26.07.2020
கோவிட்
-19 தடுப்பூசிக்கான
பந்தயத்தில் இந்தியா
(இந்தியன்
சயின்ஸ் இதழின் நிர்வாக ஆசிரியர் என்.பத்ரான் நாயர் எழுதிய ஆங்கில உரையின்
தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்)
ஆங்கிலக் கட்டுரை : http://airworldservice.org/english/archives/101798
சீன நகரமான
வூஹானிலிருந்து கொரோனோ வைரஸ் திடீரென பரவி, உலகையே மூடிமறைத்து
விட்டது – அதன் பரவலைக் கையாள்வதில் முதலாவதாக அதன் அறிகுறிகள், அது தொற்றுநோயாக
இருந்தாலும் அல்லது தொற்றுநோயாக இல்லாவிட்டாலும் சரி; இரண்டாவதாக மிக
முக்கியமாக, உடனடி ஆன்டிஜென்கள்
ஏதேனும் இருந்ததா?
ஜனவரி நடுப்பகுதியில்
இந்தியா தனது குடிமக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தனது செயல்களை
ஒருங்கிணைத்து சீனாவுக்குப் பயண ஆலோசனைகளை வழங்கியது. உலக சுகாதார அமைப்பு (WHO) அனைத்து நாடுகளுக்கும்
விரிவான தொழில்நுட்ப வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் வழங்கிய பின்னர், அந்நேரத்தில் வைரஸ்
பற்றி அறியப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும்
பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
வைரஸ் தொற்று பல
நாடுகளுக்குப் பரவியதால், இதை WHO உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. முன்னெச்சரிக்கையைத் தவிர வேறு
எந்த சிகிச்சையும் இல்லாத நிலையில், கோவிட்-19க்கு
சிறந்த தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்திய ஆய்வகங்கள்
இணைந்தன.
கோவிட்-19இன்
பரவலாக்கத்தால், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தடுப்பூசி உருவாக்கத்திற்கு மற்றும்
மருந்து சோதனைகளைக் கண்காணிக்க அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர்
பேராசிரியர் கே. விஜய் ராகவன் மற்றும் நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் டாக்டர்
வினோத் கே பால் தலைமையில் பல்துறை தேசிய பணிக்குழுவை இந்தியா அமைத்தது.
இந்தப் பணிக்குழுவில்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும்
தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), உயிரி தொழில்நுட்பத் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி
மற்றும் வளர்ச்சி அமைப்பு, சுகாதார சேவைகள்
இயக்குநரக ஜெனரல் மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் -இருந்து
வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பயனுள்ள மருந்தை உருவாக்குவதற்கான
இந்தியாவின் அணுகுமுறை முப்பரிமாணமானது. முதலாவது தற்போதுள்ள மருந்துகளின்
மறுநிலைப்படுத்தல், இரண்டாவது புதிய
மருந்துகள் மற்றும் மூலக்கூறுகளை உருவாக்குதல், மூன்றாவது, தாவர சாறுகள் மற்றும்
பொதுவான வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை தயாரித்தல்.
கோவிட்-19க்கான
பயனுள்ள தடுப்பூசியைக் கண்டறிவது மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒன்று.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தடுப்பூசி உருவாக்கத்தின் பல்வேறு கட்டங்களில் சுமார் 160 தடுப்பூசிகள் உள்ளன.
ஃபார்மா மேஜர் ஸைடஸ்
காடிலா இந்தியாவில் முதன்முதலில் களத்தில் இறங்கியது, மறுசீரமைப்பு டி.என்.ஏ
தொழில்நுட்பம் மற்றும் மறுதலை மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்ச்
மாதத்தில் முன்-மருத்துவ விலங்கு சோதனைகளைத் தொடங்கியது. இப்போது தடுப்பூசி
உருவாக்கத்தின் வெவ்வேறு கட்டங்களில் ஸைடஸ் உட்பட ஏழு இந்திய மருந்து நிறுவனங்கள்
செயலாற்றுகின்றன.
இரண்டாவதாக
ஐ.சி.எம்.ஆர்-க்கு கீழ் இயங்கும் தேசிய நச்சுயிரியல் நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தை
அடிப்படையாகக் கொண்ட பாரத் பயோடெக் ஆகியவை இணைந்து உருவாக்கிய Covaxinஐ மனித சோதனைக்கு இந்திய
மருந்துக் கட்டுபாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்தார். புதுதில்லியின் அகில் ஐந்திய
மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் ரோஹ்தக் முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம்
உள்ளிட்ட 12
சுகாதார நிறுவனங்களில் கோவாக்சினுக்கான சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், உலகின் மாபெரும்
தடுப்பூசி உற்பத்தியாளரான புனேவில் உள்ள சீரம் நிறுவனம் – பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஸெனெகாவுடன் இணைந்து
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸெனெகா ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட Covishield எனும் தடுப்பூசியை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தடுப்பூசி தற்போது
பிரேசிலில் 3ஆம் கட்ட
மனித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை ஒப்புதல்கள்
கிடைத்தவுடன், சீரம் நிறுவனம் 3 முதல் 4 மில்லியன் டோஸ்களை
நிறுவனத்தின்படி உற்பத்தி செய்யும். ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் அளவில் தயாரிக்குமளவுக்கு உற்பத்தித் திறன் இருப்பதாக அது
கூறுகிறது.
தடுப்பூசி உருவாக்கத்தில்
ஈடுபட்டுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, Covishield நம்பிக்கைக்குரிய
முடிவுகளைக் காட்டியுள்ளது, பாதுகாப்பானதாகத்
தோன்றுகிறது, உடலில் வலுவான நோய்
எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.
கோவிட்-19க்கு
எதிராக சிறந்த தடுப்பூசியை உருவாக்க உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாதவகையில்
பந்தயம் நடைபெற்று வரும்சூழலில், இந்த நோய் ஏற்கனவே 1.5 கோடி மக்களைப் பாதித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் 6.32 லட்சம் மக்களின் உயிரைப் பறித்துள்ளது.
இருபெரும் மருந்து
உற்பத்தியைத் தவிர, சி.எஸ்.ஐ.ஆர் உட்பட
கோவிட்-19 க்கு எதிராக ஒரு பயனுள்ள
மருந்தை உருவாக்க பல ஆய்வகங்களும் முயற்சி செய்கின்றன. இந்திய மரபு மருத்துவ
முறையின் கீழ் இயங்கும் சில ஆய்வகங்களும் இதில் அடங்கும்.
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ்
உள்ள சில ஆய்வகங்கள் நிலையான பாதுகாப்புக்கான துணை சிகிச்சையாக நோய்தடுப்பு
சோதனைகள் மற்றும் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளைத் தொடங்கும் என்று பல்துறை
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிக்குழுவின் தலைவர் டாக்டர் பூஷண் பட்வர்தன்
தெரிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த 80,000 காவல்துறையினரும் நோய்த்தடுப்பு சோதனைகளில் ஈடுபடுவார்கள் என்று அவர்
கூறினார்.
பல்வேறு பணிக்குழுக்களைத்
தவிர, நடைமுறை தாமதங்களை
சமாளிக்க ஒவ்வொரு கட்டத்திலும் கோவிட்-19க்கான பயனுள்ள சிகிச்சையின் வளர்ச்சியை பிரதமர்
நரேந்திர மோடியே கண்காணித்து வருகிறார். தற்போதைய மனித சோதனைகள் வெற்றிகரமாக
இருந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய
தொற்றுநோய்க்கான உயிர் காக்கும் தடுப்பூசியை இந்தியா கொண்டுவர முடியும் என்று
நம்பலாம்.
நன்றி : அகில இந்திய
வானொலி, திரைகடல் ஆடிவரும்
தமிழ்நாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக