நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

இறப்புக்கு ஆதார் அவசியமா ? வள்ளுவர் கூறுவது என்ன ....?

2017இல் தமிழக - இந்திய அரசியல்களம் மிக சூடாக இருக்கிறது. அன்றாடம் புதிய புதிய அறிவிப்புகள், அரசியல் மாற்றங்கள் என மக்களை வைபிரேட் மோடிலேயே வைத்திருக்கிறது சூழல்.  இதற்கொப்ப, புதிய மீம்கள் தயாரித்து நெட்டில் விடுவதும் பழைய கருத்துருக்களை மீட்டுருவாக்கம் செய்து வெளியிடுவதும் அன்றாடமாகிவிட்டது நெட்டிசன்களுக்கு. 

உலகப் பொதுமறை என எல்லாராலும் மேன்மைபடுத்தப்படுவது நம் திருக்குறள். எக்காலத்திற்கும் ஏற்ற அறக்கருத்துகள் திருக்குறளில் காணப்படுகின்றன என்பது மெய். அப்படி நேற்று ஓவியா பிக்பாஸ் விட்டு வெளியேறிய போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது ஒரு திருக்குறள்.

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடி சேர்ஆதார்
(சேராதார்) 

இக்குறள் ட்ரெண்ட் ஆக்கப்பட்டதன் பின்னணி :
இறப்பைப் பதிவுசெய்வதற்கு ஆதார் அவசியம் என்று அறிவித்த மத்திய அரசுஇறப்புச் சான்றிதழ் பெற ஆதார் அவசியமில்லை எனப் புதிய விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இறப்புக்கும் ஆதார் அவசியம் என்றதும் அடிப்படை வசதிகள் அனைத்துக்கும் ஆதார் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துவருகிறது.
இந்நிலையில், 'ஒருவரின் இறப்பைப் பதிவுசெய்ய ஆதார் கட்டாயம்என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படிஅக்டோபர் 1-ம் தேதி முதல் இறப்பைப் பதிவுசெய்ய ஆதார் கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் 4-ம் தேதி உள்துறை அமைச்சகத்தின் மக்கள்தொகை தலைமைப் பதிவாளர் வெளியிட்டார். இந்த வெளியீட்டிற்குப் பின்னர் இறப்பு பதிவுஇறப்புச்சான்றிதழ் என அனைத்துக்கும் ஆதார் எண் அவசியமா என்ற குழப்பநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

இதை உணர்ந்த மத்திய அரசுமீண்டுமொரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படிஆதார் எண் இறப்புப் பதிவுக்கு அவசியமென்றும்இறப்புச் சான்றிதழ் பெற ஆதார் அவசியமில்லை என்றும் அறிவித்துள்ளது.


இப்படித்தான் ட்ரெண்ட் ஆனது.,

இறப்பு பதிவு செய்ய பிற்காலத்தில் ஆதார் தேவைப்படும் என்பதை 2000 வருஷத்துக்கு முன்னாடியே தீர்க்கதரிசி திருவள்ளுவர் எப்படிச் சொல்லிருக்கார் பாருங்க ! 

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடி சேர்ஆதார்
 

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:10

இறைவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவரால் கடக்க முடியாது என்பது இக்குறளால் அறியவரும் கருத்து. ஆனால், தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் உத்தரவுபடி ஆதார் இல்லாமல் இறப்புச் சான்றிதழ் பெற முடியாது என்பதால் (சேராதவர் – சேர்ஆதார்) ஆக்கி ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.  

இவ்வாறு வள்ளுவத்தை இந்நாளிலும் தங்கள் கருத்துகளுக்குப் பக்கபலமாகக்கொள்ளும் திறனும் வலிமையும் இன்றைய தலைமுறைக்கு இருக்கிறது. இந்த வள்ளுவத்தை இணையத்தோடு விட்டுவிடாமல், வாழ்க்கையோடு இணைந்து வாழ்ந்தால் மகிழ்ச்சி நிச்சியம்.
  
ஆதார் நிச்சயம் வேண்டும் என்கிற மத்திய அரசின் போக்கைப் பார்த்தால்,

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை ஆதார் என்பதாகிவிடும் போல.

த.க.தமிழ்பாரதன்
30.07.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக