நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Wednesday, 17 May 2017

நீட் போல கெடுபிடி இல்லை.,ஆர்ப்பாட்டமின்றி மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு 2017

இன்றைய சூழலில் எல்லாராலும் நீட் தேர்வைப் போல மிகுந்த முக்கியத்துவம் தரப்படாவிட்டாலும், மாணவர்களால் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு இன்று (17.05.017) தொடங்கியது.

இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. இதில் பெறும் மதிப்பெண்களே அவர்களது உயர்கல்வியை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டாக அமையும். அதன் காரணமாக பெரும்பான்மையான இடங்களில் கோச்சிங் சென்டர்கள் அமைத்து மாணவர்களுக்குப் பல்வேறு நிறுவனங்கள் பயிற்சி வழங்கி வந்தனர். 
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதியவர்களில் ஒரு பகுதியினர்


பொது நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 19 வரை இருந்தது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வு இன்று தொடங்கியது.

இந்த தேர்வுகளை நாடு முழுவதிலுமிருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

இளங்கலைமுதுகலைஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்குமான பொதுநுழைவுத் தேர்வு இதுவாகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியாவில் 10 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு என்பதால் தான் விரும்பிய துறை, விரும்பிய பல்கலைக்கழகத்தை எங்கிருந்து வேண்டுமானலும் மாணவர் தேர்ந்தெடுக்க முடியும். அதற்கு இந்த பொது நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமே அடிப்படையாகும்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் முகப்புப் பலகை

இன்று காலை திருவாரூர் அருகே நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைகழகவளாகத்தில் 2330 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் சென்னைகோவைதிருச்சிமதுரைநாகர்கோவில்திருவாரூர் ஆகிய 6 தேர்வு மையங்களிலும் 7476 மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளை எழுதி வருகின்றனர். தேர்வுகள் இன்றும்நாளையும் நடைபெறுகின்றன.

இந்த பொது நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் நடந்தேறிய கண்டனத்திற்குரிய செயல்கள் ஏதுமின்றி இலகுவாக நடைபெற்று வருகிறது மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான 2017 பொது நுழைவுத் தேர்வு.

-த.க.தமிழ்பாரதன்

No comments:

Post a Comment