நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 13 மார்ச், 2019

yours shamefully 2 விமர்சனம்


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

கடைசியாகப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வோடு திருக்குறளை இரண்டு மதிப்பெண்ணுக்கு அடமானம் வைத்ததோடு சரிவாழ்க்கையில் அதைப் பயன்படுத்துவதைப் பற்றி ஒரு போதும் சிந்திக்கவில்லைஅப்படி சிந்திப்பதற்கு இடம்தராத வகையில் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் சமூகப் போராளிகள் என தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களைத் தலையில் குட்டியிருக்கும் குறும்படம் தான் Yours Shamefully 2 #Devdiya (யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி2).
பிஹைன்வுட்ஸின் யூடியூப் பக்கத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த வேளையில்பிப்ரவரி 26 அன்று வெளியான இந்தக் குறும்படம் 48 மணிநேரத்தில் 57இலட்சம் பார்வைகளைக் கடந்துள்ளதுசமூக வலைதளங்களில் ஒரு புறம் புல்வாமா - அபிநந்தன் - #saynotowar ஆகியவைப் பரவலாகப் பேசப்பட்டாலும்இக்குறும்படமும் கடந்த இரு நாட்களாகப் பேசுபொருளாக இருக்கிறதுசமூக வலைதளங்களில் உண்மையற்ற செய்தியைப் பகிர்வதால் ஏற்படும் விளைவுகளை முதன்மைக் கதைக்களமாகக் கொண்டது இக்குறும்படம்.
கதைச்சுருக்கம்
நவீன சமூகத்தின் கட்டற்ற பாலியலைப் பேசும் டீசர் ஒன்று வெளியிடப்படுகிறதுஅதற்கான சமூக வலைதளப் போராளிகளின் மதிப்பீடுகளைக் காட்டிக்கொண்டு கதைத் தொடங்குகிறதுடீசரில் சுட்டப்பட்ட நேரத்தில் பேஸ்புக் நேரலையில் குறும்படத்தை வெளியிட ஒரு பெண் தோன்றுகிறார்அவரே நாயகிஉடைகளை ஒவ்வொன்றாகக் கழட்டிக் கொண்டு குறும்படத்தை வெளியிடப்போவதாக அறிவிக்கிறார்அவரே இக்குறும்படத்தை கதைசொல்லியாக நகர்த்திச் செல்கிறார்ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக நடந்த ஒரு விசயத்தை (நடந்ததாக நம்பப்பட்ட ஒரு செய்தியைஅவர் சொல்கிறார்.
தனியார் வாகன ஓட்டுநர் ஒருவர்தன்னுடைய வாகனத்தில் மாயா என்கிற பெண் தனிமையில் இருக்கும் போதுஅவர் முன்னிலையில் சுய இன்பம் செய்வதாகவும்அதனால் தான் பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கருதி பேஸ்புக்கில் அந்த ஓட்டுநரின் படத்தோடு தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தஅது மிகுந்த அளவில் சமூகவலைதளத்தில் பகிரப்படுகிறதுஇந்தத் துணிகர செயலுக்காக மாயாவை தமிழக முதலமைச்சர் பாராட்டுகிறார்’ என்பதே ஐந்தாண்டுக்கு முன்னடந்தது.
மேலும்அந்த ஓட்டுநரால் தன் வாழ்விலும் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறித் தன் கடந்தகால நிகழ்வை விவரிக்கிறார் நாயகிஒரு நாள் இரவுகேப் புக் செய்கிறார்அதே ஓட்டுநர் வாகனத்தில் இல்லத்திற்குச் செல்கிறார்இல்லத்தைத் தன் தோழி பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டதால்நாயகி காத்திருக்க வேண்டியிருக்கிறதுதன் செல்போன் ஆஃப் ஆனாதல்தோழியைத் தொடர்பு கொள்ளமுடியவில்லைதோழியின் எண்ணும் நினைவில் இல்லை.  (ஓலா கேப் காரில் யூஎஸ்பி கேபிள் இருந்திருக்கும்அதைப் பயன்படுத்தி செல்போன்க்கு சார்ஜ் ஏற்றியிருக்கலாம்பின்தோழியிடம் பேசியிருக்கலாம் !) ’நான் பாத்துக்குறேன் நீங்க போங்க’ என்று சொல்லியும் தோழி வரும் வரை நாயகிக்குப் பாதுகாவலாகக் காத்திருக்கிறார் ஓட்டுநர்தோழி வந்தவுடன் எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள அறிவுரை சொல்லி நகரும் போது, ‘சாரிபயத்துனால் தான் அப்படி ரியாக்ட் பண்ண வேண்டியதா போயிடுச்சி’ என்று சொல்லஓட்டுநரோ ’பரவால்லங்கநாங்க தான் சாரி சொல்லனும்நைட்டு பத்து மணிக்கு மேலஒரு பையனைப் பார்த்தாலே ரேபிஸ்ட் போல தோன்றுமளவிற்கு இந்த சொசைடியை மாற்றி வைத்திருக்கிறோம்’ என்று கூறிவிட்டுச் செல்கிறார்.   
பின்ஒரு நேர்முகத்தேர்வில் பி.ஈ பட்டதாரியான ஓட்டுநரும் நாயகியும் மீண்டும் சந்திக்கிறார்கள்பின் தொடர்ச்சியாக சந்திக்கிறார்கள்அதன் தொடர்ச்சியாக காதல் வயப்படுகிறார்கள்ஒருநாள் இரவு நாயகியோடு போனில் பேசிக்கொண்டே கேப் ஓட்டிக்கொண்டிருக்கும் போதுதான் ஒரு சம்பவம் நடக்கிறதுசவாரி செய்யும் பெண் புகைப்பிடிக்க முயலகாரினுள் புகைப்பிடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறார் ஓட்டுநர்.    
ஓட்டுநருடனான விவாதத்திற்குப் பின்அவனை ஒரு படமெடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார் புகைப்பிடிக்க முயன்ற பெண்அவள் தான் மாயா. ’மயிலாப்பூரைச் சேர்ந்தவளாக இயக்குநரால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் மாயா எழுதிய பேஸ்புக் பதிவு பல பகிர்வுகளைக் கடக்கிறதுசமூகவலைதளங்களில் பேசுபொருளாகிறதுஇதனிடையே கைதாகி பெயிலில் வெளிவருகிறார் கார் ஓட்டுநர் தேவ்எந்தவொரு வேலையில் சேர்ந்தாலும்அவன் மேல் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு அவனை வெகுவாகப் பாதிக்கிறதுசமூகமும் புறக்கணிக்கிறதுஅவனது நியாயத்தை யாரும் கேட்பதில்லைஎன்பதை நாயகி கூற இறுதியில் என்ன நடக்கிறது என்பது கதை.
சமூகவலைதளங்களில் பதிவேற்றப்படும் பொய்ச்செய்திகளை அதன் உண்மைத் தன்மையறிந்து பகிராததன் விளைவுகளை முதன்மையாகக் கொண்டு குறும்படம் நிறைவுற்றிருக்கிறதுஆனால்அதைக் காட்சிப்படுத்த கையாளப்பட்டிருக்கும் முறை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே அமைகிறது.,
எங்கிருந்து கதைக் கட்டமைப்பு எடுத்தாளப்பட்டிருக்கிறது?
தமிழில் வெளியான லென்ஸ் திரைப்படத்தில் கணவன் மனைவி இருவரின் முதலிரவு வீடியோ Two lips (2லிப்ஸ்என்ற பெயரில் இணையத்தில் பரவிவிடும்சில நாட்களில் அந்தப் பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வாள்தற்கொலைக்கு முன்பான மரண வாக்குமூலத்தை கேமிரா முன் காட்டிவிட்டுகணவனிடமும் தந்தையிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வாள் பேசமுடியாத அந்தப் பெண்.
அந்த வீடியோ உலகம் முழுவதும் எல்லாரும் பார்க்கப்பட வேண்டும் என்பது அவளது இறுதி ஆசை.  ஆனால்கணவன் அதை வெளியிட மாட்டான்அவர்களது முதலிரவை முதல்முறையாக இணையத்தில் பதிவேற்றியவனைக் கண்டறிந்துஅவனுக்கு அவனது தவறை ஸ்கைப் வீடியோ கான்வர்சேஷன் வழியாக உணர்த்தி அவன் கண் முன்னாலேயே கணவனும் தற்கொலை செய்து கொள்வான்அந்த இருவரின் தற்கொலைக் காணொளியை “two lips ends” என்ற பெயரில் இணையத்தில் பதிவேற்றுவான்.
அந்த டெம்ப்ளேட்டை அப்படியே Yours Shamefully 2 குறும்படத்திலும் பின்பற்றி இருக்கிறார்கள்தன் மீது அப்பட்டமாக சுமத்தப்பட்ட குற்றத்திற்கு நேரலையில்நடந்த உண்மையை எடுத்துரைத்துக் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க முனைந்து இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்லென்ஸ் திரைப்படத்தில் குற்றவாளி ஒரு தனிநபர்ஆனால்இக்குறும்படத்தில் சுட்டப்பட்டிருக்கும் குற்றவாளி தனித் தனி நபர்களால் இணைந்த ஒட்டுமொத்த சமூக வலைதளமேயாகும்.



பெண்களுக்கெதிரான குறும்படம் :
பாலியல் துன்புறுத்தல்களை தைரியமாக வெளியே வந்து சொல்வதற்கான களமாக #Metoo போன்ற இயக்கங்கள் வளர்ந்து வருகிற சூழலில் இது போன்ற படைப்புகள் பெண்கள் முன்வைக்கும் உண்மையான குற்றங்களை ஏளனம் செய்வதாக அமைந்துவிடுகிறதுபெண்களை குற்றவாளிகளாகச் சித்தரித்து தற்போது பொதுப் புத்தியில் பெண்கள் மீதிருக்கும் வன்மக் கருத்துக்களுக்கு வலுசேர்ப்பதற்கான படைப்பாகவே இது இருக்கிறது.
அன்றாடம் பேருந்திலோஇல்லத்திலோகல்வி நிலையத்திலோஅலுவலகத்திலோபொது வெளியிலோ பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்கிப் பெருகிவருகின்றனவயது பேதமின்றி பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் நடந்து வருகிற சூழலில்இந்தப் படம் அவற்றை மட்டுப் படுத்துவதற்கான களமாக இருந்திருக்க வேண்டும்ஆனால்அதைச் செய்யத் தவிர்த்திருக்கிறது.
ஆணாதிக்கக் கண்ணோட்டம் :
புகைப்பிடிக்க முயலுவதாக இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கும் மாயா என்ற பெண்பாப் கட்டிங் தலையுடன், Sleevless (கையற்றஉடையணிந்து போதையில் தள்ளாடிக்கொண்டிருப்பாள்தான் என்ஜிஓவைச் சேர்ந்தவள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வாள்அவள் காரினுள் சிகரெட் பிடிக்கக்கூடாதென ஓட்டுநர் தடுத்ததால்அவனைப் படமெடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறான் என பொய்யாகச் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவார்ஒரு சுடிதார் அணிந்த அல்லது புடவை கட்டிய பெண்ணை முறை தவறிய பெண்ணாகக் காட்சிப்படுத்த குறும்படக் குழுவினரால் ஏன் முடியவில்லைஎனில்உடை ஒருவரது நடத்தையைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்குமா?
பாப் கட்டிங் தலையில்ஸ்லீவ்லெஸ் உடையணியந்து போதையில் தள்ளாடி சிகரெட் பிடிக்க முனையும் ஒரு பெண்ணைக் காட்சிப்படுத்தியிருப்பதன் மூலம் ஸ்லீவ்லெஸ் அணிபவர்கள் / சிகரெட் பிடிக்கும் பெண்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்ற பிம்பத்தை முன்வைக்கிறார்கள்ஸ்லீவ்லெஸ் அணிபவர்கள் பெரும்பாலும்வளர்ச்சியடைந்த சமூகத்தின் உயர் மட்டத்தில் இருக்கின்ற மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்எனில்அப்படிப்பட்டவர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டு தங்கள் சுய லாபத்திற்கானதாகவே இருக்கிறது என்பதை மறைபொருளாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
முன்வந்து தங்கள் பிரச்சினைகளைச் சொல்லவரும் பெண்களை இதுபோன்ற அவதூறுகளால் அடக்கி வைத்திருப்பதால்இன்னும் சொல்லாமலே உள்ளத்துக்குள் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும்.
நீங்களெல்லாம் குற்றவாளிகள் உங்களால் தான் இந்த நிலைக்கு வந்தோம் எனக் கூறும் பெண், ஆண்களைப் பார்த்து அவர்களின் தாயின் பத்தினித் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் சொல்லைப் பயன்படுத்துகிறார். பெண்ணை இழிவுபடுத்தும் சொற்களை வசையாகக் கொள்வதை ஆமோதித்திருக்கிறது படம்.
எங்கே நம் நனவிலி மனம் தடைபடுகிறது ?
ஸ்லீவ்லெஸ் உடையும்சிகரெட் பிடிக்கும் குணமும் ஒரு பெண்ணைத் தவறாகச் சித்திரிப்பதற்கு இடமளிக்கிறது என்றால், 21ஆம் நூற்றாண்டிலும் எத்தகைய பிற்போக்குப் பின்னணியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்பொதுப்புத்தியில் தரம் தாழ்ந்த பெண் என்றாலே இப்படித்தான் என்கிற கட்டமைப்பை காலங்காலமாக வந்த படைப்புகள் ஏற்படுத்தியுள்ளனஒரு பெண் தான் விரும்பியதைச் செய்ய இடையூறாக இருக்கும் எவர் மீது வேண்டுமானாலும்பாலியல் புகார் அளிக்க முடியும் ஏற்க முடியுமா?
ஒரு பெண்ணைக் கால் டாக்ஸி ஓட்டுநராகக் காட்சிப்படுத்த முடியாதுமேலும்பொது இடத்தில் ஒரு பெண் சுய இன்பம் செய்து கொள்கிறாள் என்பதனைக்  கற்பனைகூடச் செய்யமுடியவில்லைஇதே வேளையில்ஒரு ஆண் பொதுவெளியில் சுய இன்பம் செய்துகொள்கிறான் என்பதை முற்றாக இல்லவே இல்லை என்று புறந்தள்ளிவிட முடியாது.
மறைபொருள் என்னென்ன :
கடந்தாண்டு #Metoo இயக்கம் இந்தியாவில் பரவலான போதுசின்மயி தன் மீதான பாலியல் துன்புறுத்தலை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம்அதற்கு ஆதரவாகப் பலரது கருத்துகளையும்எதிர்மறையாகப் பலரது விமர்சனங்களையும் பெற்றார்அவரது பதிவிற்குக் கமெண்ட்டுகள் செய்தோர் அவரைத் தவறாகச் சித்தரித்து அவருக்குப்பின் அரசியல் உள்ளதென்று கட்டமைக்க முனைந்தனர்.  மாயா-மயி / பேஸ்புக்-ட்விட்டர் என்ற பொருத்தப்பாடுகளை குறும்படம் சுட்டுவதாக ஊகிக்கமுடிகிறது.
உடுமலை சங்கர் ஆணவக் கொலைக்குப் பின்கௌசல்யா பறை இசைக் கலைஞர் சக்தியைத் திருமணம் செய்து கொண்டார்சக்தி மீது சில பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்அதில் ஒரு பெண் தான் ஏமாற்றப்பட்டுகருக்கலைப்பு செய்து கொண்டமைக்காகமூன்று இலட்சம் வரை இழப்பீடு தவணைமுறையில் தரவேண்டுமென திருமணம் செய்து வைத்தவர்கள் சக்திக்கு அறிவுறுத்தினர்ஆனால்சக்தி மீது குற்றச்சாட்டுகள் இருப்பதும் அது திருமணத்துக்கு முன்னரே கௌசல்யாவிற்குத் தெரியுமென்பதும் சமூகவலைதளங்களில் பரவிய செய்திஇது மெய்யெனில்தேவ் - அவரது காதலி கதாபாத்திரம் சக்தி – கௌசல்யாவை நினைவுபடுத்துவதை தவிர்க்கமுடியவில்லை.   
இக்குறும்படத்தின்காவல்துறை கைது நடவடிக்கைகளில் சின்மயி-ராஜன் விவகாரம் நினைவுக்கு வருகிறதுஓலா-ஓட்டுநர்-பேஸ்புக்-அதிகபகிர்வுகள் போன்ற காட்சிப்படுத்தல் ஜூலை 2016இல் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வொன்றை நினைவுபடுத்துகிறதுவிலாசினி ரமணி என்கிற பெண் 2016 ஜுலை 9ஆம் நாள் ஓலா கேப் புக் செய்து செல்கிறார்அந்த ஓட்டுநர் வேகமாக சென்றதால்வேகமாகச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறார்பின்பாதி வழியிலேயே வாகனத்திலிருந்து இறக்கப்படுகிறார்ஓலா வில் கம்ப்ளெயிண்ட் செய்துள்ளார்ஓட்டுநரால் இறக்கப்பட்டதற்காக பணம் தர முடியாதென வாதாடுகிறார்ஒரு கட்டத்தில் ‘கழுத்தை அறுத்துடுவேன்தெரியுமா?’ என ஓட்டுநர் கூறபின்னொரு ஆட்டோவில் தொடர்ந்து பயணத்தை நிறைவு செய்கிறார்அந்த அனுபவம் குறித்துஅதன் வெளிப்பாடு குறித்து விலாசினி ரமணி முகநூலில் ஜூலை 11 அன்று எழுதிய பதிவு பலராலும் பகிரப்படுகிறதுபின் செய்தியாகிறதுபின் ஓட்டுநர் கைது செய்யப்படுகிறார். (இந்தச் சம்பவம் நடந்த பதினைந்து நாட்களுக்கு முன்னர் ஜூன் 24 2016 அன்று தான் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பகலில் ஸ்வாதி கொலை செய்யப்பட்டிருந்தார்.)




தில்லியில் நடந்த sarvjeeth sing jasleen kaur சம்பவம் தான் என இயக்குநர் சொல்லியிருந்தாலும், அதைத் தமிழ்ப்படுத்த அவர் கையாண்டிருக்கும் உத்திகள் என்பவை எத்தகையவை என்பதே உற்றுநோக்கலின் வழியே வெளிக் கொணரமுடிகிறது. பெயரிடும் முறையில்மாயாதேவ் என்பது குறியீடுகளாகக் கொள்ளமுடிகிறதுஆனால்இயக்குநர் கதைச்சொல்லியாகக் காட்டும் பெண்ணிற்குப் பெயரிடவில்லை என்பதும் உற்றுநோக்கத்தக்கதுஒருவேளைஅந்தப் பெயர்தான்உண்மைக் கதையாக எதைக் கட்டமைக்க முயல்கிறார் என்பதை வெளிப்படுத்தும் துருப்புச்சீட்டாக அமையலாம்
x
படைப்புகளின் நீட்சியில்:
சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில்மேட்டுக்குடி பெண் மற்றும் போதையில் தள்ளாடும் பெண் தவறிழைப்பதாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் பாரதிராஜாஅதன் நீட்சியாக பெண் சித்தரிப்பை இக்குறும்படத்தில் நோக்கவேண்டியிருக்கிறதுஆனால்இக்குறும்படத்தின் தொடக்கத்தில் உண்மைக்கதையின் அடிப்படையில் என்று வெளிப்படையாகக் குறும்படம் தொடங்குகிறதுஎந்த உண்மைக் கதை என்பதை இயக்குநர் வெளிப்படுத்தவேயில்லை.
தமிழில் வெளியாகும் ஏ கிரேட் படங்களைப் போலபாலுணர்வுச் சொல்லாடல் / காட்சிப்படுத்தல்களை முழுவதும் காட்டிவிட்டுஇறுதியில் ஒரு கருத்து சொல்கிறேன் எனச் சொல்லி தன் முழுக் கதையமைப்பையும் விழிப்புணர்வுக் குறும்படம் என சரிகட்டியிருக்கிறது.  
கருத்து தான் என்ன ?
சமூக ஊடகங்களில் இருப்பவர்களும் உண்மையை அறிவதில்லைஅறியவும் அவர்கள் முற்படுவதில்லைஎன்று சமூக ஊடகத்தில் இயங்கும் அனைவரையும் காட்சிப்படுத்தியிருக்கிறதுசமூக வலைதளங்களில் ஒன்று வைரலானால்அதன் மீதான உண்மைத் தன்மையைச் சோதிக்காமல் செய்தியாக்கி வெளியிடுவதாக செய்தி ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.
எதிர்த்தரப்பினர் மீதான தவறைச் சுட்டிக்காட்டிநாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்த பின்னரும்குற்றமற்ற தங்களால் இவ்வுலகில் வாழவே முடியாது என்பதை ஆழமாகப் பதிவிட்டு தற்கொலை தான் இதற்குத் தீர்வென்பதாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
·         *நீதியின் பக்கம் யாரும் இருக்க மாட்டார்கள்,.
·         *அறம் தோற்கடிக்கப்படும்.,
·         *உண்மையைத் தான் நிரூபிக்க வேண்டும்,
·         *பொய்யை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை
போன்றவற்றை இக்குறும்படம் வலிந்து பேசுகிறதுஇதனால்குற்றம் சுமத்தப்பட்டோர் பொதுவெளியில் உயிர் வாழ்தல் குறித்த அச்சத்தை இக்குறும்படம் ஏற்படுத்திஉயிர் துறத்தல் தான் புனிதம் என்பதைக் கட்டமைக்க முயல்கிறது.
என்ன தீர்வைத் தந்திருக்க வேண்டும்
ஆண் தான் குடும்பத்தின் அடிநாதமாக இருக்கிறான்ஆணை மையமிட்ட சமூகமாகவே இன்னமும் குடும்பங்கள் இயங்குகின்றனமகன் மீது குற்றம் சுமத்தப்பட்டதால் தாய் இறந்து விடுவதாகக் காட்சிப்படுத்தப்படும் இக்குறும்படத்தைப் பார்த்து புலகாங்கிதம் அடைவோர் இருக்கும் இச்சமூகத்தில்தான் தன்னுடைய மகன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கத் தள்ளாத வயதிலும் அற்புதம் அம்மாள் என்கிற தாய் போராடி வருகிறார் என்பதை மறுக்க முடியாது.
பொய்ப் பதிவுகள் பகிரப்படக்கூடாதுபொய்ப் பதிவுகள் பகிர்ந்தால் சட்டம் தண்டிக்கும்குற்றமற்றவற்றவர்கள் தண்டனை அனுபவிக்க மாட்டார்கள் என மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டிய குறும்படப் படைப்புபலரது நம்பிக்கையைத் தகர்ப்பதற்கான வாயில்களையே திறந்துவிட்டிருக்கிறது.
நிறைவாக,
      #Metoo இயக்கம் பரவலான போது விலாசினி ரமணி எழுதிய முகநூல் பதிவின் ஒரு பகுதி இங்கே குறிப்பிடப்படவேண்டியது.
      ”எவ்வளவு தெளிவுடனும் தைரியத்துடனும் நாம் இருந்தாலும் இயங்கினாலும்அவற்றையும் மீறி நம்மைக் குலைத்துப்போடும் சமூகமாகத்தான் இது இயங்குகிறதுவன்முறையையும் நிகழ்த்திவிட்டுஅதைப்பேசினால் இங்கு நடக்கக்கூடியவை இரண்டுதான்ஒன்று Vivtim-blaming. மற்றொன்று Victimhood claim செய்வதாக ஏளனம்.
பெண்வெறுப்புபெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது வெறும் ‘சம்பவங்கள்’ அல்லஒரு அநீதி நிகழ்ந்தவுடன்அதை அம்பலப்படுத்திநீதியைப் போராடியாவது பெற்றுஅப்படியே இயல்பு வாழ்க்கைக்கு இன்பமாகத் திரும்புதல் போலபெண் வெறுப்பு என்பது தொடர் நிகழ்வுஒரு முழு வாழ்க்கைக்கான பாதிப்புசில வன்முறைகளுக்கான தண்டனையை எந்த சட்டமும் நீதியும் வழங்க முடியாதுநீதி வேண்டாம்கேட்பதற்குக் காதுகள் கூட இல்லாத நிலையில் தான் இத்தனை வன்முறைகளையும் எதிர்கொண்டு அமைதிகாத்து வருகிறோம்இன்று நீங்கள் கேட்கும் கதைகள் எண்ணிக்கையிலும் ஆழத்திலும் பத்து சதவீதம் கூட இருக்காதுஇன்னும் எத்தனையோ ஆயிரம் பெண்கள் பேசாமல் தான் இருக்கிறோம்,. ஒன்றைப் பேசினால் அதற்கான மோசமான எதிர்வினையில் வாழ்நாளெல்லாம் வாயடைத்து மற்றொன்றை மறைத்துவிடுகிறோம்
இப்பதிவை நம்மால் மறுக்கமுடியாதுபெண்களை உயர்வுபடுத்தவேண்டாம்அவர்களையும் தன்னைப் போன்ற சக உயிராகப் பேண வேண்டும் என்பதே அடிப்படையான கருத்துஆனால்இங்கு பெண்களை இழிவு படுத்தும் படைப்புகளைக் கொண்டாடிக்களிக்கும் சமூகமாக நாம் இருக்கிறோம்கிளப்புல மப்புல திரியுற பொம்பள என்னடி பண்ணுற செந்தமிழ் நாட்டுல… என்ற (ஆணாதிக்கப்பாடல் மூலம் பரவலாக அறியப்பட்ட ஹிப்ஹாப் தமிழா ஆதியை நவீன பாரதியாராகக் கொண்டாடிய சமூகத்தில் இந்த யுவர் ஷேம்ஃபுல்லி 2 படைப்பும் வெகுவாகப் பாராட்டுப்படுவது வியப்பிற்குரியதன்று.
யுவர் ஷேம்ஃபுல்லி 2 பெண்களுக்கு எதிரானது என்பதை உறுதிப்படுத்த முனையும் இதே வேளையில்இக்குழுவினரால் இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட யுவர் ஷேம்ஃபுல்லி குறும்படம் பெண்களுக்கெதிரான வன்புணர்வை மையமிட்டுப் பேசுயிருப்பதையும் முற்றாக மறந்துவிட முடியாது.
எவ்வளவு தான் முற்போக்கு பேசினாலும் இன்னமும் சமூகத்தில் இழையோடும் ஆணாதிக்கத்தை நோக்கும் போதுஎழுத்தாளர் வசுமித்ரவின் பின்வரும் வரிகள் தான் நிழலாடுகின்றன.
பெண்கள் சபிக்கப்பட்ட தேவதைகள்
ஆண்கள் ஆசிர்வதிக்கப்பட்ட சாத்தான்கள்

-..தமிழ்பாரதன்
புதுதில்லி
02.03.2019



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக