சனி, 5 ஜூன், 2021
கோவிஷீல்ட்-கோவாக்சின் வேறுபாடு என்ன?
புதன், 19 மே, 2021
ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்துத் தமிழ்ப் பெயர்கள்
ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்துத் தமிழப்பெயர்கள்
பூவொன்று நின்றிருந்தது சாலையில்...
(முன்குறிப்பு
:
மாவரைக்கச்
சென்றிருந்தேன் மாலையில்
பூவொன்று
நின்றிருந்தது சாலையில்…
இப்படித்
தொடங்கும் கவிதை எழுதி முடிச்சாச்சு., அவங்கள
பாக்கும் வாய்ப்பு கிடச்சிதுனா சொல்லிட வேண்டியதான்.,)
*
மாவரைக்க வேண்டும். அம்மா பணித்தாள். அந்தி மாலை நேரம். நீண்ட சாலையோரம். முதல்முறை செல்கிறேன் அங்கு.
மில்-லைத் தேடிய கடைக்கண் பார்வையை நில்லென்று சொல்லவில்லை அவள், நின்றுவிட்டது வண்டி அவளுக்குப்
பக்கத்தில்.
இயல்பில் இரைச்சலான இடம்கூட அவள்
இருப்பதால் அமைதி கொண்டது. வாசலில்
அல்காரிதப் பாத்திரங்கள், பவா
செல்லதுரையான மனிதர்கள் என இல்லாத மின்சாரம் இயல்பைக் கலைத்துப் போட்டிருந்தது.
வெளியே வருகிறோம்! என எந்தப் பிரயத்தனங்களும்
செய்திருக்கவில்லை. உம்மென்ற
முகம். கடந்துவந்த மேகமாய் கலைந்த ஆடை. கொண்டைக்கு கூடப்பிறந்த தங்கையென சிகை. ‘இருள்வானில் ஒளிவீசும் முழுநிலவு’க்கு எதிர்ப்பதமென அஞ்சனமிலா கண்கள். இந்தக் கண்களை பார்ப்பது அரிது. அரிதென்றால் அரிதினும் அரிது. வளரிளம் குழந்தைகள் மட்டுமே பட்டா
வைத்திருக்கும் இந்தக் கண்களுக்கு.
லேடி பேர்ட்-ஐ அச்சாணியாய்க் கொண்டு ஊசலாய்
அலைந்தன கால்கள். கட்புலனாகாத
கொலுசு செவிப்புலனானது. யாருக்கேனும்
காத்திருப்பவளோ, மாவரைக்க
வந்தவளோ, மாலையிலே பூத்திருக்கும் அல்லிப்பூ
இவள்தானோ என்ற விவரங்கள் ஏதொன்றும் அறியமால் நிகழ்ந்தன கண் சந்திப்புகள்.
யாரென்று தெரியவில்லை, ஏதொன்றும் அறியவில்லை.ஆனாலும் அழகு. அலட்டிக்கொள்ளாத அழகு. இந்த பிரக்ஞை இருந்தால் உடனுறையும்
கர்வம் வெளிப்படவேயில்லை. “இங்க
யாரும் இவ்ளோ அழகா இப்படியொரு அழகைப் பார்த்ததில்லை” என்றிருப்பேன் தைரியம்
இருந்திருந்தால்.
ஊசல் கால்கள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. காரைக்கால் பண்பலையில் “யாரிந்த முயல்குட்டி, உன் பேரென்ன முயல்குட்டி…” ஒலிப்பதாய் மனதுக்கு மட்டும்
கேட்டுகொண்டது.
கண்நடத்திய பேச்சுவார்த்தைகள் மட்டும் நான்கைந்து சுற்றுகளைக்
கடந்தன. இதுவே
அதிகபட்சம்தான் சிறுநகரங்களில். வலித்திருக்கும்
கால்கள்போல. கால்களில் கைகளை
முட்டுக்கொடுத்த பாட்டியிடம்
பேச வந்தாள், பேசினாள்.
பாட்டியுடன் மாவரைக்க வந்திருக்கிறாள் என்பது உறுதியானது. பட்சியாக இருந்திருந்தால் ‘இது லவ் தான ஜெஸ்ஸி’ என்றிருக்கும்.
நிமிடங்களின் நிறைவில்., லேட் பேர்ட்-இல் பறந்தது றெக்கை இல்லா
தேவதை. பிறகென்ன, பெங்களூரில்
பணிபுரியும் உறவினரின் அறிவுரையின்
பேரில் காலை போட்ட கொரோனா தடுப்பூசியால் உடல்வலியெடுக்கும் இதுவரை மருந்து மாத்திரையே அறியாத பாட்டியுடன்
நட்பாகியாச்சு. (இன்னும் எத்தனை காலம்தான் நட்பாகுவது இந்த பாட்டிகளுடன்..)
நல்லா பேசினார். நிறைய பேசினார். மின்சாரம் வந்து
மாவரைத்த பெரும்வாளியை கைதூக்க முடியாமல் சென்ற பாட்டியிடம் நான் வேண்டுமானால் கொண்டுவந்து
தரட்டுமா என்றேன். என்னமோ தெரியவில்லை ‘வேண்டாம்பா’ என்று விட்டார்.
வியாழன், 29 ஏப்ரல், 2021
கரும்பு தந்த தீஞ்சாறே கனிதந்த நறுஞ்சுளையே - பாரதிதாசன் கவிதை
கரும்பு தந்த தீஞ்சாறே
கனிதந்த நறுஞ்சுளையே
கவின்செய் முல்லை
அரும்புதந்த வெண்ணகையே
அணிதந்த செந்தமிழே
அன்பே,
கட்டி
இரும்புதந்த நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலை
ஈடழித்து
வரும்புதுமை நினைக்கையிலே
நெஞ்சு பதைக்கும் சொல்ல
வாய் பதைக்கும்
எடுத்துமகிழ் இளங்குழந்தாய்
இசைத்துமகிழ் நல்யாழே,
இங்குள்ளோர் வாய்
மடுத்துமகிழ் நறுந்தேனே
வரைந்துமகிழ் ஓவியமே
அன்பே,
வன்பு
தொடுத்து மகிழ் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
தோன்றா வண்ணம்
தடுத்துவரல் நினைக்கையிலே
நெஞ்சுபதைக்கும் சாற்ற
வாய் பதைக்கும்
பண்டுவந்த செழும்பொருளே
பார் அடர்ந்த இருட்கடலில்
படிந்த மக்கள்
கண்டு வந்த திருவிளக்கே,
களிப்பருளும் செந்தமிழே
அன்பே,
வாழ்வில்
தொண்டுவந்த நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
துளிர்க்கா வண்ணம்
உண்டுவரல் நினைக்கையிலே
உளம் பதைக்கும் சொல்வதெனில்
வாய்பதைக்கும்
உடலியக்கும் நல்லுயிரே
உயிரியக்கும் நுண்கலையே
மக்கள் வாழ்வாம்
கடலியக்கும் சுவைப்பாட்டே
கண்ணான செந்தமிழே
அன்பே,
நாட்டில்
கெடல் இயக்கும் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைக்
கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே
நெஞ்சுபதைக்கும் பகர
வாய்பதைக்கும்
வையத்தின் பழநிலவே
வாழ்வுக்கோர் புத்துணர்வே
மயிலே, மேலோர்
ஐயத்திற் கறிவொளியே
ஆடல்தரும் செந்தமிழே
அன்பே,
தீமை
செய்யத்தான் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
தீர்க்க எண்ணும்
மெய்யைத்தான் நினைக்கையிலே
நெஞ்சுபதைக்கும் விளக்க
வாய்பதைக்கும்
- பாரதிதாசனார், தமிழியக்கம் நூலிலிருந்து
(சந்தி சேர்க்கப்பெற்று, கவிதையின் பொருள் மாறா வண்ணம் தற்காலத்தினர் படிக்கும் இலகுவாக அரிதான மேற்படி மாற்றங்கள் செய்து பதிவேற்றப் பெற்றுள்ளது)
ஞாயிறு, 25 ஏப்ரல், 2021
புதுமைப்பித்தன் மின்னூல்கள் இலவசம் | அமேசான் கிண்டில்
புதுமைப்பித்தன்
சிறுகதைகள்:
https://www.amazon.in/dp/B07CP58YSY/
உலகச்
சிறுகதைகள் முழுத்தொகுப்பு:
https://www.amazon.in/dp/B07D93N2GR/
பிரேத
மனிதன்:
https://www.amazon.in/dp/B0924C1DKM/
நாரத
ராமாயணம்:
https://www.amazon.in/dp/B08CCJVZPG/
சிற்றன்னை:
https://www.amazon.in/dp/B086JD7RY8/
ஆண்மை:
https://www.amazon.in/dp/B07H9D5GQW/
பளிங்குச்
சிலை மொழிபெயர்ப்புக்
கதைத் தொகுதி:
https://www.amazon.in/dp/B07H731LYH/
ஷேக்ஸ்பியர்
நாடகங்கள்: கதை வடிவில்:
https://www.amazon.in/dp/B07DD328SK/
வேதாளம்
சொன்ன கதை:
https://www.amazon.in/dp/B083N1G2Y1/
புதுமைப்பித்தன்
வரலாறு:
https://www.amazon.in/dp/B088PZQS9S/
புதுமைப்பித்தன்
சிறுகதைகள்:
https://www.amazon.in/dp/B07CP58YSY/
உலகச்
சிறுகதைகள் முழுத்தொகுப்பு:
https://www.amazon.in/dp/B07D93N2GR/
பிரேத
மனிதன்:
https://www.amazon.in/dp/B0924C1DKM/
நாரத
ராமாயணம்:
https://www.amazon.in/dp/B08CCJVZPG/
சிற்றன்னை:
https://www.amazon.in/dp/B086JD7RY8/
ஆண்மை:
https://www.amazon.in/dp/B07H9D5GQW/
பளிங்குச்
சிலை மொழிபெயர்ப்புக்
கதைத் தொகுதி:
https://www.amazon.in/dp/B07H731LYH/
ஷேக்ஸ்பியர்
நாடகங்கள்: கதை வடிவில்:
https://www.amazon.in/dp/B07DD328SK/
வேதாளம்
சொன்ன கதை:
https://www.amazon.in/dp/B083N1G2Y1/
புதுமைப்பித்தன்
வரலாறு:
https://www.amazon.in/dp/B088PZQS9S/
வியாழன், 25 மார்ச், 2021
வந்தநிலையும் வருநிலையும்... | கல்வெட்டு | தமிழறிஞர் வ.அய்.சு எழுதிய கடிதம்
#வந்தநிலையும்வருநிலையும்
தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்றுள்ளேன் சிலமுறை. முதன்மைக் கட்டிடத்தின் அருகே செல்லும் வாய்ப்பு கிட்டியது இன்றுதான்(25.03.2021).
அலுவல் கட்டிடம் அது . பெரிய கல்வெட்டு ஒன்றிருந்தது அதன்முகப்பில். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய்.சு எழுதிய கடிதமே அந்தக் கல்வெட்டு.
அதைப் படித்ததும் (வடிவேலுவின் குரலில்) "என்னா மனுசன்யா... " என்றிருந்தது.
கல்வெட்டில் இருந்த வ.அய்.சு அவர்களின் கடிதம், அப்படியே இதோ...
*****
வாழ்த்து..
இன்று (31.07.86) மாலை ஐந்து மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து
ஆய்விற்காக நான் திருவனந்தபுரம் செல்கிறேன்.
பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல்
பிறர்கையில் மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்லும் உணர்வு ஏற்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களனைவருடன் உழைத்துத்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில்
ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது.
இணைந்த செயற்பாடும், உறவு முறையும், தமிழுக்காகச் செய்கின்றோம்
என்ற மனநிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம்.
இவற்றிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் போன்ற ஒன்றன்று.
இது உயராய்வு மையம். இங்கே அறிவுசான்ற சிலரே இடம்பெற முடியும்.
இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்த்த்
தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குட்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதைப்போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயற்பட வேண்டும்.
என்று ஆய்வின் தரம் குறைகிறதோ
அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்து விடும். நல்கைகள் குறையும்;
பொருள் முட்டுப்பாடு தோன்றி,
தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வளர்க்கும்
இந்த நிறுவனம் நிலை குலைந்துவிடும்
இதனை ஒவ்வொருவரும் நினைவிற் கொள்வது நன்று.
இதன் வாழ்வும், வளர்ச்சியும்
ஒவ்வொரு ஆய்வாளர்/அலுவலர் கையில் எப்போதும் இருக்கும்.
“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்று அடிகள்
நமக்கு மனப்பாடம்.
‘அறநெறி’ தவறாமல் செயல்படுவதே பெரும் அரச வெற்றி’ என்று
அசோகன் கல்லெழுத்தில் கூறியதும் நமக்கு நினைவிருக்கலாம்.
தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியைத் தமிழர் அனைவரும்,
ஏன் பிற மாநிலத்தார் கூட உன்னிப்பாக்க் கவனித்து வருவர்.
அயல் மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில்
அகலவிருந்து பார்த்து
உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும்.
தளர்ச்சியிருப்பின் என்முகம் வாடும்.
அன்றுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதித்தால்
நான் காலமான பின் என்னுடற் சாம்பலின் இம்மியளவைத்
தஞ்சைத் தென்வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே
வளர்ந்த மரத்தடியிலும்,
காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட
என் குழந்தைகள் அனுப்புவர். புதைத்திடுக.
நீங்களனைவரும் வளமுற வாழ வாழ்த்துகிறேன்.
-
வ.அய்.சுப்பிரமணியன்
துணைவேந்தர்
31.07.1986
*****
நிற்க,
அண்மையில், NAAC வழங்கும் புள்ளிகள் பட்டியலில் தமிழ்ப் பல்கலைக்கழகம் B+ நிலைக்கு இறங்கியுள்ளது. இதனால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வ.அய்.சு அவர்களின் முகம் வாடியிருக்கும்தானே!
- தக | 25.03.2021