நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சனி, 15 ஆகஸ்ட், 2015

காலம் செய்த கோலம்

காலம் செய்த கோலம் 
காலத்தின் 
கோலத்தில்
கோலம் கூட
வரைபடம் ஆனது.

யார் செய்த கோலம் ....
https://www.facebook.com/photo.php?fbid=1683917158493494

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

முகநூல் வேந்தர் எனும் தமிழ் பாரதன்

எனக்கு கணினி அறிமுகப் படுத்தப்பட்டதே என்னுடைய பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான். 2௦௦4 சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டில் முதன் முதலில் கணினி வாங்க வேண்டும் என கடைக்கால் இட்டு 2௦1௦க்கு பின்னால் அது முழுமையடைந்தது. ஆனால், அதன் பயன்பாடு எனக்கு முழுவதும் தெரிவதற்கு மூன்றாண்டுகளுக்கும் மேலானது. பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் விடுமுறைக்கு சென்னையில் சித்தப்பா தங்கியிருந்தேன். அந்த நாட்களில் தான் கணினியை விட இணையம் பரிச்சயமானது.
அந்த நாட்களில் நான் கற்றுக் கொண்ட பாடம் தான் இந்நாள் வரை வேகமாக இயங்க வைக்கிறது. எனக்கு கணினி பற்றி ஓரளவுக்கு தெரிந்தாலும், இணையத்தை இரண்டு முறை 1௦ ரூபாய்க்கு அரசு நூலகத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். படம் பார்ப்பதற்கு கணினி என்று நிலை மாறி, இன்றைக்கு நான் எடுக்கும் குறும்படம் முழுமையும் என்னால் தொகுக்கப்பட்டு(editing) வெளியிட முடியும் எனும் அளவிற்கு பயன்படுத்த தகுதிப் படுத்திக் கொண்டேன். இணையத்தில் முதன்முதலில் எனக்கு முகநூலை தான் அறிமுகம் செய்தார்கள்.
சித்தப்பா Ravindran தான் எனக்கு மின்னஞ்சல் துவக்கி, முகநூலை துவக்கி தந்தார்கள். முகநூலின் வீச்சை அன்றைக்கு நான் உணர்ந்ததில்லை. எப்போதும் எனக்கொரு பழக்கமுண்டு. “ஒரு காரியத்தில் இறங்கும் போது, அதன் பின் விளைவுகளையும்., அதன் தொலைநோக்கு அம்சங்களையும் எடுத்து சீராய்ந்து மனதிற்கு பட்டத்தை செய்வது”. அந்த வகையில் முகநூலை ஆரம்பித்தவுடன் எனக்காக ஒன்றும் பிறருக்காக ஒன்றும் ஆரம்பித்தேன்.
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது சுதந்திர தின, குடியரசு தின உரைகள் நிகழும், அதை மொழிபெயர்ப்பு செய்து வானொலியில் வெளியிடுவார்கள். “ஓஹோ! வானொலியில் பேசினால் ஒரே நேரத்தில் நாம் சொல்லும் நற்கருத்து, இந்தியா முழுவதும் பரவும்., அத்தகு செயலை செய்வதற்கு நாம் குடியரசுத் தலைவராகவோ, பிரதமராகவோ ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தழைத்து ஓங்கியது”. அதற்கான முன்னோட்டமாக அறிவியல் தொழில்நுட்பம் முகநூல் என் கருத்தை உலகெங்கும் அளித்து நவீனப்படுத்தியது.
குடியரசு தலைவர், பிரதமர் எனும் பதவிக்கான முன்னோட்டமாக கூட இதை கையில் எடுத்தேன். எப்போதும் செய்யும் செயல்களை வேறுபட்ட கண்ணோட்டத்துடன் அணுகும் போது, வெற்றி பெறத் துவங்குகிறோம். பேஸ்புக் கணக்கு துவங்கி ஐந்து மாத காலம், முன்னோட்டம் என்று சொல்லலாம். முதன் பதிவாக 04.08.2013ம் தேதி நண்பர்கள் தினத்தைப் பற்றி பதிவேற்றினேன். அதற்குப் பின் மனதில் பட்டதில் சிறந்தவற்றை பதிவேற்றியது உண்டு., பதிவேற்றியவுடன் நீக்கியதும் உண்டு.
நான் பதிவேற்றிய படங்கள், காணொளிகளில் எனக்கு மிகவும் பிடித்தது,https://www.facebook.com/butterbharathan1/videos/vb.100006256782775/1458293267722552/?type=3&theater மேற்கண்ட காதலர் தின காணொளி தான். எனக்கான ஒரு அடையாளத்தை தந்தது., அந்த காலத்தில் கிட்டத்தட்ட 5௦௦க்கும் மேற்பட்ட நட்பு கோரிக்கைகள் வந்திருந்தது. ஆனால், follower பற்றியெல்லாம் எனக்கு அப்போது தெரியவில்லை. அந்த காணொளி பதிவிற்கு பின்னால் தான், மேலும் நடையை மாற்ற வேண்டியதாயிற்று. அது முதல் இது வரை முகநூலில் மூன்றிக்கும் மேற்பட்ட பக்கங்களை நிர்வகித்து வருகிறேன் சிறப்பாக (!) .
லைக்குகள், கமெண்டுகள் இவற்றை வைத்து எந்த வித பணமும் சம்பாதிக்க இயலாது என்பது தெரிந்த ஒன்று. ஆனால், நான் கூறக் கூடிய செய்தி ஏதேனும் ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்வில் சிறு சிந்தனைத் துளியையாவது விதைத்திருக்கும் என்கிற காரணத்தால் பல மணி நேரம் என் கருத்தை சொல்வதைப் போல பிறர் கருத்தையும் அறிவதற்கு செலவிட நேர்ந்தது. பல வீடுகளில் சாற்றப்படும் கூற்றுகளைப் போன்ற திட்டுகளும் என்னை வந்து சேரும். மாதம் 7௦௦ ரூபாய்க்கும் மேலாக இணையத்திற்காக பணம் கட்டும் போது தான் தேவையில்லாமல் செலவு செய்கிறோமோ? எனும் எண்ணம் வரும். ஆனால், அவற்றிற்கெல்லாம் விடையாக “நான் சரியாகத் தான் பயன்படுத்தி இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தி இருக்கிறது, (Facebook King Award) முகநூல் வேந்தர் விருது”.
சமூகத்தின் நான் யார் என்பதற்கான அடையாளத்தை முகம் தெரியாத நண்பர்களுக்கு அளித்தது இந்த முகநூல். அதே போல் வெவ்வேறு தளங்களில் பயணித்தவர்களை இணைக்கும் பாலமாக இருப்பதும் இதுவே. உலகின் முதன் முயற்சியாக தமிழகம் முழுவதிலும் இருக்கக் கூடிய முகநூல் பயன்பாட்டாளர்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்திருக்கிற காஞ்சி முத்தமிழ்சங்கம்த்திற்கு பாராட்டுகள்.
நான் திருவாரூர் பகுதி மற்றும் தமிழகத்தின் பல போராளிகள் முகநூல் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்கிறார்கள் என்பதையே முதலில் தெரிவித்தேன். இனி வரும் ஆண்டுகளில் இது போன்ற ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தப்படும் என்று கூறிய சூ.லாரன்ஸ் பொதுக் செயலாளர், காஞ்சி முத்தமிழ் சங்கம் அவர்களுக்கு நன்றி. விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் இருந்ததால் சாலச்சிறந்ததாக கடந்த ஓராண்டாக எப்பதிவும் நான் செய்யவில்லை என்கிற மனத் தோற்றம் எனக்குண்டு. இருந்தாலும் அவ்வப்போது தலைகாட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
26.௦7.2௦15 அன்று முகநூல் வேந்தர் விருதை பெறும் நாள். விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் நிறைவு விழா முடிந்து மதியம் வேக வேகமாக தி.நகரில் இருந்து தாம்பரம் வந்து அங்கிருந்து காஞ்சிபுரம் நின்றே பயணித்து, காஞ்சிபுரத்தில் இருந்து திரும்புகையில் திண்டிவனம் வரை உட்கார இடம் கிடைக்காமல் வழக்கத்தை விட மாறுபட்ட நாளாக அமைந்தது.
எதிர்கால இலக்குகளுக்கும் எனது இயல்பான வாழ்க்கைக்கும் இடையேயான பயணத்தை கடந்து செல்லும் இந்தப் பாதையில் கிடைத்திருக்கும் முகநூல் வேந்தர் விருதினை Ravindran Kalyanasundaramஅவர்களுக்கு சமர்பிக்கிறேன்.
படத்தில் கு.ஞானசம்பந்தன் அவர்களுடன்
த.க.தமிழ் பாரதன்

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

உலகின் எதையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்...,

உலகின் எதையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்...,

https://www.facebook.com/photo.php?fbid=1680182885533588&set=a.1382304238654789.1073741827.100006256782775&type=1&theater
உலகின் எதையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்...,
போராட்டக்காரர்கள்,
மாணவர்கள்,
பத்திரிக்கையாளர்கள்,
எளிமையானவர்கள்,
இந்த நான்கு வல்லமை பெற்றவர்களில் எல்லாமாகவும் நாங்கள் இருந்திருக்கிறோம், இனி இருக்கவும் போகிறோம்., இளைமைக்கு உரிய துடிப்பு, நேரம் நோக்கி அறியும் நுட்பம், முழு ஈடுபாடு என பல்வேறு செயல்களில் முழுமையான வெற்றி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் ஒரு வருடம் மிகவும் வேகமான ஓட்டம், எங்களுக்கும் காலத்திற்கும். சீரான இடைவெளியில் பலரும் தங்களின் திறன்களை வெளிப்படுத்தி இருக்கிறோம். அதற்கான பலன்களை பல வகையில் அடைந்திருக்கிறோம்.
பயணம் துவங்கிய இடத்தில் பலர் இருந்தனர். பயணம் முடிவதற்குள் பலர் பிரிந்தனர். இறுதி நாள் வரை இருந்தவர்கள் நாங்கள். அனைவருக்குள்ளும் ஏதேனும் ஒரு திறன் இருக்கிறது. தன் வாழ்க்கைப் பயணத்தோடு கூடிய மற்றொரு பயணத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் தகுதி ஒரு சிலருக்கு தான் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதை கொண்டு திறனை மேம்படுத்தியிருக்கிறோம்.
பத்திரிக்கையாளர் பயிற்சி முடிந்த பின்பு நாங்கள் பெற்ற மகிழ்ச்சி செய்த வேலைக்கான பரிசு. அதைத்தாண்டி இங்கு கிடைத்த நண்பர்கள் தான் அதிசயமூட்டும் பரிசு. பலவகைகளில் தங்களை மேம்படுத்தி இந்நாட்டிற்கும் வீட்டிற்கும் அடையாளம் தர காத்திருப்பவர்கள். இந்த ஒவ்வொருவரும் தனித்திறன் மிக்கவர்களாகவே உரு பெற்றிருக்கிறார்கள்.
உடனடி கவிதை, ஒரு வரி நகைச்சுவை, விசாலமான பார்வை, எடுத்துரைக்கும் எழுத்து நடை, அபாயகராமான உழைப்பு, சலிக்காத ஓட்டம், என பலருக்கும் பல முகம். நாங்கள் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்படலாம். ஆனால், அன்றைக்கும் இன்று போல், என்றும் சிரித்த முகத்தோடு, விரிந்த பார்வையோடு, தெளிந்த நோக்கோடு செயல்படல் அவசியம். நமது செயல்களால், நம்மைப் போன்றவர்களின் செயல்களால், நாடு மேன்மை அடைவதை யாராலும் தடுக்க இயலாது.
நமது வாழ்க்கையில் சந்திர மண்டலத்தை தாண்டிய தூரம் காத்துக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு இலக்குகளில், வெவ்வேறு பார்வையோடு சென்ற நாம் ஒன்றிணைத்த ஓரிடம் விகடன். இனி ஒரு கணம் எல்லாரும் ஒரே நேரத்தில் சந்திப்பது சாத்தியமாகுமா ? என தெரியாத வேலையில் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே .
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்....
த.க.தமிழ் பாரதன்
02.08.2015

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே....

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே....

https://www.facebook.com/photo.php?fbid=1680138852204658&set=a.1388013374750542.1073741829.100006256782775&type=1&theater

எந்நாளும் மறக்க முடியாததாக 
என்னாலும் மறக்க முடியாததாக
விளங்கக் கூடியதுமான
பள்ளிப் பருவத்து நட்புகள்

நோக்கத்தின் திசையறிந்து
ஊக்கத்தினை தரும் முதலிடம் நட்புகளுக்கே.

வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2௦11 முதல் 2௦13 வரை
தமிழ் வழியில் மேல்நிலைப் பிரிவு கணிதம்-உயிரியல் படித்த மாணவர்கள்.

பொறியாளர்களாகவும், தொழில் நுட்பவல்லுனர்களாகவும், சமூக அக்கறை உள்ளவர்களாகவும், அதிகாரிகளாகவும், சமூகத்தில் கடை நிலை ஊழியனாகவும், அடிப்படை பணியாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கின்றனர் தற்போது.....

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே....