நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்
(மனோகர் பாரிக்கர்-ஐ.டி.எஸ்.ஏ தெற்காசிய மையத்தின் முதுநிலை புலமையாளர்
மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆஷோக் பெஹூரியா எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம்
த.க.தமிழ் பாரதன்)
14.08.2020
இந்தியா 370ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்த முதலாமாண்டு
நினைவு நாளில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தொலைக்காட்சி
நேர்காணல் ஒன்றில், 2020 பிப்ரவரி தொடக்கத்தில் காஷ்மீர் குறித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு
அமைப்பு (ஓ.ஐ.சி) வெளியுறவு அமைச்சர் (சி.எஃப்.எம்) மன்றத்தின் கூட்டத்தை ‘ஏற்பாடு’ செய்வதில் பாகிஸ்தானுக்கு உதவாததற்கு சவுதி அரேபியாவைப் பொறுப்பேற்க
அழைத்துள்ளார்.
காஷ்மீர் குறித்த சி.எஃப்.எம் கூட்டத்தை ஓ.ஐ.சி கூட்டாவிடில், “காஷ்மீர் பிரச்சினையில்
அதனோடு நின்று,
ஒடுக்கப்பட்ட காஷ்மீர் இஸ்லாமியர்களை ஆதரிக்கத் தயாராக இருக்கும் இஸ்லாமிய
நாடுகளின் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் கட்டாயப்படுத்தப்படும்” என்று குரேஷி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
"காஷ்மீர் பிரச்சினையில் முக்கியப் பங்கை வகிக்க இன்று
மக்கா மற்றும் மதீனாவுக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்ய எப்போதும் தயாராக
இருக்கும் பாகிஸ்தானியர்களுக்கு சவுதி அரேபியா தேவை. அவர்கள் இதனைச் செய்ய
விரும்பவில்லையெனில், நான் பிரதமர் இம்ரான் கானிடம் சவுதி அரேபியாவுடன் இணைந்து அல்லது இணையாமலேயே முன்னேறுமாறு
கேட்டுக்கொள்வேன்" என்று கூறியபோது, அவர் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார்
குரேஷி வருத்தப்பட்ட ஒரே நாடு சவுதி அரேபியா மட்டுமல்ல.
காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்காததற்காக ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)
உடனான தனது வருத்தத்தையும் அவர் பதிவு செய்தார்.
பாகிஸ்தானுடைய கண்டனத்தின் வெளிப்பாடு
குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஆண்டு, இஸ்லாமிய நாடுகளின் கோலாலம்பூர் உச்சி மாநாட்டை
பாகிஸ்தான் தவிர்த்தது. எனினும், கத்தார் சிற்றரசர், துருக்கிய அதிபர் எர்டோகன் மற்றும் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி ஆகியோர் கலந்து
கொண்டனர்.
சவுதி அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் அவ்வாறு செய்ததைத்
துருக்கி முதலில் கவனித்தது. 4 மில்லியன் பாகிஸ்தான் தொழிலாளர்களைத் திருப்பி
அனுப்பி அவர்களுக்கு பதிலாக வங்கதேசத்தவர்களை நியமிக்குமாறு சவுதிகள் பாகிஸ்தானை
அச்சுறுத்தியதாக துருக்கியின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன!
எவ்வாறாயினும், "உம்மாஹ்வில் சாத்தியமான பிளவு தொடர்பாக முக்கிய முஸ்லீம் நாடுகளின்
கவலைகளை" தீர்ப்பதற்கு நேரம் எடுக்கும் என்றும், அது "உம்மாஹ்வின்
ஒற்றுமைக்காக" தொடர்ந்து செயல்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் கூறியது.
ஒருகாலத்தில் தன்னை “ஒற்றுமையை” நிலைநிறுத்துபவராகக் கூறிக்கொண்ட பாகிஸ்தான்
இப்போது காஷ்மீர் பிரச்சினையில் உம்மாஹ்வை பிளவுபடுத்துவதாக அச்சுறுத்துகிறது!
இஸ்லாமாபாத்தின் செயல்நிரலுக்கு முக்கியமான சர்வதேச ஆதரவைத் திரட்ட முடியாமல்
போனதில் அதன் விரக்தி,
விரக்தியின் உணர்வுகளைக் காட்டிக்கொடுக்கிறது. மே 2020 முதல் ஒத்திவைக்கப்பட்ட
கட்டண அடிப்படையில் எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவதற்கான சவுதியின் முடிவுதான்
பாகிஸ்தானை மேலும் கோபப்படுத்தியிருக்க வேண்டும்.
சவுதி அரேபியா 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் மீட்புக்கு
வந்துள்ளது, அதன் உதவிக்கு 6.2 பில்லியன் டாலர் தொகுப்பின் ஒரு பகுதியாக ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட பணவழங்கல்களில்
3.2 பில்லியன் டாலர்
மதிப்புள்ள எண்ணெயை வழங்க ஒப்புக் கொண்டது.
பணவழங்கல் நெருக்கடி சமநிலைக்காக பாகிஸ்தான் அலைகிறது.
மீதமுள்ள 3 பில்லியன் டாலர் ரொக்கக்
கடனாக வழங்கப்பட்டது. ஜூலை 1, 2019லிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட பணவழங்கல்
வசதியை சவுதி செயல்படுத்தியது, மே மாதத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இந்த
ஆண்டு புதுப்பிக்க வந்தது. எவ்வாறாயினும், பாகிஸ்தானின் நடத்தை குறித்து வருத்தப்பட்ட
சவுதி, இந்த ஏற்பாட்டை நிறுத்தியிருக்கலாம்.
மற்றவற்றில், துருக்கி, மலேசியா மற்றும் ஈரான் நோக்கி பாகிஸ்தானின் சாய்வு, அதே போல் சீனா மீதான அதன்
வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய சார்பு ஆகியவை சவுதிகளுக்கு எரிச்சலை
ஏற்படுத்தியிருக்கலாம்.
சவுதி பழிவாங்கல் குரேஷியின் கொந்தளிப்பைத் தொடர்ந்து
வந்துள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்துமாறு பாகிஸ்தான் கேட்டுக்
கொள்ளப்பட்டதாகவும், அறிக்கையின்படி, குறைந்த வட்டி விகிதத்தில் சீனாவிடம் கடன் வாங்கி பாகிஸ்தான் ஏற்கனவே 1 பில்லியன் டாலர்
செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கடனுக்கு 3.2% வட்டி செலுத்துவதாகக்
கூறப்படுகிறது, இப்போது அது சீனாவின் மாநில நிர்வாக அந்நியச் செலாவணியிலிருந்து (SAFE) லண்டன் வங்கிஇடைச் சலுகை விகிதம் (LIBOR) மேலும் 1%இல் 1 பில்லியன் டாலர் கடனை ஏற்பாடு செய்துள்ளது, இது தற்போதைய விகிதங்களில் 1.18% ஆக உள்ளது. மீதமுள்ள 2 பில்லியன் டாலர்களை சவுதி
அரேபியாவிற்கு செலுத்த பாகிஸ்தான் இதே போன்ற எளிதான கடன்களை ஏற்பாடு செய்ய
வேண்டியிருக்கும்.
பாகிஸ்தானின் பிற பயனாளியான ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தானுக்கு நிதி உதவி
செய்வதாக அளித்த வாக்குறுதியையும் திரும்பப் பெற்றுள்ளது. டிசம்பர் 2018 இல், சவுதி அரேபியாவிடமிருந்து
குறிப்பை எடுத்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கு 3.2 பில்லியன் டாலர் எண்ணெய் வசதியை உள்ளடக்கிய 6.2 பில்லியன் டாலர் தொகுப்பை அறிவித்தது. இருப்பினும், பின்னர், அதன் நிதி உதவியை 2 பில்லியன் டாலராகக்
குறைத்ததோடு ஒத்திவைக்கப்பட்ட பணவழங்கல் திட்டம் கைவிடப்பட்டது.
பாகிஸ்தான் ஊடகங்களில் வர்ணனையாளர்கள் இஸ்லாமிய நாடுகளின்
தலைவர்களை பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்துவதால் அரபு நாடுகளுடனான
பாகிஸ்தானின் ஏமாற்றம் முழுவதும் தெரிகிறது. அரபு உலகிலிருந்து பாகிஸ்தானின் ஆதரவு
குறைந்துவிட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். எனினும், ஊன்றுகோலான சவுதியின்
இழப்பு எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தானின் நிதி கவலைகளை அதிகரிக்கும் என்பது
உறுதி.
நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக