நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 16 மார்ச், 2019

முன்னாள் காதலி | கவிதை (!?)

 முன்னாள் காதலி(ல்+இ)க்கு
<3 b="">

கல்லூரி சேர்ந்த நாளில்
காலை பொன்வெயிலில்
கரண்ட் மிஷின் போட்டு
தாடியத் தான் நான்குறைக்க,
வீட்டுக்கு வந்தவக, போறவக
எல்லாரும் என நகைக்க
இல்லாத முடியத்தான்
இழுத்து இழுத்து குறைச்சேனே,

ரோட்டோரம் போகையில
பெரிய கண்ணாடிகள்ல்
வச்ச கடைகளில்,
என்னழகை நான்பார்க்க
எதிர்வந்த பயணிகள்
எதிர்ப்புக்கு ஆளாக.,
எதிர்பாராத விபத்துகள்
பலநாளில் செய்தேனே,

அரைஇன்ச் வளர்ந்த முடியை
அரைமணி நேரமாக
அளந்து வெட்டச் சொல்லி,
உத்தரவு நான் போட,
சலூன் கடைக்காரன்
சாவுகிராக்கி வந்துடுச்சின்னு
சலசலத்த மனப்பேச்சு
என்காதில் விழலையே...

முகத்தை அழகாக்க,
பளபளன்னு வெளுப்பாக்க
கண்ட கிரிம்மெல்லாம்
கன்னத்தில் நாந்தடவ,
முஸ்லீமு மவன்போல
முழுசா மாறிட்டான்னு
சொன்னாங்க பலபேரு.

ஜிம்முக்கு நான்சேர,
இருநூறு செலவு செய்ய
சில்லெனெ வியர்த்த உடம்பு

சிக்குன்னு மாறயில
தப்பான ஒரு பயிற்சி
தலையில விழுந்திடுச்சே.!

ஒருவருடம் ஜிஎச்சில்
உட்கார்ந்து விட்டேனே.

பலவருஷம் முடிஞ்சிருச்சி
எலும்பெல்லாம் கூடிருச்சி

அரியரை கிளியர் பண்ண
காலேஜு நான் போக,
ஹால் சூப்ரவைசரா வந்தா
என் ஸ்டைல மாத்தச் சொன்ன
மங்கை மாங்கல்யத்தோட... ;(

-த.க.

(2014இல் கவிப்பேரரசு வைரமுத்துவின் தோழிமார் கதை படித்தபின், அம்மொழி நடையைக் கைக்கொள்ளும் பொருட்டு, எழுதப்பெற்றது)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக