30.07.2020
ஆட்டத்தை மாற்றும் ரஃபேல்
(பாதுகாப்பு
ஆய்வாளர் உத்தம் குமார் பிஸ்வாஸ் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம்
த.க.தமிழ்பாரதன்)
ஆங்கிலக் கட்டுரை: http://airworldservice.org/english/archives/101926
அம்பாலா விமானப்படைத் தளத்தில் ஐந்து ரஃபேல் ஜெட் போர்
விமானங்களின் முதல் தொகுதி வருகை இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) போர்த்
திறன்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கிறது. அதே நேரத்தில், மூலோபாய ரீதியாக அம்பாலா விமானத்
தளத்திலேயே 17 ‘கோல்டன் ஆரோஸ்’ படைப்பிரிவைத்
தொடங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும், ஏனெனில் இது மேற்குப்
பகுதியிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
விமானப்படையின் செயல்பாட்டுத் தயார்நிலையைக் குறிக்கிறது. பிரெஞ்சு விமான
நிறுவனமான டசால்ட் உருவாக்கிய போர் விமானங்கள், தெற்கு
பிரான்சின் போர்டியாக்ஸில் உள்ள மெரிக்னாக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 7000
கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து ஏர்-டூ-ஏர் எரிபொருள்
நிரப்புதலுடனும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரெஞ்சு விமானத் தளத்தில்
நிறுத்தத்துடனும் இந்தியாவை அடைந்தன.
IAF ஆல் “கேம் சேஞ்சர்”
என்று அழைக்கப்படும் ரஃபேல் போர்விமானங்கள் இந்தியாவின் சர்வதேச
எல்லைகளில் வான்ஆற்றல் சமனிலையை மீட்டமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மை என்னவெனில், எதிர்காலத்தில், போர்த்
துறைகளில் விமான சக்தி தீர்க்கமான காரணியாக இருக்கும். ஸ்டாண்ட்-ஆஃப் வரம்புகளில்
செயல்திறன், நீண்ட தூரம் மற்றும் துல்லியமான ஆயுத விநியோகம்
வான்வழியில் நம்பத்தகுந்த குற்றத்தடுப்புத் திறனை வழங்குகிறது. ரஃபேல் ஜெட்
விமானங்களின் செயல்பாட்டுப் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, விமானப் போர்ப்படை IAFக்கு ஒரு சக்திப் பெருக்கமாக
மாறுவதற்குத் தேவையான உத்வேகத்தை வழங்கும் என்று கூறுவது மிகையாகாது.
இரண்டு பத்தாண்டுகளாக, ஐ.ஏ.எஃப் போர்ப்படையின் முதுகெலும்பாக ரஷ்ய சுகோய் சு-30
எம்.கே.ஐ விமானங்கள் அமைந்தன. இரட்டை-இருக்கை, இரட்டை-இயந்திர மல்டிரோல் போர் விமானங்களில் 272 பறக்கிறது.
அவற்றில் சில சூப்பர்சோனிக் பிரம்மோஸ் வான்வழி ஏவுகணைகளைக் கொண்டு செல்ல
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆயுத தொகுப்புடன் ரஃபேல் ஜெட் விமானங்களைத்
தொடங்கிவைப்பது படைகளின் செயல்பாட்டுத் திறனுக்கு வலுசேர்க்கும். வான்வெளியில்
உள்ள ஒவ்வொரு ரஃபேலுக்கும் எதிர்த்துச் சவால்விட குறைந்தது இரண்டு எஃப்-16 தேவைப்படும். ரஷ்யாவிலிருந்து வரவிருக்கும் எஸ்400 வான்
பாதுகாப்பு அமைப்பின் விநியோகங்களுடன் இணைந்து, ரஃபேல்
ஜெட்கள் துணைக் கண்டத்தில் இந்தியாவின் வான் வலிமையை பெரிதளவில் மேம்படுத்தும்.
ரஃபேலின் வான்வழி நடவடிக்கைகளில் எந்த எதிரியும் தலையிட
முடியாது. இஸ்ரேலிய ஹெல்மெட்-மவுண்டட் காட்சிகள், ரேடார் எச்சரிக்கை பெறுதல், குறைந்த-அலைவரிசை
ஜாமர்கள், பத்து மணிநேர விமான தரவு-பதிவு மற்றும்
கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட இந்தியாவின் குறிப்பிடத்தக்க பல்வேறு
மாற்றங்களுடன் ரஃபேல் ஜெட் மாற்றியமைக்கப்பட்டுள்ளது; இவை
ஐரோப்பிய ஏவுகணைத் தயாரிப்பாளரான எம்பிடிஏவின் ‘Meteor’ ஏவுகணை,
காட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட ஏர்-டூ-ஏர் ஏவுகணை மற்றும் ‘scalp’
ஏர்-டூ-க்ரவுண்ட் பயணிக்கும் ஏவுகணை உள்ளிட்ட பல திறமையான ஆயுதங்களை
எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை. இது முழுமையான பல்துறை விமானமாகும், இதனால் அனைத்து போர் விமானங்களையும் எதிர்கொள்ள முடியும்.
இதன்வழி, வான் வலிமை மற்றும் வான் பாதுகாப்பு, நெருக்கமான
விமான ஆதரவு, வலிமையான வான் தாக்குதல்கள், உளவு மற்றும் அணுசக்தி தடுப்பு ஆகியவை அடையவேண்டிய பணிகளாகும்.
பிரான்ஸ், எகிப்து உள்ளிட்ட பிற நாடுகள் ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்குகின்றன,
இந்தியாவுக்கு வழங்கப்படும் ஜெட் விமானங்கள் மிகவும் மேம்பட்டவை
மற்றும் குறிப்பிடத்தக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஹெல்மெட்-மவுண்டட் காட்சிகள் மற்றும் இலக்கு அமைப்பு
ஆகியவை விமானிகளுக்கு உள்வரும் ஆயுதங்களை சுடுவதற்குரிய விரைவான திறனை வழங்கும்.
எந்தவொரு தாக்குதலுக்கும் உச்சபட்ச துல்லியத்துடன் விரைவாக எதிர்வினையாற்றுவதற்காக
‘cold start’ அதிக உயரமுள்ள விமான நிலையங்களிலிருந்து
புறப்படும் திறனையும் இது கொண்டுள்ளது. போர் விமானத்தின் இறப்பைக் கூடுதலாக்க,
புதிய தலைமுறை ஏர்-டூ-க்ரவுண்ட் துல்லியமாக வழிநடத்தும் ஏவுகணை
அமைப்புகளான ‘ஹேமர்’ஐ ரஃபேலில் சேர்க்க
இந்திய விமானப்படை ஆலோசித்து வருகிறது.
இந்தியா 10 போர் விமானங்களை பெற்றுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம். விமானிகள்
மற்றும் பராமரிப்பு குழுவினரின் பயிற்சிக்காக ஐந்து ஜெட் விமானங்கள் பிரான்சில்
நிறுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் 2016 இல் கையெழுத்திடப்பட்ட
ரூ .59,000 கோடி அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் கீழ் 13
இந்திய குறிப்பித்தக்க மேம்பாடுகள் (ஐ.எஸ்.இ) உடன் பறக்கக்கூடிய
நிலையில் பிரான்சில் இருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 ரஃபேல்
மல்டி-ரோல் போர் விமானங்களின் ஒரு பகுதியாக இந்த ஜெட் விமானங்கள் உள்ளன. முதல்
ரஃபேல் ஜெட் கடந்த ஆண்டு அக்டோபரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பிரான்சிற்கு பயணம் செய்தபோது ஐ.ஏ.எஃப்-க்கு ஒப்படைக்கப்பட்டது. மொத்தமுள்ள 36
ரஃபேல்களும் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள்
வழங்கப்பட உள்ளன. இந்த விமானங்களின் முதல் பிரிவு அம்பாலா விமானப்படை தளத்தில்
நிறுத்தப்படும், ரஃபேலின் இரண்டாவது பிரிவு மேற்கு
வங்காளத்தின் ஹசிமாரா விமானத் தளத்தில் நிறுத்தப்படும். இரண்டு விமானத் தளங்களும்
மேற்கு மற்றும் கிழக்கில் தலா 18 போர்முனைகளைக் கொண்டிருக்கும்.
இந்தப் போர்முனைகளில் ரஃபேலின் இரு பிரிவுகளும் ஐ.ஏ.எஃப்-க்கு கணிசமாக
வலுசேர்க்கும்.
ரஃபேல் ஜெட் விமானங்களின் வருகை பிரான்சில் இருந்து இந்திய விமானப்படையில் இணைந்த மற்றொரு தொடர் போர் விமானங்களை குறிக்கிறது. இது 1953 ஆம் ஆண்டில் டூஃபானி போர்விமானங்கள், பின்னர் மிராஜ் 2000 உடன் தொடங்கப்பட்ட ஒரு மரபாகும். ரஃபேலின் தொடக்கம் இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான மூலோபாய பங்காண்மையை உயர்ந்தளவில் மேம்படுத்தும்.
நன்றி
: அகில இந்திய வானொலி, திரைகடல்
ஆடிவரும் தமிழ்நாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக