நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

உலகின் எதையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்...,

உலகின் எதையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்...,

https://www.facebook.com/photo.php?fbid=1680182885533588&set=a.1382304238654789.1073741827.100006256782775&type=1&theater
உலகின் எதையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்...,
போராட்டக்காரர்கள்,
மாணவர்கள்,
பத்திரிக்கையாளர்கள்,
எளிமையானவர்கள்,
இந்த நான்கு வல்லமை பெற்றவர்களில் எல்லாமாகவும் நாங்கள் இருந்திருக்கிறோம், இனி இருக்கவும் போகிறோம்., இளைமைக்கு உரிய துடிப்பு, நேரம் நோக்கி அறியும் நுட்பம், முழு ஈடுபாடு என பல்வேறு செயல்களில் முழுமையான வெற்றி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் ஒரு வருடம் மிகவும் வேகமான ஓட்டம், எங்களுக்கும் காலத்திற்கும். சீரான இடைவெளியில் பலரும் தங்களின் திறன்களை வெளிப்படுத்தி இருக்கிறோம். அதற்கான பலன்களை பல வகையில் அடைந்திருக்கிறோம்.
பயணம் துவங்கிய இடத்தில் பலர் இருந்தனர். பயணம் முடிவதற்குள் பலர் பிரிந்தனர். இறுதி நாள் வரை இருந்தவர்கள் நாங்கள். அனைவருக்குள்ளும் ஏதேனும் ஒரு திறன் இருக்கிறது. தன் வாழ்க்கைப் பயணத்தோடு கூடிய மற்றொரு பயணத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் தகுதி ஒரு சிலருக்கு தான் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதை கொண்டு திறனை மேம்படுத்தியிருக்கிறோம்.
பத்திரிக்கையாளர் பயிற்சி முடிந்த பின்பு நாங்கள் பெற்ற மகிழ்ச்சி செய்த வேலைக்கான பரிசு. அதைத்தாண்டி இங்கு கிடைத்த நண்பர்கள் தான் அதிசயமூட்டும் பரிசு. பலவகைகளில் தங்களை மேம்படுத்தி இந்நாட்டிற்கும் வீட்டிற்கும் அடையாளம் தர காத்திருப்பவர்கள். இந்த ஒவ்வொருவரும் தனித்திறன் மிக்கவர்களாகவே உரு பெற்றிருக்கிறார்கள்.
உடனடி கவிதை, ஒரு வரி நகைச்சுவை, விசாலமான பார்வை, எடுத்துரைக்கும் எழுத்து நடை, அபாயகராமான உழைப்பு, சலிக்காத ஓட்டம், என பலருக்கும் பல முகம். நாங்கள் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்படலாம். ஆனால், அன்றைக்கும் இன்று போல், என்றும் சிரித்த முகத்தோடு, விரிந்த பார்வையோடு, தெளிந்த நோக்கோடு செயல்படல் அவசியம். நமது செயல்களால், நம்மைப் போன்றவர்களின் செயல்களால், நாடு மேன்மை அடைவதை யாராலும் தடுக்க இயலாது.
நமது வாழ்க்கையில் சந்திர மண்டலத்தை தாண்டிய தூரம் காத்துக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு இலக்குகளில், வெவ்வேறு பார்வையோடு சென்ற நாம் ஒன்றிணைத்த ஓரிடம் விகடன். இனி ஒரு கணம் எல்லாரும் ஒரே நேரத்தில் சந்திப்பது சாத்தியமாகுமா ? என தெரியாத வேலையில் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே .
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்....
த.க.தமிழ் பாரதன்
02.08.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக