தாலிபான்கள்
அமைதிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சோதிக்கும் அமெரிக்கா.
February 7, 2020 Commentary
(தி இந்து பத்திரிக்கையின்
சிறப்பு நிருபர் கல்லோல் பட்டாச்சர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – தமிழ்
பாரதன்)
அமெரிக்காவும், தாலிபான்களும்
சமாதான உடன்படிக்கை குறித்த இழுபறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவாக, தற்காலிகப்போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான
காலக்கெடுவைவெவ்வேறு தேதிகளில் அறிவித்து
வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் சமாதான முன்னெடுப்புகள் மிக நெருக்கடியான
கட்டத்தை எட்டியுள்ளன. தாலிபான்களுடன் தொடர்பு கொள்ளும் நுட்பமான பணியை மேற்கொள்ள
அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், சிறப்புப் பிரதிநிதியாக சல்மே
கலீல்சாத்தை நியமித்ததிருந்தார். அதிலிருந்து பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்த இரு
தரப்பினருக்கும் இடையிலான நம்பிக்கையைப் போர் நிறுத்தம் சோதிக்கும். இருப்பினும், ஆப்கானிஸ்தான்
பகுதியில் போரில்இரு தரப்பினரும் சிக்கிக் கொண்டுள்ளனர்.
போர்
நிறுத்தம் பத்து நாட்களுக்கு இருக்க வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. ஆனால்
தாலிபான்கள் அதற்கு ஏழு நாட்கள் கேட்டனர். இத்தகைய பேரம் பேசுதல், இருதரப்பினருக்கும்
இடையேயான பரிவர்த்தனைகளின் ஒரு அங்கமாகும்.
2019 செப்டம்பரில் பேச்சுவார்த்தைகளில்
அதிரடியான திருப்பங்கள் கூடிவருகின்ற வேளையில்,
தாலிபான் அரசியல்
குழுவையும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியையும் அமைதிப்
பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் டிரம்ப் அவர்கள் அழைப்பு
விடுத்தார். எனினும்,அமைதிப்
பேச்சுவார்த்தையைப்பொருட்படுத்தாமல், காபூலுக்கு
அருகிலுள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது தாலிபான்கள் தாக்குதலைத் தொடர்ந்ததால், இந்த
அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்தது.
பேச்சுவார்த்தையை
மீண்டும் தொடங்க, பல மாதங்களும் சர்வதேச அளவில்சீனா, ரஷ்யா, ஈரான்
மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் முயற்சியும் தேவைப்பட்டன. தற்போது, அமெரிக்காவுக்கும்
தாலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும்நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளன. செப்டம்பர்
மாதத்தில் ஏற்கனவேதயாரிக்கப்பட்ட, இருதரப்பினரும்
ஒப்புக்கொண்ட வரைவு ஒப்பந்தம் தயாராக இருப்பதாக தலிபான் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இரு
தரப்பினரும் உத்தரவாதம் அளித்துள்ளதால், ஒப்பந்தத்தில் மாற்றங்கள்
எதுவும் தேவை இல்லை என்றும் தாலிபான் கூறியுள்ளது. இருப்பினும், அமைதி
ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தகுந்த சூழலை உருவாக்க வேண்டிய அவசியமுள்ளது.
சமாதான
உடன்படிக்கையில் கையெழுத்திட்டபின், தாலிபான்கள் உண்மையிலேயே
சண்டையை நிறுத்துவார்கள் என்பதற்கான நிரூபண ஆதாரங்களை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க
வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ அவர்கள் தெரிவித்திருந்தார். முன்னர், ஒரு
உடன்படிக்கைக்கு இருதரப்பினரும் நெருங்கி வந்ததாகவும், ஆனால், வன்முறையைக்
குறைப்பதற்கான உறுதிப்பாட்டையோ, திறனையோதாலிபான்களால் நிரூபிக்க முடியவில்லை என்றும்
திரு. போம்பியோ கூறினார்.
தாலிபான்களின்
அமைதிக்கான செயல் விளக்கம், அதிபர் கானி அரசாங்கத்துடன்
மிகவும் கடினமான பேச்சுவார்த்தையைத்தொடங்குவதற்கான அரசியல் உறுதிப்பாட்டைக் குறிக்கும். சமாதான
முன்னெடுப்புகளை உறுதி செய்து, பலபத்தாண்டுகளாகநிகழும்ஆப்கானிஸ்தான் போரை
முடிவுக்குக் கொண்டுவர இது இன்றியமையாததாகும்.
தாலிபான்களிடமிருந்து, அமைதிக்கான
செயல் விளக்க நிரூபணத்தை அமெரிக்கா கோருவதற்கு ஒரு காரணம், இந்த
ஒப்பந்தம் ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நீண்டகாலத் தாக்கத்தை
ஏற்படுத்தவல்லது என்பதேயாகும். பெரும்பாலான பாதுகாப்பு நிபுணர்களால் தாலிபான் ஒரு
பயங்கரவாத அமைப்பாகக் கருதப்பட்டு வருகிறது. தோஹாவில் அமெரிக்காவுக்கும், தாலிபான்களுக்குமிடையே
ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், தாலிபான்களுக்கு அங்கீகாரம்
கிடைக்கும்.
இதுவரை, ஆப்கானிஸ்தான்
அரசாங்கம், அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்குமிடையிலான
பேச்சுவார்த்தைகளை எச்சரிக்கையுடனே நோக்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் உளவுத்துறையின்
முன்னாள் தலைவர் அம்ருல்லா சலேஹ் அவர்கள், தாலிபான்களை நம்ப முடியாது
என்று திட்டவட்டமாக விமரிசித்துள்ளார். அரசியல் தீர்வுக்கு வன்முறை பலனளிக்கப்
போவதில்லை என்பதைத் தாலிபான்கள் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று திரு. சலேஹ்
கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர்,
அமெரிக்காவும்
தாலிபான்களும் ஒருவித ஒப்பந்தத்தை எட்டினாலும் கூட,
ஆப்கானிஸ்தான்
அரசின் முக்கியப் பிரமுகர்களின்இத்தகைய
அறிக்கைகள் , அமைதிக்கான பாதை கடினமான சவால்கள் நிறந்தது என்பதைவெளிப்படுத்துகின்றன.
அதிபர்
பதவிநீக்க செயல்முறையிலிருந்து கிட்டத்தட்ட சேதம் ஏதுமின்றித் தப்பியுள்ள அதிபர்
டிரம்ப் அவர்கள், தற்போது வலுவான நிலையில் உள்ளார். எனவே, தாலிபான்களால்
மீண்டும் ஏமாற்றப்படுவதற்கும், அதன் விளைவாகத் தனது வோட்டு
வங்கி சீர்குலைக்கப்படுவதற்கும் அவர் அனுமதிக்க மாட்டார். தாலிபான்களிடமிருந்து, அமைதிக்கான
செயல் விளக்க நிரூபணத்தைக் கோருவதன் மூலம், தான் மிகுந்த தன்னம்பிக்கையுடன்
இருப்பதை அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். நடப்பாண்டு ஜனவரி 3 ஆம்
தேதியன்று, ஈரானின் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முக்கியத்துவம்
வாய்ந்த இப்பகுதி, அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமிடையே
ஆடுகளமாக உருவாகியுள்ளது.
போரால்
பாதிக்கப்பட்ட இந்நாட்டில், எந்தவொரு சமாதான முன்னெடுப்பும்
ஆப்கானிஸ்தான் அரசின் தலைமையிலும், அதன் சொந்தப் பொறுப்பிலும்
இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.. அமைதியான மற்றும்
பாதுகாப்பான ஆப்கானிஸ்தானைக் காண இந்தியா விரும்புகிறது. ஆனால்,பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இந்தியாவுக்கு
நம்பிக்கையளிக்கக் கூடியதாக இல்லை..
தாலிபானுக்கும்
அமெரிக்காவிற்கும் இடையிலான சந்திப்பு எவ்வாறு முன்னேறும் என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வணக்கம். தங்களை
யாரென்று அறிந்திருக்கவில்லை. தாங்கள் அனுப்பிவைத்த “சுதந்திர தின நாள் வாழ்த்து” கிடைத்தது.
தாங்கள் அனுப்பிய
இரு புத்தகங்களுக்கும் நன்றி. நீங்கள் புத்தகம் வாங்கி அனுப்புவதற்கு முன்னதாகக் கேட்டிருந்தால்
எனக்கு வேண்டியனவற்றைச் சொல்லியிருப்பேன் அல்லவா?. அடுத்தமுறை முன்கூட்டியே கேளுங்கள்.
இருபுத்தகங்களுக்கும்
நடுவே நீங்கள் வைத்திருந்த cadbury dairymilk “Family Pack” என்னை வியப்பில் ஆழ்த்தியது.
90களின் குழந்தையாக வளர்ந்த நான், இந்த டைரிமில்க் சாக்லேட்டை விடுதலை நாளுக்கான பரிசாகவே
எடுத்துக் கொள்கிறேன்.
இவற்றை அதிக செலவு
செய்து விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். என்னிடம் முகவரி கேட்டிருந்தால்,
தெளிவாகச் சொல்லியிருப்பேனே. நீங்கள் குறிப்பிட்டிருந்த
தெருபெயர் தவறு. அஞ்சலகர் நன்கறிமுகமானவர் என்பதால், பெயரையும் ஊரையும் உறுதி செய்து
என்னிடம் கொடுத்துச் சென்றார்.
அஞ்சலுறையில் உள்ள
விவரங்கள் வாயிலாக உங்களை யாரென்று அறியமுடியவில்லை. அதன் உண்மைத்தன்மை குறித்தும்
மெனக்கெட விரும்பவில்லை. விரைவில் உங்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். எங்கிருந்தாவது
இதைப் படித்துக்கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதியுள்ளேன்.
இப்படிக்கு,
தங்களை யாரென்றறியாத
தக |
15.08.2021
பின்குறிப்பு
: அன்பின் பொருட்டு, நூல்கள் அனுப்பும் தோழிகள் முன்கூட்டியே, எனக்குத் தேவைப்படும்
நூல்களின் விவரங்களைக் கேட்டறியலாம். முகவரியை அனுப்பி வைக்கிறேன். விபிபி முறையில்
அனுப்பப்படும் நூல்கள் ஏற்கப்படமாட்டாது.
குடிமைப்பணிகள் தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களும் என் வளர்ச்சியில் அக்கறை உள்ளோரும் யுவா திட்டம் அறிவிக்கப்பெற்ற சில நாட்களிலேயே அதன் விவரங்களை அனுப்பி வைத்தனர். தவிர, பேசியில் இருந்த mygov செயலியும் யுவா திட்டம் குறித்த அறிவிப்பை வழங்கியது.
https://innovateindia.mygov.in/yuva/ என்ற இணையப் பக்கத்தில் யுவா திட்டம் குறித்த விவரங்கள் இடம்பெற்றன. யுவா திட்டத்தின் பொருண்மை: விடுதலைப் போராட்டம். திட்டம் குறித்து, முதலில் சிறுவிளக்கமே இடம்பெற்ற போதிலும், காலப்போக்கில் விரிவான அறிமுகம் தரப்பெற்றது. சூன் மாதம் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வில் முழுமையாக ஈடுபட்டமையால், இத்திட்டத்தில் பங்கெடுப்பது குறித்துச் சிந்திக்க இயலவில்லை.
சூலை மாதத் தொடக்கத்தில், யுவா திட்டத்திற்கு எழுதலாம் என்ற எண்ணம் வந்தது. நான் வளர்ந்த நிலப்பரப்பான கீழத்தஞ்சையில் நிகழ்வுற்ற விடுதலைப் போராட்டத்தைப் பதிவு செய்வோம் என்று முடிவெடுத்தேன். கீழத்தஞ்சையில் நிகழ்ந்த விடுதலைக்கான போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று 1930இல் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகம். இந்த உப்பு சத்தியாகிரகம் குறித்துத் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் மேடையிலும் தனி உரையாடலிலும் பேசக் கேட்டிருக்கிறேன்.
தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் அன்றைய காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. 1930 ஏப்ரம்13 அன்று திருச்சியில் நடைபயணத்தைத் தொடங்கிய போராட்டக் குழுவினர், தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வாயிலாக 1930 ஏப்ரல் 28 அன்று வேதாரண்யத்தை வந்தடைந்தனர். இடைப்பட்ட நாட்களில் போராட்டக் குழுவினர் அடைந்த இன்னல்கள் ஏராளம். ஆங்கிலேயர்கள் விதித்த மிகுந்த கட்டுப்பாடுகளைத் தாண்டி, இந்த உப்பு சத்தியாகிரகம் நிகழ்வதற்கு எளிய மக்களின் பங்கு அளப்பரியது. 1930 ஏப்ரல் 30ஆம் நாள் ஆங்கிலேயர்களின் பார்வையிலிருந்து தப்பித்து, சக போராட்டக்காரர்கள் இராஜாஜியை அழைத்துச் சென்று உப்பு எடுக்க வைத்து உப்பு சத்தியாகிரகத்தை வெற்றிபெறச் செய்ததெல்லாம் சுவாரசியமான திரைப்படத்தின் இறுதிக்காட்சியாக வைக்கத்தக்கது. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் வெற்றியடைய உறுதுணையாக இருந்தவர் விடுதலைப் போராட்ட வீரர் வேதரத்தினம்.
உப்பு சத்தியாகிரகத்துக்கு இராஜாஜி தலைமையேற்றமை-அதனையொட்டிய அரசியல், உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் தூத்துக்குடியை விட்டுவிட்டு, வேதாரண்யத்தைத் தேர்வு செய்தது-அதன்பின்னணி, காவிரி டெல்டா நிலப்பரப்பு-கீழத்தஞ்சை வாழ்வியல், உழவியல்-உப்பளவியல், அக்காலத்திய கல்விமுறை, பண்பாடு, போக்குவரத்து இவற்றை அடியொற்றி வரலாற்றுப் புனைவு-புதினமாகப் படைப்பை அளிக்க எண்ணினேன்.
திருவாரூர் கடைத்தெருவில் உள்ள சக்தி மணிப்பொறியகத்தின் உரிமையாளர் சக்தி செல்வகணபதி அவர்கள் ஆண்டுதோறும் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரகத்தின் நினைவைப் போற்றும் வகையில் குறிப்பிட்ட நாட்களில் பயணம் மேற்கொள்வார். அவரிடம் முதற்கட்டமாகத் தரவுகள் திரட்டினேன்.
அடுத்தகட்டமாக, 13.07.2021 அன்று வேதாரண்யம் சென்றேன். வேதாரண்யத்தில் தெரிந்தவர் ஒருவரின் உதவியோடு களப்பயணம் மேற்கொண்டேன். உப்பளங்களில் உப்பு எடுக்கும் செயல்முறையையும் உப்பளர்களின் வாழ்வியலையும் நேரடியாகக் கண்ணுற முடிந்தது. மாலைக்குப் பிறகு, 1930களில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகத்தின் நினைவைப் போற்றும் நினைவுத்தூண் பகுதிக்குச் செல்ல விரும்பினேன். உள்ளூர் வாசிகள் அங்கு செல்ல வேண்டாம். சாலை மிக மோசமாக இருக்கிறது என்று கூறினர். இவ்வளவு தொலைவு வந்துவிட்டு, வரலாற்று நிகழ்வு நடந்த ஓரிடத்தைப் பார்க்காமல் போக மனமில்லை. உதவிக்கு உடனிருந்தவரோ, மோசமாகத்தான் இருக்கிறது எனினும் சென்று வரலாம் என நம்பிக்கை அளித்தார்.
மிகமோசமான அந்தச் சாலையில் பயணித்து, வழிமாறிச் சென்று, ஒருவழியாக உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண் உள்ள பகுதியை அடைந்தோம். 1950ஆம் ஆண்டு இந்த நினைவுத்தூண் நிறுவப்பெற்றுள்ளது. நினைவுத்தூணுக்கு எதிர்ப்புறம், கான்கிரீட் கூரை வேயப்பட்ட ஒரு கூடம் உள்ளது, நினைவுத்தூணுக்குப் பின்புறம் பாதி-கட்டப்பட்டு முடிக்கப்பெறாத கட்டிடம் ஒன்றுள்ளது. அங்கு ஒளிப்படங்கள் எடுத்தபிறகு திரும்புகையில், மாலை வந்துவிட்டது.
திரும்பி வருகையில், அந்த மோசமான பாதை எங்களையும் விட்டுவைக்கவில்லை. மோட்டார் வாகனத்தில் பொறுமையாகச் சென்ற போதினும் கண்ணிமைக்கும் நேரத்தில் சறுக்கி, ஒரு பக்கமாக விழுந்தோம். வண்டியை இயக்கியவருக்குக் கை, கால்களின் வெவ்வேறு இடங்களில் காயம்பட்டு இரத்தம் வழிந்தது. எனக்கு வலதுகாலில் அடிப்பட்டது. (வண்டியை இயக்கியவர் வேட்டி அணிந்திருந்ததால் காயம் பலமாக ஏற்பட்டது. நானோ கடல்நீரில் கால்நனைத்தபோது, ஈரம் ஏறிய ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்ததால் பலத்த காயத்திலிருந்து தப்பித்தேன்.)
அந்த மோட்டார் வாகனம் கோட்டம் விழுந்துவிட்டது. அவரைக் காரில் ஏற்றி வீடு சேர்ந்தோம். முதலுதவிக்குப் பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். என் அழைப்பின்பேரில் வந்து அவருக்குக் காயம் ஏற்பட்டு விட்டதென்று நானும், எனக்கு அடிபட்டுவிட்டதென்று அவரும் வருத்தமுற்றோம். இன்னமும் என் வலது கணுக்காலில் வலி இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதும் இந்நாளில் (10.08.2021) அவரிடம் விசாரித்தபோது, சர்க்கரை நோய் பாதிப்பால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் முழுமையாக ஆறவில்லை என்பதைத் தெரிவித்தார்.
நிற்க, 13.07.2021 அன்று வேதாரண்யத்திலிருந்து திரும்புகையில் கருப்பம்புலம் கடைத்தெருவில் ஆசிரியர் பாலாஜி அவர்கள், தற்போது பதிப்பில் இல்லாத அரிய நூல்களை அளித்து உதவினார்.
இதற்கு அடுத்த கட்டமாக, திருவாரூர் கழகப்பள்ளியில் பயின்ற 80, 85+, 90+ அகவையுடையவர்களின் இளமைக்கால (இந்திய விடுதலைக்கு முற்பட்ட) வாழ்வனுபவங்களைத் திரட்டினேன்.
இவ்வாறு திரட்டிய அனைத்துத் தரவுகளையும் தொகுத்தபிறகு, முக்கியக் கதாப்பாத்திரங்களையும் கதை செல்லும் போக்கையும் கட்டமைத்தேன். யுவா திட்டத்திற்குப் படைப்பின் முன்மொழிவு அனுப்ப வேண்டும். ஆய்விற்கான முன்மொழிவு அறிவேன். படைப்பிற்கான முன்மொழிவு குறித்த அனுபவமின்மையால், மூத்தவர்கள் சிலரின் அறிவுரை பெற்றேன். அதனடிப்படையில் முன்மொழிவு தயாரித்தேன். இவையாவற்றையும் செய்துமுடிக்க சூலை 31 வந்தது.
யுவா தளத்திற்குள் சிலநாட்களுக்கு முன்பே சென்று, எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொண்டேன். எளிய வழிதான், வயதுக்கான சான்றிதழ் + படைப்பின் முன்மொழிவு அளித்தால் submit ஆகிவிடும். சூலை 31 இரவு பதிவேற்றத் தொடங்கினேன். mygov தளத்துடன் இணைந்திருக்கும் எனது மின்னஞ்சல் முகவரி, பேசி எண் அனைத்தும் default ஆக இத்தளத்தில் இடம்பெற்றது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், படைப்பின் முன்மொழிவைப் பதிவேற்றி submit என்பதைச் சொடுக்கினால், பேசி எண்ணை மாற்றச் சொன்னது.
பேசி எண்ணில் 91 என்ற முன்னொட்டு இருக்கிறது. பத்து எண்ணுருக்களைத்தான் யுவா தளம் ஏற்றுக்கொள்ளுமாம். (யுவா திட்டத்திற்கு விண்ணப்பித்த ஒருவர் பத்து எண்ணுருக்கள் கொடுத்துதான், பதிவு செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்தபிறகே இதனை எழுதுகிறேன். 91 என்ற முன்னொட்டுடன் யாரேனும் பதிவு செய்திருப்பின் தெரியப்படுத்துங்கள்). சரி, என் பேசி எண்ணின் முன்னொட்டாக இருக்கும் 91 ஐ நீக்கலாம் என்றால் யுவா திட்டத்தின் https://innovateindia.mygov.in/yuva/ தளம் பேசி எண்ணையோ, மின்னஞ்சல் முகவரியையோ திருத்தும் வாய்ப்பைத் தரவில்லை. மீண்டும் mygov தளம் சென்று திருத்தம் மேற்கொள்ள வேண்டும். வேறொரு நாட்டுக்குச் சென்றுள்ளேன் என்று நாட்டிற்குரிய பேசிஎண் குறியீட்டை மாற்றலாம். ஆனால், முன்னொட்டை எப்படி நீக்க முடியும் என்ற ஐயம் எழுந்தது. இதில் இப்போது கை வைத்தால், வெவ்வேறு சிக்கல்களுக்குக் கொண்டுசெல்லும் என்று தோன்றியது. அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது. (mygov இல் முன்னொட்டை நீக்க முடியவில்லை)
நண்பர்களின் பேசி எண், மின்னஞ்சல் முகவரி கொடுத்து otp வைத்து கணக்குத் தொடங்கி உள்நுழைந்து பதிவு செய்யலாம். ஆனால், யாரிடமாவது இப்போது கேட்டால், முதலில் போலி அழைப்பு என்றே கருதுமளவு ஏமாற்றுப்பேர்வழிகள் (fake profile, fraud, spam calls) பெருகிவிட்டனர். வீடியோகால் செய்து, ஆதி முதல் அந்தம் வரை விளக்கிப் பேசியாக வேண்டும். உண்மையை விளம்பி, நண்பரை நம்பச் செய்யலாம் அல்லது முன்மொழிவை அவர்களுக்கனுப்பி, அவர்களையே பதிவேற்றச் செய்யலாம். மனம் ஒப்பவில்லை. எனினும், கேட்கையில் “நெட் இல்லை, பயணத்தில் இருக்கிறேன், கணினி இல்லை, இதெல்லாம் தெரியாது, காலையில் செய்யட்டுமா” போன்ற பதில்களே கிட்டின.
இதற்குமேல் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. (வீட்டில் உள்ளோர் ஏற்கெனவே mygov பயன்படுத்துவதால், அவர்களது கணக்கின்வழி உள்நுழைந்தாலும் இச்சிக்கலுக்குத் தீர்வு கிட்டாது). இதற்கிடையிலும் யுவா தளத்தில் பதிவேற்றும் முயற்சியில் இருந்தேன். கடைசி முயற்சியும் தோல்வியடையும் வண்ணம் submission closed என்று வந்தது.
உடனடியாக, NICஇன் சேவை மையத்திற்கு 1800111555 அழைப்பு விடுத்து, என்னுடைய சிக்கலை விளக்கமாகச் சொன்னேன். மிகப்பொறுமையாகக் கேட்ட எதிர்முனையில் இருந்தவர் புகாரைப் பதிவு செய்து அதற்கான டிக்கெட் எண்ணை மின்னஞ்சல்வழி அனுப்பினார். அவரது கனிவான பேச்சும் உடனடிச் செயல்பாடுகளும் விடியலில் தீர்வு கிடைத்திடும் என்றிருந்தது. ஆனால், அடுத்தநாள் மாலைவரை எந்தத் தகவலும் இல்லை. இரவு 8 மணியளவில் உங்களுடைய குறை தீர்க்கப்பட்டுவிட்டது. அதனால், உங்கள் டிக்கெட்டை மூடுகிறோம். நாங்கள் அளித்த தீர்வில் நீங்கள் திருப்தி அடையவில்லையென்றால், மீண்டும் உங்களுடைய டிக்கெட்டைத் திறக்கலாம் என்று மின்னஞ்சல் வந்தது.
சேவை மையத்திற்கு மீண்டும் பேசியபோது, அது தானியங்கி மின்னஞ்சல் என்றும் உங்களது கோரிக்கை உரிய குழுவுக்கு அனுப்பப்பெற்றுள்ளது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரியப்படுத்தினர். எனினும், உரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக அளித்து, என்னுடைய டிக்கெட்டை மீண்டும் திறந்தேன்.
அடுத்தடுத்த நாட்களில் இரவு 8 மணியளவில் உங்களுடைய டிக்கெட் மூடப்பட்டுவிட்டது என்று மின்னஞ்சல் வரும். அவர்கள் ஒருமுறை கூட தீர்வை அளிக்கவில்லை. என் அதிருப்தியை எழுத்துப்பூர்வமாக அளித்தும், அதனை மேற்பார்வையாளர் forward செய்தும் எப்பயனும் இல்லை. “இந்த முயற்சி எடுத்துள்ளோம்/முடியும்/முடியாது,” என்று சொல்லிவிட்டால், தேவலாம். இதோ அதோ என்று அவர்கள் கடைசி வரை ஒரு தீர்வுமே அளிக்கவில்லை. இந்த அர்த்தமற்ற செயலைச் செய்வதற்கு வெறுப்பாக இருந்தது. ஆகஸ்ட் 7ஆம் நாள் உங்கள் டிக்கெட் மூடப்பட்டு விட்டதென வந்த மின்னஞ்சலைத் திறந்துகூடப் பார்க்கவில்லை.
இதற்கிடையில், போட்டியை ஒருங்கிணைக்கும் NBTஇன் தலைமை அலுவலகத்திற்கு முயற்சிக்கையில் அழைப்பு செல்லவேயில்லை. மண்டல அலுவலகத்திற்கு முயற்சிக்கையில் அழைப்பு எடுக்கப்பெறவே இல்லை.
யுவா விற்கு முயற்சித்த பலருக்கும் இதுபோன்ற சிக்கல் இருப்பதாகவும் அறியமுடிந்தது. இதுகுறித்த முறையான வழிகாட்டலை யுவா தளமோ NBT அமைப்போ வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எதுவுமே செய்யவில்லை. முறையாகப் புகாரளித்தும் அதுகுறித்து NIC எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது எடுத்த நடவடிக்கைகள் குறித்து எந்தத் தகவலும் அளிக்கவில்லை.
இப்பதிவின் நோக்கம் : எவ்வளவு முயற்சித்தும் படைப்பின் முன்மொழிவைப் பதிவேற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதைத் தெரியப்படுத்துவதே.
போட்டியிட்டுத் தோற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். எல்லா முயற்சிகள் எடுத்தும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்காமல் தோற்கடிக்கப்படுவதை வெறுக்கிறேன்.
முதல்முறையாகச் சிறுகதை எழுத முயன்றேன் 2013இல். எனது சிறுகதையொன்று முதல்முறையாகப் பிரசுரமானதோ 2020இல் அதுவும் ஒரு இலட்சம் உருபா வெற்றியுடன்.
முதல்முறையாகப் புதினம் எழுத முயன்றிருக்கிறேன் 2021இல்…
B.Sc
இயற்பியல்இரண்டாமாண்டுவகுப்புகள்நடத்தத்தொடங்கியகாலம். நுண்கலைமன்றபொறுப்பாளர்குமரேசமூர்த்திஐயா, தொடர்புகொண்டுஒருபோட்டிவந்திருக்குபோகணும்என்றார்கள். முதலாமாண்டுபயின்றபோது நான் கல்லூரிக்காப் பெற்றபரிசுகளின் மீதான நம்பிக்கைஇந்தவாய்ப்பைத்தந்திருக்கும் என்று எண்ணினேன்.
குறிப்பாக, 2014ஆம்ஆண்டுபாவேந்தர்பாரதிதாசன்பிறந்தநாள்விழாவையொட்டிநிகழ்ந்ததிருச்சிபாரதிதாசன்பல்கலைக்கழகஅளவிலானபேச்சுப்போட்டியில்திரு.வி.ககல்லூரியிலிருந்துசென்றுமுதலிடம்பெற்றது. UG முதலாமாண்டுமாணவர்பல்கலைக்கழகஅளவில்முதலிடம்பிடிப்பதெல்லாம்பெரியவிசயமென்று அவர்களுக்குத்தோன்றியிருக்கலாம். அது அப்போது உண்மையும்கூட.
போட்டியை நடத்துவது வெற்றித்தமிழர்பேரவை. அப்போதுதான்அந்தஅமைப்பின்பெயரையேகேள்விப்படுகிறேன். அதுதிரு. வைரமுத்துஅவர்கள்நிறுவியஅமைப்பு என்று பிறகு தெரிந்தது. அப்பேச்சுப் போட்டியில்திருவாரூரின்முதன்மையானகல்லூரிகளின்மாணவர்கள் போட்டியாளர்களாகப்பங்கேற்றிருந்தனர். அப்போட்டிதான்பிறகல்லூரிமாணவர்களைதோழன்களாகவும்தோழிகளாகவும்அடையாளப்படுத்தியது. அத்தோழமைநெடுங்காலமாகத்தொடர்ந்தும்வருகிறது.
திரு. வைரமுத்துஅவர்களின் 60ஆம்பிறந்தநாளைஒட்டிநிகழ்ந்தபேச்சுப்போட்டிஅது. மிகவும்எளியவகையில்நடைபெற்றது. ஏழுதலைப்புகள்கொடுத்திருந்தார்கள். அவற்றுள்ஒன்றில்பேசவேண்டும். திரைத்துறைபங்களிப்புகள்சார்ந்ததலைப்புகளைப்பலரும்பரவலாகஎடுக்கஇயலும்என்பதால்கண்ணகியா? கருவாச்சியா? எனப் பொருள்படும்தலைப்பைத்தெரிவுசெய்துபேசினேன். அப்போதெல்லாம்கலையென்றகடலுக்குகரைகண்டபுணையாம்எனத்தொடங்கும்தமிழ்வாழ்த்துப்பாடல்தான்பேச்சின்தொடக்கமாகஇருக்கும். ஓரளவுநன்றாகவேபேசியிருந்தேன். எளிதானபோட்டி. வென்றபின்பரிசளிப்போடுமுடிந்துவிடும்என்றெண்ணிக்கொண்டிருந்தோம். பரிசறிவித்தனர்.
மோகனப்பிரியாவும்நானும்மாவட்டஅளவிலானவெற்றியாளர்கள். அடுத்தசுற்றுமாநிலஅளவில்கோவையில்ஜூலை12ஆம்நாள்நிகழவுள்ளது. கலந்துகொள்ளவேண்டுமென்றனர். முதல்முறையாகமாநிலஅளவிலானபேச்சுப்போட்டி ஒன்றுக்குத்தகுதிபெற்றிருக்கிறேன்என்பதேமிகவும்வியப்பாகஇருந்தது. மாநில அளவிலானபேச்சுப்போட்டியில்பங்கேற்பதற்கு 13 ஆண்டுகள்ஆகியிருக்கிறதே என்றுஅவமானமாகவும்இருந்தது.
திருவாரூர்விளிம்புநிலைமாவட்டம். வேளாண்மைதான்முதன்மைத்தொழில். கலை, திரை, தமிழ், ஆய்வு, இலக்கியம், அரசியல்எனப்பல்வேறுதுறைகளில்சாதனைபுரிந்தவர்களின்சொந்தமாவட்டம். ஆனால், அவர்கள்யாவரும்திருவாரூரில்மட்டுமேஇருக்கவில்லை. தத்தமதுதுறைகளில்வெற்றியடையஇடம்பெயர்ந்தனர்என்பதைஉணர்ந்துசெயலாற்றநெடுங்காலம்எடுத்திருந்தது. திருவாரூருக்குதிருச்சிதான்மண்டலம். பேச்சுக்குஅதுவரைமண்டலம்தாண்டியதில்லை.
முதல்முறைமாநிலப்போட்டி. கோவையில்நிகழ்கிறது, அதுவும்கொடிசியாவளாகத்தில்நிகழ்கிறது. வெற்றித்தமிழர்பேரவையின்திருவாரூர்மாவட்டப்பொறுப்பாளரின்ஊரிலிருந்து ஜூலை 11 இரவு கோவைக்குப்பேருந்துகிளம்புகிறது. அங்குசென்றுஅவர்களோடுஇணையவேண்டும். போட்டியாளர்கூடுதலாகஒருவரைஅழைத்துவர அனுமதி அளித்திருந்தனர்.
மொத்தம்ஏழுதலைப்புகள். மாவட்டஅளவிலானபோட்டியில்பேசியதலைப்பைமாநிலப்போட்டியில்பேசக்கூடாது. மாநிலப்போட்டிக்கு, “கள்ளிக்காட்டுஇதிகாசம்காவியமா? வரலாறா?” எனும்தலைப்பைத்தெரிவுசெய்திருந்தேன். எனினும், கள்ளிக்காட்டுஇதிகாசம்என்கையிருப்பில்இல்லை. நினைத்தவுடன்புத்தகம்வாங்குமளவுதிருவாரூர்ஒன்றும்பெருநகரம்கிடையாது. இணையதளவிற்பனையும்இன்றிருப்பதுபோல்அன்றில்லை. திரு.வி.க. கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேரா. தனராசன் தம் ஆய்வாளர்கள் செய்தளித்த வைரமுத்து படைப்புகள் மீதான ஆய்வேடுகளை அளித்தது உதவியாய் இருந்தது.
கள்ளிக்காட்டுஇதிகாசம் போன்ற நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட நூலை ஒரேமூச்சில்படிக்கும்வாசிப்புத்திறனெல்லாம்அப்போதுஇல்லை. அதற்கானசூழலும்இல்லை. எனினும், இணையத்தமிழ்ச்சமூகம்கைக்கொடுத்தது. பல்வேறுவலைப்பூமற்றும்இணையதளங்களில் (Blog+Website) இந்தப்படைப்புமீதானவிவாதங்கள்நடந்திருந்தன. அவற்றைமுழுமையாகவாசித்ததிலேஇதுதான்கதைப்போக்குஎன்பதைஅறியமுடிந்தது.
(இப்போது, 2021. அன்றிருந்ததைவிடகாத்திரமானவிவாதங்கள்முகநூலில்நடைபெற்றிருந்தாலும்அவையாவும்முகநூல்தனிக்கணக்குகள்என்பதால்கூகுள் தேடல் இவற்றை அடையாளப்படுத்தாது. எழுத்தாள பெருமக்களுள் பலரும் முகநூலில் எழுதுவதை
அப்படியே விட்டுவிடுகின்றனர். அன்றாடம் சில நேரம் செலவிட்டு,
அதை copy செய்து ஒரு வலைப்பூ தொடங்கி
paste செய்தால், தேடல் உடையோருக்கு
Google Searchஆல் நலம் பயக்கும்.தற்காலத்தில்வலைப்பூவில் (Blog) எழுதுபவர்கள்எண்ணிக்கை சமூகவலைதளங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவு. பிறகொரு முக்கியச் செய்தி! நீங்கள் என் வலைப்பூவில்தான் இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.)
எங்கே விட்டோம்! ஆங். ஜூலை 11 இரவு புறவழிச்சாலை
ஆம்னி பேருந்து.
விடியற்காலையில்ஒருபேருந்துநிலையத்தில்பொறுப்பாளர்கள்சிலரோடுஇறக்கிவிட்டனர். அப்பேருந்துநிலையம்பொள்ளாச்சிஎனபின்னாட்களில்அங்கு சென்று வருகையில்தெரியலானது. உடனிருந்தபொறுப்பாளர்கள்கோவைகாந்திபுரம்பேருந்துநிலையம்அருகே ஒருதனியார்விடுதிக்குஅழைத்துச்சென்றனர். அப்படியெல்லாம்பெயர்வைப்பார்களாஎன்றிருந்தது. Hotel La La.அங்குகுளித்து, உணவுமுடித்து, தயாராகியிருந்தோம். அங்குதான்மாநிலம்முழுவதிலுமிருந்துவந்தபோட்டியாளர்கள்சிலரும்தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கம்போல்இருக்கும்குசலவிசாரிப்புகள்நிகழ்ந்தன. பொதுவாக, போட்டியாளர்கள்போட்டிக்குப்பிறகு, இயல்புநிலையில்இருப்பதற்குவாய்ப்புகுறைவு. மாநிலப்போட்டியென்பதால்புதியோர்பலரும்அறிமுகமாகினர். ஆனாலும், பலரும்வெற்றிபெறவேண்டும்என்றமும்முரத்தில்மற்றவர்களிடம்பேசுவதில்கவனம்செலுத்தாமல்இருந்தனர். ஏனெனில், முதல்பரிசு 25,000 உரூபா. அந்தக்காலத்தில்மிகஉயர்ந்தபரிசுத்தொகைஅதுவாகத்தான்இருக்கும்.
திரு. மரபின்மைந்தன்முத்தையா, திரு. கபிலன்வைரமுத்துநடுவர்களாகஇருக்கவெற்றித்தமிழர்பேரவைநிகழ்த்தும்மாநிலஅளவிலானபேச்சுப்போட்டிபூமிக்குஅடியில்தொடங்கியது. குலுக்கல்முறையிலானஎண்வரிசைப்படி, பேசஅழைத்தனர். பலரும்திரு. வைரமுத்துஅவர்களுடையதிரைப்பங்களிப்புசார்ந்ததலைப்புகளையேதேர்ந்தெடுத்திருந்தனர். அத்தகையதலைப்பில்கவர்ச்சிகரமாகபேசமுடியும். திரைத்துறைசார்தகவல்கள்பலவும்எல்லார்க்கும்தெரிந்திருக்கும். ஆதலால், ஒப்பீட்டளவில்ஏனையவர்களைவிடஇவர்களுக்குக்கைத்தட்டல்அதிகம்கிடைத்தது.
நான்பேசவேண்டியநேரம்வந்தது. பேசினேன். முதல்முறையாகமாநிலஅளவிலானபேச்சுப்போட்டியில்பேசுகிறேன்என்பதால்உண்டாகும்பதட்டத்தைவெளிக்காட்டாமல்இருக்கமுனைந்தேன். ஏற்கெனவே, பலரும்பேசிவிட்டதால்தொடர்ச்சியாகக்கேட்டஅயர்ச்சிநடுவர்களுக்கும்போட்டியாளர்களுக்கும்பார்வையாளர்களுக்கும்இருக்கும். அந்தஅயர்ச்சியைநீக்க, அவர்கள்கவனத்தைஈர்த்தாகவேண்டும், புதியகருத்துகளைத்தந்தாகவேண்டும். இவையாவற்றையும்கவனத்தில்கொண்டு கள்ளிக்காட்டுஇதிகாசம்காவியமா? வரலாறா? எனும்தலைப்பில்பேசினேன். இணையத்தில்குறிப்பெடுத்தது, பேருந்தின்உட்புறநைட்லேம்ப்வெளிச்சத்தில்படித்தது, மோகனப்பிரியாவின்முதன்மைக்குறிப்புகள் (இதேதலைப்பில்மாவட்டஅளவில்பேசியிருந்தார்), மேடையில்தன்னிச்சையாகத்தோன்றும்கருத்துகள்என சீர்மையற்ற கலவையாக பேச்சு அமைந்தது. ஆனால், அது புதியவித சீர்மையை
அளித்தது.
உரை காண்க:
கடந்த பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல, பலவற்றைக் கவனத்தில் கொண்டு பேசியதில் நிமிடத்தைக்
கவனிக்கவில்லை. 7 நிமிட நிறைவில் அடித்த மணியை 10 நிமிட நிறைவு மணியாகக் கருதி மூன்று நிமிடம் முன்னதாகவே முடித்துவிட்டேன்.
கீழிறங்கி வருகையில்தான், நண்பர்கள் செய்கை வாயிலாகத் தெரியப்படுத்தினர். என்ன செய்வது முடிந்தது முடிந்ததுதான்.
என் பேச்சின் மீதான கருத்தைத் திரு. கபிலன் வைரமுத்து
அளித்தார். “முதலில் நான் ஒரு மதிப்பெண் இட்டேன், காலம் செல்லச்செல்ல அந்த மதிப்பெண் அதிகரித்துக்கொண்டே சென்றது” என்பதாய் குறிப்பிட்டார்.
கடலில் பயணித்த கப்பலைக் கரைசேர்த்த மாலுமிபோல பேசிமுடித்து
இருக்கை அமர்ந்தேன். அம்பெய்தும்
வரைதான் அதன் பாதையை நாம் தீர்மானிக்க முடியும். எய்திய பிறகு,
அதன் பாதையை அதுவே தீர்மானிக்கும். பேசி முடித்தாயிற்று,
இனி கவலை இல்லை. அந்தப் பேச்சு தக்கதாய் இருப்பின்,
பரிசைப் பெறும். இல்லெனின், எதிர்காலத்தில் பெறலாகும் பரிசுக்குப் பயிற்சியாய் மாறும். கொஞ்சம் சமனிலைப்படுத்தி, ஏற்பாட்டாளர்கள் முன்னமே கொடுத்திருந்த
பண்டங்களைக் கொரிக்கத் தொடங்கினேன்.
நண்பகலுக்குள் பேச்சுப்போட்டி முடிந்தது. நடுவர்களின் மதிப்பெண்கள் கூட்டப்பட்டு மொத்த
மதிப்பெண் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். விவரம் வருமாறு.
·முதல் பரிசு– 25,000 உரூ– சாத்தம்மைப்
பிரியா, திருச்சி (தற்போது உதவிப் பேரா.)
·இரண்டாம் பரிசு– 10,000 உரூ– வேதவள்ளி,
தஞ்சாவூர் (தற்போது உதவிப் பேரா.)
·மூன்றாம் பரிசு– 15,000 உரூ- கஜலெட்சுமி,
திருச்சி (தற்போது குடும்பத்தலைவி)
·ஊக்கப்பரிசு– 5,000 உரூ- தமிழ்பாரதன்,
திருவாரூர் (தற்போது ஆய்வு மாணவர்)
·ஊக்கப்பரிசு– 5,0000 உரூ– (யாரென்று நினைவில் இல்லை)
கள்ளிக்காட்டு இதிகாசம் குறித்து அப்போட்டியில் பேசிய ஒருவனும்
நான்தான், நன்றாகப் பேசியும் 7 நிமிடங்களில்
உரையை முடித்தவனும் நான்தான். வென்றவர்களுள் இளையோனும் நான்தான்,
ஒரே ஆணும் நான்தான்.எல்லாம் இயல்பாக அமைந்துபோனது. அரிஸ்டாட்டிலை வாசித்தபிறகு, தற்செயல் நிகழ்வு, உடனிகழ்வு குறித்த புரிதல்கள் அதிகரித்துள்ளன. ஆதலால், நான் என்று பெருமைப்பட்டவற்றை அடித்துவிட்டேன்.
முதல்முறையாய் மாநில அளவிலான போட்டியில் பங்கெடுத்து, பெருந்தலைகள் பலவற்றைத் தாண்டி பரிசு வென்றது மகிழ்வே. பொதுவாக மூன்றாம் பரிசுக்குப் பிறகு, ஆறுதல் பரிசு என்றே
பலரும் அளிப்பர். மூன்றாம் பரிசுக்கு அடுத்த பரிசு, ஆறுதல் பரிசாக (ஆறுதல் செய்வதாக) இருக்கக்கூடாது, ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டுமென்று
ஊக்கப்பரிசு என்று திரு. வைரமுத்து அவர்கள் பெயரிட்டுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மேடையில் அறிவித்தனர்.
இந்தப் பரிசாளர் பட்டியலைப் பார்த்தால், முதல் நால்வரும் சோழ மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்
என்பது தெரியும். (மற்றொரு ஊக்கப்பரிசு பெற்றவர் கொங்கு மண்டலமாக
இருக்க வேண்டும்). ஏனைய மண்டலத்தினரும்/மாவட்டத்தினரும் சளைத்தவர்கள்
அல்லர். ஆனால், அக்காலத்தில் சோழ
மண்டலம் வலிமையான பேச்சாளர்களைக் கொண்டிருந்தது.
தமிழ் வளர்ச்சித் துறை
(25,000 முதல்பரிசு), இன்றைய தேதியில்
(ஜூலை 13 2021) திமுகவில் இருக்கும் திரு.
பி.பழனியப்பன், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்
66ஆம் பிறந்தநாளுக்காக நடத்திய பேச்சுப்போட்டி (66,000 முதல்பரிசு), மதிமுக மாணவரணி நடத்திய பேச்சுப்போட்டி
(ஒரு இலட்சம் முதல் பரிசு) என பெருந்தொகை கொண்ட
மாநில அளவிலான போட்டிகள் பலவற்றிலும் சாத்தம்மைப் பிரியா அக்காதான் முதலிடம்.
(கதை சொல்லி பவா செல்லதுரை போல், இவரது பேச்சில்
எடுத்தாளும் மாடப்புறா, கருப்புரோஜா கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும்
கேக்கலாம்). மாநில அளவில் பல்வேறு பரிசுகளை வென்ற வேதவள்ளி அக்காவுக்குக்
குரலே போதும். உச்சரிப்பிலேயே அசர வைத்துவிடுவார். குரலும் ஒலியும் தெளிவாக இருக்கும்போது, அதனோடு இயையும்
கருத்தும் அற்புதமாகத்தானே இருக்கும்.
இத்தகையவர்களோடுதான் அன்றைய மேடையைப் பகிர்ந்துகொண்டேன். ஆமாம், வெற்றியாளர்களை
நடுவர்களோடு படமெடுத்துக்கொள்ள மேடைக்கு அழைத்தனர். ஒருவழியாக
நிம்மதிப் பெருமூச்சோடு, உணவுக்குத் தயாரானோம். போட்டிக்குப் பிறகு போட்டியாளர்கள், நண்பர்களாக மாறினாலும்
சின்னதொரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும் எந்த இடத்தில் இடறினோம் என்று.
பொதுவாக இந்த உறுத்தல் முதல்பரிசு பெற்றவரைத் தவிர அனைவருக்குமே இருக்குமென்று
எண்ணுகிறேன். எனினும், யாவையும் மறந்து
அந்தந்த நொடி வாழ்வை அனுபவித்தலே நலம். உணவு அருமை. கற்பூரக் கட்டிகள் எரிய, சூடாக இருக்கும் பாத்திரத்திலிருந்து
நாண் முதலான உணவுகளை பஃபே முறையில் உண்டோம்.
பிறகு, மீண்டும்
லா லா விடுதிக்குப் பயணப்பட்டோம். நன்றாக உறங்கினோம்.
வந்த கனவுகளையெல்லாம் விரித்து எழுதலாம். ஏற்கெனவே,
நீங்கள் 14 நிமிடங்களாக வாசித்து வருகிறீர்கள்.
அப்றம் உங்களுக்கும் அயர்ச்சி வந்திடும் என்ற காரணத்தினால், அவற்றைத் தவிர்க்கிறேன். மாலை வந்தது. மோகனப்பிரியா அப்பாவின் துணையோடு காலாற கோவையின் வீதிகளைச் சுற்றினோம்.
நாட்டார் வழிபாடுகள் உட்புறத் தெருக்களில் உள்ள சிறுகோயில்களில் நிகழ்ந்து
கொண்டிருந்தது. கீழ்/மேம்பாலம் இடையே தொடர்வண்டிப்
போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. கோனியம்மன் கோயிலுக்கு
அன்றைக்குத் தான் திருக்குடமுழுக்கு என்பதாய் ஊரெல்லாம் சுவரொட்டிகள் இருந்தன.
அந்தக்கோயிலின் இருப்பிடமறிந்து அங்கு சென்றோம். பிரசாதம் உண்டு, பொறுமையாக நடைபயின்று லா லா விடுதியடைந்தோம்.
மோகனப்பிரியாவின் அப்பா ஆசிரியர் என்பதாலும் சமூக அக்கறை மிக்கவர்
என்பதாலும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாட வைத்தார்கள். அப்படித்தான், அந்த விடுதியில்
குழுமியிருந்த முன்பறியா மாணவர்களுடன் பேசத்தொடங்கினோம். களைப்பு
தந்த தூக்கத்தை இருட்டடிப்பு செய்து கலந்துரையாடினோம் நடுஇரவு வரை. ஒருவழியாக நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியபிறகே, அறை சென்று உறங்கினோம்.
காலை முன்கூட்டியெழுந்து தயாராகியாச்சு. புதுச்சட்டை வாங்கியிருந்தேன், ஒருவேளை பரிசுபெற நேர்ந்தால், அணிந்துகொள்ளலாம் என்று.
அதை அணிந்தபிறகு, வெளியேறி வாகனமேறி போக்குவரத்து
நெரிசலூடே கொடிசியா வளாகம் சென்றோம். ஆமாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்த அதே கொடிசியா வளாகம். அங்குதான் நிகழ்வு நடைபெறத் தயாராய் இருந்தது. வாகனம்
விட்டு இறங்குகையிலே திரைத்துறை, அரசியலுலகு சார்ந்த முன்னணி
ஆளுமைகள் எதிர்ப்பட்டனர். எல்லாரும் யாரோ ஒருவருக்காகக் காத்துக்கொண்டிருப்பதாய்
தெரிந்தது. அப்போது வரை எனக்குத் தெரியவில்லை யார் வரப்போகிறார்
என்று.
அப்படியோரு வளாகத்தை அதுவரை நேரில் கண்டதில்லை. பெரிய நீண்ட வளாகம். பொள்ளாச்சி
பேருந்துநிலையத்தில் விட்டுச்சென்ற, ஆம்னி பேருந்தில் இருந்த
திருவாரூர்க்காரர்களை அடையாளங்கண்டு அவர்களோடு இணைந்தோம். பரிசு
அறிவிக்கப்பெற்றதை அவர்கள் அறிந்திருந்ததை அவர்கள் தெரிவித்த வாழ்த்துகள் தெரியப்படுத்தின.
அவர்களுள் ஒருவர், “யார் வரப்போறாங்க தெரியுமா”
என்ற கேட்க, அதற்குள்ளாக வேறொருவர் “அப்துல்கலாம் வர்ராறு” என்றார். அவர்ட்ட பரிசு வாங்குறதுலாம் பெரிய விசயம் என்று இன்னொருவர் சொல்லுமுன்னமே
கற்பனைகள் எங்கெங்கோ சென்றன.
ஆனால், அதற்கெல்லாம்
வாய்ப்பற்ற சூழலே அங்கிருந்தது. அவ்வளவுபெரிய வளாகம்.
வளாகம் நிரம்பிய மனிதர்கள். மேனாள் குடியரசுத்
தலைவருக்கான ப்ரொடொகால் வேறு. நாங்கள் அரங்கத்தின் பிற்பகுதியில்
இருந்தோம். பரிசு பெறுவோரை மேடைக்கு ஏற்றுவது அவ்வளவு எளிதன்று
என்பதை, முன்பு பங்கேற்ற பரிசளிப்பு நிகழ்வுகளின் அனுபவங்களிலிருந்து
அறிவேன். இருக்கட்டும், அப்துல்கலாம் அவர்களின்
பேச்சை நேரில் கேட்கும் வாய்ப்பாவது கிட்டியதே என்று மகிழ்ந்தேன்.
மேதகு அப்துல்கலாம் அவர்கள் வருகை தந்ததும் காலை அமர்வு தொடங்கியது. பிறநாடுகளிலிருந்தும் சிறப்பு விருந்தினர்கள்
வந்திருந்தனர். குழந்தமைக் குரலோடு பேச்சைத் தொடங்கினார் ஏபிஜே.
அரங்குக்கு இருபுறமும் இருந்த திரையில் அவரது உருவம் மிகப்பெரியதாக இருந்தது.
எட்டி இருந்து பார்த்தாலும் எட்டி இருந்து பார்ப்பதைப் போலவே தோன்றியது
அந்தத் திரையும். ஏற்கெனவே தயாரித்து வைத்த உரையை மக்களுக்கு
அளித்துக்கொண்டிருந்தார். கவிஞர்கள் திருநாள் என்ற பொருண்மை தரப்பெற்றிருந்ததால்,
புறநானூறு-திருக்குறள் இவற்றிலிருந்து மேற்கோள்
குறிப்பிட்டு உரையாற்றினார். இத்தகு பெரியவர்களின் பேச்சில்,
சராசரி பேச்சாளர்கள் பயன்படுத்தும் பஞ்ச் வசனங்கள் இருப்பதில்லை.
கருத்துகளே நிறைந்திருக்கும். செறிவான ஒன்றாகவே
அமைந்திருந்தது. கவிஞர் விழாவில் விஞ்ஞானிக்கென்ன வேலை என்ற அடிப்படைக்கேள்வி
எழாமல் இல்லை. ஒரு வாசகராக, இலக்கிய நுகர்வோராக,
கலை இரசிகராக அப்துல்கலாம் அவர்கள் தன் கருத்துகளை முன்வைத்திருந்தார்.
(கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எடுக்கப்பட்ட நிகழ்விலும்
அப்துல்கலாம் அவர்கள் பங்கேற்று உரையாற்றிருந்ததை பின்னாட்களில் அறிந்தேன்).
பேசி முடித்து, முதன்மை விருந்தினர்கள் உரை நிறைவுற்றதும்
அப்துல்கலாம் அவர்கள் விடைபெறுவதாக, விழா தொகுப்பாளர் அறிவித்தார்.
அவரிடம் பரிசுபெறும் வாய்ப்பு தவறியது. வந்தமர்ந்த
கூட்டத்தில் பெரும்பகுதி அவரைக்காண வெளியே சென்றது. முன்னாள்
குடியரசுத்தலைவருக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் சூழ, அணியமாய்
இருந்த அம்பாசடர் காரில் ஏறிச் சென்றார்.
கொடிசியா இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. அடுத்தடுத்த அமர்வுகள், சிறப்பிப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்தன. நாகப்பட்டிணத்திலிருந்து வந்திருந்தோர் பரிசுபெற்றதை அறிந்து, போட்டியில் பேசியதன் கருத்துச் சாரத்தைக் கேட்டறிந்தனர். அப்போது, அங்கொருவர் இருந்தார். வாஞ்சையோடு உரையாடினார். கல்வி, கலை, கவிதை, பேச்சு தொடர்பான உரையாடலாகக்
கட்டமைத்தார். அவரை யாரென்று அதுவரை அறிந்ததில்லை. அவரை “முக்கியமான கவிஞர்” என்று
அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர். அவர் வேறு யாருமில்லை
“கொஞ்சம் கொஞ்சமாய் சாகவேண்டுமென முடிவெடுத்தபிறகு, காதல்
சரியான வழிதான்” எனப்பொருள்படும் கவிதையை எழுதிய, பிறந்தநாள் வாழ்த்துப்பாடலைத் தமிழில் இயற்றிய, தற்காலக் கவிஞர்களின் தாய்வீடு
அறிவுமதி அவர்களே.
இதற்கிடையே மதிய உணவும் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதுபோன்ற பெருநிகழ்வுகள் திட்டமிட்டபடி நடத்திமுடிப்பது
சவாலானது. ஒருபுறம் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்க மறுபுறம்
மதிய உணவு நடந்தது. கோவையில் உள்ள பள்ளிகளுக்கு திரு. வைரமுத்து
அவர்களின் அனைத்துப் படைப்புகளடங்கிய பெட்டி தரப்பெற்றன. பல்வேறு
இலக்கிய நல உதவிகள் வழங்கப்பெற்றன. அதோடே பரிசளிப்பும்.
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மட்டுமே மாணவர் பெயர், கல்லூரி,
ஊர் விவரங்களோடு அறிவிக்கப்பெற்றன. ஊக்கப்பரிசுகள்
வெறுமனே அறிவிக்கப்பெற்றன.
வருத்தம். அவ்வளவு
பெரிய மக்கள் திரள், கொடிசியா வளாகம், எனக்காக
இல்லாவிடினும் என் கல்லூரி, ஊருக்கேனும் கைத்தட்டல் கிட்டியிருக்கும்.
எனினும், அவ்வளவு பெரிய மேடையில் பரிசு வாங்கச்
சென்றதே பெருவிடயம் அப்போதைய எனக்கு. எதிரே அவ்வளவு
கேமிராக்கள் ஒளிர சான்றிதழும் பணமுடிப்பும் ஊக்கப்பரிசாக அளித்தார் திரு. வைரமுத்து
அவர்கள். ஐயாயிரம் உரூபா பணத்தை ஒரு பொற்கிழி வடிவ துணியுள்
(அதுவும் பொன்னிறத்தில்) வைத்தளித்தார்.
கையெழுத்துத் தனித்துவத்திற்கு/அழகியலுக்கு
Typography என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கையெழுத்துத்
தனித்துவமாக இல்லாதோரும் கையொப்பத்தைத் தனித்துவமாகக் கொண்டிருப்பர். வைரமுத்து அவர்களின் கையொப்பம் தனித்துவமானது அல்லது கவித்துவமானது.
அவரது கையொப்பமிட்ட சான்றிதழும் பொற்கிழியோடும் மேடையிலிருந்து விடைபெற்றேன்.
பரிசுபெற்ற படத்தை அரங்குக்கு வெளியே பிரிண்ட் எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தனர். பெறச்சென்றால் தொகை என்றனர். ஒளிப்படம் எடுப்பதை ஒப்பந்தம் செய்த நிறுவனம் அவற்றை விற்பனையாக மாற்றியது.
என்னுடைய பரிசளிப்புப் படத்தைத் தேடி எடுத்தனர். அந்தக் கோப்பின் எண்ணைக் குறிப்பிட்டு, அச்சிட்டுத்
தருவதற்கு அவர்கள் கேட்டது 100 உரூபா என்று நினைவு. (அந்தக்காலத்தில் பரிசுபெற்ற படத்தை ஐம்பது உரூபா கொடுத்துப் பெறுவதே மிக அதிகம்
திருவாரூரில்). கொடுக்க மனமின்றி படம் பெறாமலே வந்துவிட்டேன்.
இருப்பிடம் வந்தால் பரிசு வென்றவர்கள் எல்லாம் கையில் படத்தோடு இருந்தனர்.
வாய்ப்பை விட்டுட்டோமோ என்று எண்ணம் மட்டும் ஓய்ந்தபாடில்லை.
(பரிசுபெற்ற படம் பெறுவதில் பலவித அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன்.
குறிப்பாக, 2015இல் கலைஞரிடம் பரிசு பெற்ற படத்தை
உடனடியாகப் பெறமுடியாமல் மாதமொன்று காத்திருந்து, அறிவாலயத்திலிருந்து
கோபாலபுரம் நடந்தேசென்று புகைப்படக் கலைஞரைக் கண்டறிந்து, அவரிடம்
இருநூறு உரூபா கொடுத்தபிறகு தான் பெறமுடிந்தது. படம் பெறுவது குறித்து, பிறகு
விரிவாகப் பதிவு செய்கிறேன்)
எப்போதுமே, பரிசு
பெற்ற பிறகு, நிம்மதியாய் இருக்கலாம். வீடு/ஊர் திரும்புதல் ஒன்றே கடமை. பிற்பகலுக்குமேல்,
கருத்தரங்க அமர்வுகள் நிகழ்ந்தன. பேசவந்த ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு படைப்பே தலைப்பு. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகள்,
பேரா. பர்வீன் சுல்தானா, திரு. ஸ்டாலின் குணசேகரன் எனப் பல ஆளுமைகளை அந்த மேடையில்தான் முதன்முதலில்
நேரில் கண்டேன். பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் முதலான பல முன்னணி பத்திரிக்கை,
ஊடகத்துறையினரும் வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தனர். அவர்களையும் அங்குதான் நேரில் கண்டேன். அப்போதெல்லாம்
பேச்சாளர்கள் பேசும் அனைத்துமே புதிதானதாகத் தோன்றும். யாவற்றையும்
குறிப்பெடுக்கத் தோன்றும்….
அன்றைய நாள் மாலை வந்தது.
திரையுலகினரின் பாராட்டு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. இயக்குநர்கள் கே. பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார் என்ற நான்கு தலைமுறை இயக்குநர்களின்
பங்கேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. இதில்
கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் வரவில்லை. (லிங்கா படப்பிடிப்பில் இருந்திருக்கிறார் என்று
தகவல். அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி ஒலிவாயிலாக எங்களை வந்தடைந்தது). கே. பாலச்சந்தர் அவர்கள் தமக்கேயுரிய முதிர்ந்த நடையில் வாழ்த்தினார். அடுத்து பாரதிராஜா அவர்கள் பேசத்தொடங்கினார். வைரமுத்து அவர்களுடன் இளமைப் பருவத்தில்
நிகழ்ந்த கசப்பான உணர்வுகளை நினைவுபடுத்திப் பேச்சைத் தொடர்ந்தார். அடுத்து மணிரத்னம்
அவர்களுடைய உரை அமைந்தது.
விழாவின் நிறைவாக, கவிஞர் வைரமுத்து பேசினார். பாரதிராஜா அவர்களுக்குப்
பதில் தருவதாய் அமைந்தது அதன் தொடக்கம், “நமக்கிடையேயானதைத் தனியறையில் பேச வேண்டும்,
பொதுவில் பேசினால் பொதுவில் பதிலளிப்பதே முறையானது” என்று அவர் தன் தரப்பு நியாயத்தை
எடுத்து வைத்தார். இருவரும் மேடையின் இருபுறத்திலும் இருந்தனர். வழக்காடு மன்றம்போலத்
தோன்றியது. ஒரு கட்டத்தில் “வைரமுத்து, இது உன்னுடைய விழா, உன்னுடைய இரசிகர்கள். வாழ்த்துகள்.
வருகிறேன்” எனப் பொருள்படுமாறு கூறிவிட்டு உடனடியாக மேடையைவிட்டு இறங்கிச் சென்றார்
அல்லது வெளிநடப்பு செய்தார்.
அன்றைய நிகழ்வை அவர் நெகிழ்ச்சியாகக் கொண்டாடினார். ஆனால், மகிழ்ச்சியாகக்
கொண்டாடினாரா என்பது ஐயமே. அவர் நன்றி சொன்னவிதம் இன்றளவும் நினைவுள்ளது. அறுபதாண்டுகள்
வாழ்ந்த மனிதன், தன் துறையில் உச்சம் தொட்ட ஒருவன் எத்தனை பேருக்கு நன்றி சொல்லியாக
வேண்டும்… ஆனால், அவர் தனது உடலுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டார்.
இரசிகர்களுக்கும் மக்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி சொல்ல அந்தியில் நிறைவடைந்தது
நிகழ்வு.
கொடிசியாவிலிருந்து வெளியே வந்தால் அத்தனை வாகனங்கள் புறப்படத்
தயாராய் இருந்தன. திருவாரூர் மாவட்டத்தினர் சீக்கிரம் ஆம்னி பேருந்தில் ஏறச் சொல்லினர்.
ஆனால், அந்தப் பரிசு பெற்ற படத்தைப் பெறாமல் போவது சரியாய்ப் படவில்லை. இருங்கள் வரேன்
என்று சொல்லி, குறித்து வைத்த எண்ணைக் (AMS_0036) கொண்டு, படங்கள் பிரிண்ட் எடுக்கும்
இடத்திற்கு சென்றால், அங்கு தந்த மின்சார சப்ளை நிறுத்திவிட்டனர். இனி வழியில்லை போலும்
என்று, எண்ணிக்கொண்டிருக்கையில், மின்னஞ்சல் முகவரி கொடுங்க ஊருக்குப்போய் அனுப்புறோம்
என்றனர் (இப்போது 2021இல் இருப்பதுபோல், வைஃபை, மோடம், மொபைல் டேட்டா பரவலாக்கம் அப்போது
இல்லை என்றறிக). பென்டிரைவ் இருக்கு. ஏத்தித் தரலாமா? என்று கேட்க, சரி கொடுங்க என்று
வாங்கி உடன் High Resolution படம் ஏத்திக்கொடுத்தனர். 100 உரூபா பணம் எடுத்துக்கொடுக்க
பிரிண்ட் எடுக்கலல்ல. வேண்டாம்பா என்றனர். (அந்தப் புகைப்பட நிறுவனத்தை சென்னையில்
பின்னாளில் சந்தித்து நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன். அவர்கள் இருநாள் எடுத்த காணொளிப்
பதிவுகள் ஒருமணிநேர நிகழ்ச்சியாக சன் டிவியில் ஞாயிறு ஒன்றில் ஒளிபரப்பானது)