A Best Year in my life 2016
ஆகச் சிறந்த வாய்ப்புகள் வழங்கிய ஓராண்டு 2016
ஆகச் சிறந்த வாய்ப்புகள் வழங்கிய ஓராண்டு 2016
- முதல் வாக்குப்பதிவு
- முதல் தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பணி
- முதல் பட்டிமன்ற நடுவர்
- முதல் முறை தொலைக்காட்சி பேச்சரங்கப் பணி
- முதல் முறை மாநிலத்தில் பேச்சில் முதல் பரிசு
- முதல் முறை மாநிலத்தில் கவிதையில் முதல் பரிசு
- கவிதை முதல் அச்சுப் பிரதி வெளியீடு
- முதல் ஆல்பம் பாடல் எழுதியது
- திருவிக கல்லூரி தொடர்சாதனையாளர் விருது
- தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை
- தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக பல்லாயிரம் கிமீ பயணம்
இன்னும் ஏராளம் தந்து சென்றிருக்கிறது 2016
2016
என்னை பலரோடு இணைத்தது : Watsapp
என்னை என்னோடு இணைத்தது : இலக்கியப் பட்டறை
என்னை பலரோடு இணைத்தது : Watsapp
என்னை என்னோடு இணைத்தது : இலக்கியப் பட்டறை
இந்த 2016ஆம் ஆண்டு துவக்கத்தில் தான் நான் ச்மார்ட் போன் வாங்கினேன். அதுவும் நான் தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தினமலர் நடத்திய போட்டிகளில் வென்று வந்த ரொக்கம் கொண்டே வாங்கினேன்.
உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 ஆம் தேதியோடு முடிவெய்திய இளந்தமிழர் இலக்கியப் பட்டறை எனக்கு மிகப்பெரிய பரந்த வெளியை அறிமுகப்படுத்தி ஆட்சி செய்ய அதிகாரமளித்தது.
என் வாழ்வின் வசந்த காலத்தின் வாயிற்படிகளிலிருந்து முழுவதும் விடுபட்டு எதிர்காலம் எனும் காலப் பேழைக்குள் அடியெடுத்து வைத்தேன்.
திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரி, எனதுத் திறன் மீதான என் நம்பிக்கையை விசாலமாக்கியது, தலைவனாக்கியது, எழுத்து ஆளனாக்கியது. கல்லூரியின் ஒவ்வொரு தென்றல் காற்றிலும் என் மனவாசனை வீசிக்கொண்டே யிருக்கும்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிலையில்லாத் தன்மையிலே உள் சென்றாலும், என்னை இரு மாதங்களுக்கு உள்ளாகவே நிலைநிறுத்திவிட்டேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் கல்விப் பயணத்தின் ஒப்பற்ற இடத்தை பிடித்துள்ளது பல்கலை. படிப்பு.
நீ கலைத் துறை மாணவனா ? நீ அறிவியல் துறை மாணவனா ? என்று கேட்கும் போது நான் ”அறிவியல் தமிழ் மாணவன்” எனச் சொல்லுமளவிற்கு இயற்பியலில் இருந்து துறையை தமிழுக்கு மாற்றிய ஆண்டு.
பேச்சுத் துறையிலும், எழுத்துத் துறையிலும், ஊடகத் துறையிலும் எண்ணற்ற ஆளுமைகளை அவர்களுடன் அளவளாவிய ஆண்டு.
எனக்கும் என் மனதிற்குமான உலகை உலகறியச் செய்த ஒரு நாள் ஏப்ரல் 09 2016. எனது கட்டுப்பாடுள்ள கட்டற்ற கவிதைகளின் களினடனம் புரித் தொகுப்பு ”எழுத்துப் பறவை” கையெழுத்துப் பிரதியாக வெளிவந்தது.
தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு சென்று வந்த வருடம் இது, பல மனிதர்கள், பல செயற்பாட்டாளர்கள், பல கருத்தரங்குகள், பல மனோ நிலையாளர்கள், பல சிந்தனையாளர்கள் என பன்முக மனிதர்களின் மொத்தக் கூடாரத்தையும் ஒற்றை மனிதனாய் சந்தித்தது.
முகநூலில் 2000க்கும் மேற்பட்டவர்கள் நண்பரான ஆண்டு.
வாழ்க்கை இது தான் என்று ஒவ்வொருவரும் பாடம் எடுக்கிறார்கள்., ஆனால், என் வாழ்வை நான் மட்டுமே வாழ முடியும் என்பதே மெய் என்பது ஆழ் மனதில் அடிக்கடி வந்துதித்து நம்பிக்கைத் தருபவை.
நல்லதெனினும் தீயதெனினும் நானிலம் மீதினில் நானறிந்து நடக்கும் அனைத்தும் என் மனதால் முழுதும் அகழ்வாயும்.
பெரும்பாலும் தனிமையில் காலம் தள்ளிய எனக்கு கலையுலகில் தனியுலகில் என பல நூறு நண்பர்களை வாரி வழங்கிய ஆண்டு., தோழர்களும் தோழிகளும் தோள் கொடுக்கும் தூரம் மட்டும் தொலையாது, தொலைதூர இலக்குள்ள முகவரிகள்.
நான் கடக்க வேண்டிய பாதை எனக்குமானதாக எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதே அவா.
அந்த வகையில் மேலும், யாம் இடம் பிடிப்பதற்கான ஒப்பற்ற ஆண்டாக 2017 அமைய வேண்டும் என நம்புகிறேன்.
2017இன் கருதுகோள் = 2018இல் அறிவீர்கள்
-த.க.தமிழ்பாரதன்
http://tamilbharathan.blogspot.in/
http://tamilbharathan.blogspot.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக