பாவலரேறு நம்முடன் உள்ளார்...
-த.க.தமிழ்பாரதன்
-த.க.தமிழ்பாரதன்
தமிழன் மானமும்
அறிவும் உள்ளவனாகத் தன்னாடு-தன்மொழி-தன்வரலாறு- பெருமை அறிந்தவனாக வாழ்ந்திருந்த காலம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சென்று
மறைந்துவிட்ட்து. வந்தேறிகளான ஆரியப் பார்ப்பனக் கயவர்களுக்கு
வால்பிடிப்பதும் கால் கழுவுவதுமான ஈந்த பண்பாட்டில் மூழ்கித் தன்னடையாளங்களை இழந்தவன்
தமிழன். தமிழர்களியும் மலையாளிகளையும் ஒப்பிடும் ஆய்வியல் அறிஞர்கள்,
தமிழன் தன் மொழியைக் காப்பாற்றிப் பண்பாட்டை இழந்தான்.
-
மலையாளி தன் பண்பாட்டைக் காப்பாற்றி மொழியை (தமிழை) இழந்தான் என்று தெரிவித்தனர்.
தமிழ் மிகப்
பழைய மொழியாகதன்னையே திருத்தி அமைத்துக் கொள்ளத் தூண்டும் பேராற்றல்களைக் கொண்டதாக
இருந்ததுதான். ‘The
Oldest living Dravidian Language’ மிகப் பழைய, இன்றும் உயிர்வாழும் திராவிட மொழி என்று ஆக்சுபோர்டு அகராதி தெரிவிக்கிரதுதான்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு, ஐம்பேரிலயக்கியங்கள் எல்லாம் சரிதான்.
உள்ளே நுழைந்துதமிழன் வாழ்வைச் செல்லாய் அரித்த இழிதகைப் படிகள்
– இப்பிறவித் திருடர்கள், ஆரியப் பின்புலத்தினை
வேரோடு சாய்த்து தமிழ்ப்பெருமையை ஒரு நல்ல தலைவன் சிந்தனையாளர் வரிசைப் போராளிகளின்
பேரணி – தமிழகத்தில் உருவாகவில்லை என்பதுதான் வரலாறு.
தமிழ் தமிழன்
தமிழ்நாடு என்று நினைப்பது-பேசுவது-செயல்படுவது உயிருக்கு ஊறு தரும் செயலாக அன்றும்
இருந்தது; இன்றும் இருக்கிறது. இந்தப் பின்னணி
தான் அஞ்சலக அலுவலரை ‘அரிமாவகப்’ பாவலர்
ஏறுவாக ஆக்குகிறது.
மொழித்தூய்மை
தமிழினவிழிப்பு
தமிழக விடுதலை
ஆகிய மூன்று குறிக்கோள்களைத்
தமது நெஞ்சில் தாங்கி வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய பெருமைக்குரிய தமிழ்ப்பெருமகன்
பெருஞ்சித்திரனார்
படித்தவர்கள்
பலர் தமிழுணர்ச்சியின்றி வாழும் இக்காலச் சூழ்நிலையில், தமிழிலே தம் பெயரையோ கையெழுத்தையோ
எழுத எண்ணாத விரும்பாத தமிழர்கள் வாழ்கின்ற காலத்தில், தங்கள்
பெயர்களினையே தமிழுடன் ஆங்கில கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதும் தமிழறிஞர்கள் வாழும்
காலத்தில் தமிழுக்குத் - தனித் தமிழுக்கு முதன்மை கொடுக்கப் போரடியவர்
பாவலரேறு என்பதை யாவரும் அறிவர்.
பாவலரேறு வின் வாழ்க்கைச் சுவடுகள் |
ஆன்ற புலமையும்
ஆழ்ந்தகன்ற கல்வியும், ஆற்றல் மிக்க சொல்வன்மையும் அழுத்தம் நிறைந்த எழுத்தாற்றாலும், அஞ்சா நெஞ்சும், அளவிலா உறுடியும், அசையாத துணிவும், அயரா முயற்சியும் உடையவர் பாவலரேறு
என்பதைத் தமிழுலகு நன்கறியும்.
தமிழுக்காகவும்
தமிழகத்துக்காகவும் தமிழ் ஈழத்துக்காகவும் அவரைப்போல அல்லற்பட்டு, அடிபட்டு, சிறைப்பட்டு உழைத்த ஒப்புயர்வற்ற வீரத்தமிழ் மகன் செய்த செயல்களனைத்தும் தனித்தமிழ்
வரலாற்றின் முதன்மையானவை.
மறைமலையடிகளின்
தூய தமிழ் முயற்சிகள், தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தில் பரவல் நிலைகள், பாவேந்தர் பாரதிதாசனாரின் எழுச்சியெரிமலைப்பாவெடிப்புப் பரவல்கள் போன்ற பன்னிலை
உயிர்ப்புகளைத் தமிழ்மண் உட்கொள்ளத் தொடங்கிய முகிழ்ப்புப் பருவத்தில் 1933
மார்ச்சு 10இல் பாவலரேறு தோன்றினார். அவர் கண்டு வந்த சமூக வளர்ச்சிப் படிநிலைகளின் உந்துதலால் தமிழுக்காய்ப் பல்வேறு
பணிகள் செய்து வந்தார். மொழித்திருத்தமும் நாட்டுவிடுதலையும்
மக்கள் பண்பாட்டு வளர்ச்சியும் எங்கள் உயிரும் உணவும் நீரும் ஆகும் என்பதை துணிவோடும்
பணிவோடும் கூறிக் கொள்கிறோம் ! என்ற அறைகூவலை 1959ஆம் ஆண்டில் வெளிவரத் தொடங்கிய தென்மொழி இதழியில் குறிப்பிடுகின்றார்.
