையிலேயே பெரும்பான்மை அமைகின்றன.  

Fast, Slow = விரைவு, குறைவேகம்

Change can be faster and slower, but time cannot, Since ‘fast’ and ‘slow’ are defined in terms of time (218b9)

மாற்றம் என்பது விரைவாகவும் குறைவேகம் உடையதாகவும் இருக்கலாம், ஆனால் காலம் அப்படியானதல்ல. விரைவு’, ‘குறைவேகம்என்பது காலத்தின் விதிகளுக்கு உட்பட்டது.

மாற்றத்தின் செயல்பாட்டைக் காலத்தின் பின்னணியில் குறிக்க ஃபாஸ்ட் (Fast), ஸ்லோ (Slow) என்ற ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பெற்றுள்ளன. விரைவின் அளவு வேகம். ஆதலால், ஃபாஸ்ட் என்ற சொல்லுக்குத் தமிழில் விரைவு என்ற சொல் பயன்படுத்தப்பெற்றது. இதற்கு எதிர்ப்பதமான, ஸ்லோ என்ற சொல்லுக்கு குறைவேகம் என்று பயன்படுத்தப்பெற்றது. மெதுவாக, மந்தமான போன்ற சொற்கள் இவ்விடத்தில் சுட்ட இடமிருந்தாலும், ஸ்லோ என்பது விரைவு அற்றதையே குறிப்பதால் ஒப்புத் தன்மையில் குறைவேகம் என்றே கொள்ளப்பெற்றது.

Number = எண், எண்ணிக்கை

Number is ambiguous (219b2)

எண் என்பது பொருள் மயக்கமுடையது

எண் என்பது பொருள் மயக்கமுடையது என்ற அரிஸ்டாட்டிலின் கருத்து நோக்கத்தக்கது. எண்ணும் எண்ணிக்கையும் ஒன்றல்ல. (பத்துபத்து ரூபாய்பத்து பைசாபத்து குதிரை). பொருள் நிகரனாக எண்ணும் எண்ணிக்கையும் தனித்து எடுத்தாளப்பெற்றுள்ளன.

Object = பொருள்

அரிஸ்டாட்டிலின் இயற்பியல் நூலில் பருப்பொருள்சார் பதிவுகள் இடம்பெறுகின்றமையால் ஆப்ஜெக்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பொருள் என்ற சொல் பயன்படுத்தப்பெறுகிறது. இதன் காரணமாக, மீனிங்(meaning) என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழாக்கத்தில் பொருள், பொருண்மை என்றோ பயன்படுத்த இயலாச் சூழல் நிலவுகிறது. இயற்பியல் துறையில் பொருள், பொருண்மை நுண்ணிய வேறுபாட்டுடன் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இத்துறையில் இவ்விரு சொற்களை வரையறைப்படுத்தப்பட்ட பொருள்தளத்துள் கட்டமைத்தலில் ஆய்வாளர்களிடையே ஒருங்குநிலை காணப்பெறவில்லை. துறைசார் பனுவல்களில் தேவையற்ற குழப்பங்களை வாசகர்களுக்கு விளைவித்தல் கூடாது. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலில் நெருடல் இருப்பினும், மீனிங் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புழக்கத்தில் இருக்கும் அர்த்தம் என்ற சொல்லே ஈடு செய்யப்பெற்றது.  

Thing = பொருள், (விசயம்)

திங்(Thing) என்ற ஆங்கிலச் சொல் பெரும்பாலும், தொடர்நிலையில்பொருள்என்பதைக் குறிக்கிறது. இதனைத் தமிழில் நேரடியாகச் சொல்லால் குறிக்கவேண்டிய அவசியமில்லை. சான்றாக,

All things are aged by time (221a26) = எல்லாவற்றுக்கும் காலத்தால் வயதாகிறது.  

இதில், பொருள் என்பது நேரடியாக இடம்பெறவில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் என்பதுள் பொருள் என்பதும் அடங்குகின்றது. திங் என்பது செயல்நிலையில் இருக்குமிடத்தில் சூழற்களன் கருதி விசயம்என்று பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. அதைத் தவிர்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பெற்று வருகிறது.

நிறைவுரை

அரிஸ்டாட்டிலின் இயற்பியல் நூலின் தமிழாக்கமானது கருத்தாக்க நிலையில் அமையப்பெற்றது. கருத்துகள் சொல், தொடர் அவை தாங்கிய பொருள் என்பதிலிருந்து வருவிக்கப்பெற்றன. கருத்தைக் கடத்தும் குறிச்சொற்களைத் தமிழாக்குவதில் இணைய அகராதிகள் பயன்படுத்தப்பெற்றன. முதன்மையாக, காலம் என்ற கருத்தாக்கப் பகுதிகளின் மொழிபெயர்ப்புத் தன்மையானது பாடநிகரன், சொல்நிகரன் அடிப்படையிலான அமைவு இம்மொழியாக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

 

துணைநூற்பட்டியல்

          இராஜேஸ்வரி செ., 1992, மொழிபெயர்ப்பியல் ஆய்வு, மதுரை: செல்லையா பதிப்பகம்

Robin Waterfield (Translator), 1996, Aristotle Physics, London : Oxford University Press.

 



[1] https://www.sramakrishnan.com/?p=11869

[2] Aristotle Physics, p. vii

[3] இத்தொகுப்பில், அரிஸ்டாட்டிலின்ஏதேனியர்களின் அரசியலமைப்பு’ (Constitution of the Athenians) என்கிற ஆக்கம் மட்டும் விடுபட்டுள்ளது. பெக்கரின் பதிப்பு வெளியானதன் பிறகே இது கண்டறியப்பட்டதால், தொகுப்பில் இடம்பெறவில்லை.

[4] Aristotle Physics, Oxford University Press, First Edition, 1996 ISBN 978-0-19-954028-0

[5] http://www.tamilvu.org/ta/courses-degree-p201-p2012-html-p2012063-27436

[6] https://www.xn--vkc6a6bybjo5gn.com/

[7]http://218.248.16.22/etytamildict/TamilDemo.aspx

[8] https://dsal.uchicago.edu/dictionaries/

[9] ராஜேஸ்வரி. செ., 1992, மொழிபெயர்ப்பியல் ஆய்வு, .1

[10] ராஜேஸ்வரி. செ., மொழிபெயர்ப்பியல் ஆய்வு, .3

[11] செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, இரண்டாம் படலம், இரண்டாம் பாகம், 2006, . 169

[15] சோமசுந்தரனார் பொ. வே (.), பெருங்கதை பகுதி 1 (உஞ்சைக்காண்டம்இலாவாணகாண்டம்), . 579.

[16] ராஜேஸ்வரி. செ., மொழிபெயர்ப்பியல் ஆய்வு, .10