பிரிவினைத்
தடைச்சட்டம், தனித்தமிழ்நாடு , தமிழகம் பிரிதலே தக்கது, பிரிவிஐ நோக்கித் தள்ளப்படுகிறோம், விடுதலை பெறுவது முதல்
வேலை, இந்தியாவின் அரசியல் வீழ்ச்சியும் தமிழனின் விடுதலை எழுச்சியும்,
பிரிவினை தவிர வேறு வழியில்லை, யாருமில்லை நாங்கள்தாம்,
தமிழகப் பிரிவினை தேவையே – என்றெல்லாம் தொடர்ந்து
1963 தொடங்கி 1970 வரை ஆசிரியவுரைகள் எழுதித் தமிழக
விடுதலைத் தேவையை விளக்கப்படுத்தியிருந்தார்.
பாவலரேறுவின் வரிகளில் எனக்குப் பிடித்தது.,
‘கெஞ்சுவதில்லை பிறர்பால்!
அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை’ எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும்
எதிர்நின்றே !
பா வரிகளால் பாவலரேறுவைப் பிடித்தது.,
ஓய்ந்திடல் இல்லை, என் உள்ளமும்
உணர்வும் உயிர்ச்செறிவும்!
தேய்ந்திடல் இல்லை, என் விரல்களும்
தாளும் ! திரிந்தலைந்து
சாய்ந்திடல் இல்லை, என் உடலும் ;
எனவே சலிப்பிலனாய்
மாய்ந்திடல் வரையும் உழைப்பேன்,
உரைப்பேன், மக்களுக்கே !
வள்ளுவனின்
அறிவுப் புலமையும், கம்பனின் மொழிப்புலமையும் வாய்க்கப்பெற்ற இந்த மாணிக்கப் பேரொளி தமிழ்வானில்
இருள் நீக்கும் கதிர். அவரது தமிழ்ப்பற்றை இன்றும் என்றும் நோக்க
வேண்டியது முதன்மையானது. பலரும் முன்னோடியாய் கொள்ள வேண்டிய தமிழ்மகனவர்.
அவரது மொழி குறித்த சிந்தை இன்றைய இளம் காளையர்க்கு வாய்ப்பின் அதுவன்றோ
எம் தமிழகத்தின் சீர்த்த எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
விடுதலை வேண்டும் அதுமுதல் வேலை !
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை !
நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில்
விழுந்து இறப்பை எதிர்னோக்கிய போதும் அவர்
‘நாட்டை நசுக்கும் நயவஞ் சகர்களின்
பாட்டைச் சிதைக்காமல் எனுடல் படுப்பதா’ எனக் குமுறினார்.
அவரது வாழ்வின் நினைவுகளை
நினைந்து போற்றினார் பாவலர் காசி ஆனந்தன்.
தன்னுயிர் போகினும் மண்ணுயிர்
உள்ளவரை இந்த மக்கள் உள்ளத்தின் கிழக்கின் இருளைப் போக்கும் கார்காலக் கதிரவனாய் என்றும்
நிறைந்திருக்கிறார் பாவலரேறு.
பிறந்த தாய்மண் உயிர்த்தெழப்
பிறந்தார்…
பெருஞ்சித்திரனார்.., அவர்பணி தொடர்க!
மறந்தும் மாற்றார் தலைமை ஏற்காதே !
மண்டியிட் டெவர்க்கும் தொண்டியற் றாதே!
சிறந்த தமிழர் வழிவழி வந்தாய்…
சின்ங்கொண் டெழடா! தளைகள் அகற்று !
பறந்த னசிறை மதிலும் கதவும்
பார்! என எழுக! எழுகநீ!
எழுகவே!
பெருஞ்சித்திரப் பெருஞ்சிறப்பே! நீ தமிழுக்கு – தமிழர்க்கு – தமிழ்நாட்டுக்கு வாராது வந்த மாமணி.
ஆயிரம் ஆண்டில் ஒருமுறை தோன்றும் வீர இலக்கியம், வீரியச் சித்திரம்! நீ விதைக்கப்பட்டிருக்கிறாய்.
வீரமாய், செறிவாய், திறன்
விளைக்கும் திடத்தோள் பலவாய் அறுவடை நிகழும் நாள் அண்மையில் தான்.
-த.க.தமிழ்பாரதன்
(15.07.2017 அன்று நடைபெற்ற மாநில அளவிலான பெருஞ்சித்திரனார் நினைவு பேச்சுப் போட்டியினை முன்னிட்டு வெளிவர இருந்த இதழுக்காக எழுதியது)
(15.07.2017 அன்று நடைபெற்ற மாநில அளவிலான பெருஞ்சித்திரனார் நினைவு பேச்சுப் போட்டியினை முன்னிட்டு வெளிவர இருந்த இதழுக்காக எழுதியது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக