நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 29 ஆகஸ்ட், 2018

Foreign Scholarships for students

Please check the Scholarships

1. Australia Award  Scholarship (http://australiaawardsindo.or.id)



3. DIKTI Scholarship a. Dalam Negeri (http://www.beasiswa.dikti.go.id/dn/)b. Luar Negeri (http://beasiswa.dikti.go.id/ln/)


4. Turkey Government Scholarship (http://www.turkiyeburslari.gov.tr/index.php/en)


5. General Cultural Scholarship India (http://www.iccrindia.net/gereralscheme.html)


6. USA Government Scholarship a. (http://www.aminef.or.id/index.php)b. (http://www.iief.or.id)


7. Netherland Government Scholarship (http://www.nesoindonesia.or.id/beasiswa)


8. Korean Government Scholarship (http://www.niied.go.kr/eng/contents.do…)


9. Belgium Government Scholarship (http://www.vliruos.be/4273.aspx)


10. Israel ... ... xxx


11. Sciences Po France (http://formation.sciences-po.fr/…/the-emile-boutmy-scholars…)


12. Utrecht University Netherland (http://www.uu.nl/…/grantsandscholarships/Pages/utrechtexcel…)


13. Prasetya Mulya Business School Indonesia (http://www.pmbs.ac.id/s2/scholarship.php?lang=ENG)


14. Brunei Darussalam Government Scholarship (http://www.mofat.gov.bn/index.php/announcement)


15. Monbugakusho Scholarship Japan (http://www.id.emb-japan.go.jp/sch.html)


16. Paramadin ba University Master Fellowship Indonesia (https://gradschool.paramadina.ac.id/…/paramadina-medco-fell…)


17. PPM School of Management Indonesia (http://ppm-manajemen.ac.id/beasiswa-penuh-s2-mm-reguler/)


18. University of Twente Netherland (http://www.utwente.nl/internationa…/scholarshipsandgrants/…/)


19. Sweden Government Scholarship (http://www.studyinsweden.se/Scholarships/)


20. Chinese Government Scholarship (http://www.csc.edu.cn/laihua/scholarshipdetailen.aspx…)


21. Taiwan Government Scholarship (http://www.studyintaiwan.org/taiwan_scholarships.html)


22. United Kingdom Government SCholarship (http://www.chevening.org/indonesia/)


23. Panasonic Scholarship Japan (http://panasonic.net/citizensh…/scholarships/…/requirements/)


24. Ancora Foundation Scholarship (http://ancorafoundation.com)


25. Asian Public Intellectuals Fellowship Japan (http://www.api-fellowships.org/body/)


26. AUN/SEED-Net Scholarship (http://www.seed-net.org/index.php)


27. Art Asia Major Scholarship Korea National University of Arts (http://eng.karts.ac.kr:81/karts/board/list.jsp…)


28. Ritsumeikan Asia Pacific University Japan (http://www.apu.ac.jp/home/life/index.php?content_i


d=30)


29. Seoul National University Korea (http://en.snu.ac.kr/…/gradu…/scholarships/before-application)


30. DIKTIS Overseas Scholarship (http://www.pendis.kemenag.go.id/beasiswaln/)


31. Honjo International Scholarship Foundation Japan (http://hisf.or.jp/english/sch-f/)


32. IDB Merit Scholarship Programme for High Technology (http://www.isdb.org/irj/portal/anonymous…)


33. International HIV & Drug Use Fellowship USA (http://www.iasociety.org/fellowship.aspx)


34. Nitori International Scholarship Foundation Japan (http://www.nitori-shougakuzaidan.com/en/)


35. School of Government and Public Policy Indonesia (http://sgpp.ac.id/pages/financial-conditions)


36. Inpex Scholarship Foundation Japan 



38. Macquaire University Australia (http://www.mq.edu.au/…/macquarie_university_international_…/ . 

வெள்ளி, 22 ஜூன், 2018

நடிகர் விஜய் வென்றதும், வெல்ல வேண்டியதும்…


நடிகர் விஜய் வென்றதும், வெல்ல வேண்டியதும்…

#பிறந்தநாள்_பதிவு #விஜய் #நடிகர்

விஜய் வெற்றி பெற்ற பயணம்

      நடிகர் விஜய்யின் கரியரை கவனித்திருக்கிறீர்களாகடந்த 20 வருடங்களாக விஜயின் கரியரை பார்த்ததில் ஒரு விஷயத்தை கவனித்தேன். விஜய் பாக்ஸ் ஆபிஸீல் கில்லியாக இருக்க அவர் ஆன் ஸ்க்ரீன் மட்டுமே காரணமில்லை. பல புறக்காரணிகளும் உண்டு. அதில் முக்கியமானது திட்டமிடல்.

2000க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை இது
2000 – 3
2001 – 3
2002 – 3
2003 – 3
2004 – 3
2005 – 3  ( பந்தயமெல்லாம் சேர்க்கவில்லை)
இது விஜய் வேகமாக வளர்ந்த காலம். அவரது போட்டியாளராக அப்போது உருவாகியிருந்த அஜித்சூர்யாவிக்ரம் யாருக்குமே இந்த மாதிரி அமையவில்லை. அல்லதுஅவர்கள் அபப்டி திட்டமிடவில்லை. ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு இது மிக அவசியம் என நினைக்கிறேன். ஆண்டுக்கு படங்கள் தோல்வியானால் கூட ஒரு படம் காப்பாற்றிவிடும். அப்படித்தான் இந்தப் படிட்யலில் குஷி,  ஃப்ரெந்ஸ்யூத்,   திருமலைகில்லிதிருப்பாச்சி எல்லாம் விஜயை வளர்த்தன. சென்ற ஆண்டுக்கு கூட பைரவா என்ற தோல்வியை மெர்சல் மேஜிக் மறக்க வைத்ததை கவனிக்கலாம்.
mersal movie scene
ஆனால்அதே சமயம் வளர்ந்த பிறகும் ஆண்டுக்கு மூன்று படங்கள் என்பது எதிர்பார்ப்பைக் குறைக்கலாம். 2007ம் ஆண்டு போக்கிரிஅழகிய தமிழ்மகன் என எண்ணிக்கையை இரண்டாக குறைத்தார். அது 2012 வரை தொடர்ந்தது. அதன் பின்இப்போது ஆண்டுக்கு படங்கள் என வெளிவருகின்றன. அதில் ஒன்று பைரவா ஜில்லாவென இருக்கும். விஜயின் படங்கள் எல்லோருக்குமானவை. ஒரு வீட்டிலிருந்து பேர் படம் பார்க்க சென்றால்எல்லோருக்கும் அந்தப் படத்தில் எதாவதொரு விஷயம் இருக்க வேண்டும். போலவே,பி,சி என அனைத்து சென்டர்களுக்கும் படம் எடுக்க வேண்டும். வசூலில் சாதனை செய்த கஜினியை விட சண்டக்கோழிதான் பி&சி ஹிட். அந்த ஏரியாதான் கோலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட். அவர்களுக்காக அவ்வப்போது ஒரு படம் விஜய் நடித்தே ஆக வேண்டும்.

இது யதேச்சையாக நடந்ததல்ல. தெளிவான திட்டமிடல். இதுதான் விஜயை இன்று நெம்பர் ஒன் ஆக்கியிருக்கிறது என நினைக்கிறேன்.சினிமாவில் விஜய் எப்போதும் நேரம் தவறாத ஆள் என்பார்கள். அதை சில சமயம் நேரில்(விகடன் அவார்ட்ஸ்) பார்க்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இத்தனை மணிக்கு வருகிறேன் என்றால் வந்துவிடுவார். அதுமட்டுமில்லாமல்எல்லா விஷயங்களிலும் விஜயின் திட்டமிடல் பக்காவாக இருக்கும். அது அனிதாவை பார்க்க போவதென்றாலும் சரிஅழகிய தமிழ் மகன் பட ரிலீஸ் என்றாலும் சரி. பணம் விளையாடும் சினிமா துறையில் வசூல் சக்ர்வர்த்தியாக இருக்க ஆன் ஸ்க்ரீன் திறமை மட்டுமே போதாது. அது விஜய்க்கு நன்றாக தெரிந்திருக்கிறது. (மேற்கண்ட தரவு கார்க்கி பவா அண்ணன் முகநூலில் எழுதியது)

விஜய் வெல்ல வேண்டிய பயணம்

கிட்டத்தட்ட இடைநிலைக்கல்வி பயின்றுகொண்டிருந்த காலம் அது. அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் வழிபாட்டுக்கூட்டம் தினமும் நடக்கும். அதில் செய்தி வாசிப்பதற்காக தினசரி வீட்டிற்கு ஆஜராகும் தினமணியை வாசிப்பது வழக்கம்.

முதற் பக்கத்தில் அச்சான செய்தி முதலாவதாக வரும். நடுவே உள்ளூர்ச் செய்திகள். நிறைவுச்செய்தியாக விளையாட்டுச் செய்தி வரும்.  தினமணியின் நிறைவுப் பக்கத்தில் விநோதச் செய்திகளும், முக்கியச் செய்திகள் சிலவும் இடம் பெறும்.

      அப்படித்தான், அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் பல அறிவிக்கைகளைச் செய்திருந்தார். நடிகர்களை பலர் முன்மாதிரிகளாக வைத்துக்கொள்கிற காரணத்தால், திரைப்படங்கள் தாக்கத்தை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனால், திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டார்.

      அப்போது நடிகர் விஜய் மட்டுமே, என் படங்களில் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறாதென அறிவித்தார். அதனை பள்ளிக்கூடத்தில் வாசித்த நினைவு இன்றுமுள்ளது. சில செய்திகள் காலம் கடந்தாலும், மாறதவை, மறையாதவை. மறையக்கூடாதவை.

      அந்த வயதில் தோன்றியதென்னவோ, ஏன் பிற நடிகர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை? குடிப்பது போன்ற காட்சிகள் மட்டும் சரியானதா என்ன? போன்ற கேள்விகளே. ஆனால், வளர வளர சினிமா என்பதன் வடிவமும், வர்த்தகமும் புலனாக ஆரம்பித்தது. நடிகர்கள் பேசுவதெல்லாம் வசனங்கள், யாரோ எழுத, எல்லாரிடத்திலும் கொண்டு சேர்க்கும் கருவி நடிகர் என்பதெல்லாம் பின்னர் அறியலாயிற்று,.

anbumani ramadoss tweet about vijay's sarkaar movie first look
சில நடிகர்கள் திரையில் தான் புகை பிடிப்பார்கள், அன்றாட வாழ்வில் அப்படியில்லை. ஆனால்,  திரையில் மட்டுமின்றி நடைமுறையில் முற்போக்கு பேசும் நபர்கள் கூட புகைப்பழக்கம், குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது கண்கூடு. (இவர்கள் அன்றாடம் புகைபிடிப்பவர்கள், திரையில் புகை பிடிக்காதவர்கள் ! )

21.06.2018 அன்று நடிகர் விஜய்யின் 62ஆவதுபடத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் வெளிவந்ததும், பெரும்பான்மையோரின் வாட்ஸப் நிலைத்தரவும் அப்படத்தால் நிறைந்திருந்தன. அவர் புகைபிடிப்பது போன்ற காட்சியை விமர்சித்திருந்தனர் சிலர். புகைப்பிடிக்கமாட்டேன் என விஜய் சொன்னதாக வெளிவந்த தினத்தந்தி செய்தியை பதிவேற்றியிருந்தனர்.

ஆனால், மெர்சல் படத்தில் மேஜிசியன் விஜய்யை அடையாளப்படுத்த வேண்டுமென்று சிகரெட் புகைக்க வைத்திருப்பார் இயக்குநர். கையில் உருண்டை சுற்றும் காட்சியோடு நிறுத்தி இருந்தாலே, அவர் மருத்துவர் விஜய்யிடமிருந்து தனித்து தெரிந்திருப்பார். (இதில் உள்ள சிக்கல் என்னவெனில், கையில் உருண்டை சுற்றும் காட்சி பைரவா படத்தில் கையில் காசு சுற்றும் காட்சியின் நகல் என்று சொல்ல வாய்ப்பிருப்பதால் சிகரெட் கூடுதல் தனித்துவமாக காட்டப்பட்டுள்ளது என்பது என் கணிப்பு)  

கோகோ கோலா சோடா விளம்பரத்தில் நடித்தவரே, கத்தி படத்தில் ‘கோலா’ கம்பெனியை விமர்சித்திருப்பார். காலப்போக்கில் தன் கடந்தகாலத்தை திரைமொழியால் மாற்றியிருக்கிறார் என்ற நேர்மறை வரவேற்பு இருந்தது. ஆனால், இப்போது கடந்தகாலத்தில் கொடுத்த வாக்கை திரைமொழியால் மீறியிருக்கிறார் என்ற எதிர்மறை வசைபாடல் இருக்கிறது.

ஜல்லிக்கட்டு களத்திலும், தூத்துக்குடிக்கு ஆறுதல் சொன்ன இரவிலும் அமைதியாக சமூக வெளியில் களமிறங்குவது பாராட்டுதற்குரியது. தனக்கான அடையாளங்களை வெள்ளித்திரையிலும், வெளித் திரையிலும் ஏற்படுத்திவரும் நடிகர் விஜய் இவற்றை கவனத்தில் கொள்வது, மேலான வளர்ச்சிக்கு உதவுமென்பது கண்கூடு.

https://youtu.be/iMNtkyn8dNQ

-த.க.தமிழ்பாரதன்22.06.2018


வியாழன், 17 மே, 2018

துயிலாத நினைவுகள் | கவிதை | அன்னையர் தினம்


துயிலாத நினைவுகள்




தேனாய் ! தெளிந்தேனா !

தமிழ்த்தேனாய் இனித்தேனா !

 

இருந்தேனா எனத் தெரியவில்லை

உயிர்ப்பிழைத்தேனா என்பதறியவில்லை...

 

காதிருந்தும் கேட்கவில்லை,

வாயிருந்தும் உண்ணவில்லை...

 

என் புவியில் நான் மட்டும்

கால் எடுத்து வைத்தால் வான்முட்டும்

 

கால்நீட்டிச் சண்டையிட்டால்

காதிரண்டும் கேடயமாம்

 

பேசக்கூட யாருமில்லை; பேச கூட யாருமில்லை

பேசத்தடை ஏதுமில்லை

 

உடுத்த ஆடை ஒன்றுமில்லை

படுத்து றங்க பாயுமில்லை

 

இருட்டிலே கழிந்தன பகல்கள்

எப்படியோ கடத்தினேன் போங்கள்

 

இரைப் பையடக்கி தலைப்பை யடக்கி

என்னுயிரும் இருந்தது

 

கையடக்கி காலடக்கி பல

நாளடங்கிச் சென்றது

 

விழியிரண்டும் விரதம்தான்

விழிதிறக்கையில் உலகம்தான்

 

 

அழுதுகொண்டே பிறந்தேனாம்

ஆளநானும் அவதரித்தேனாம்

 

கருவறைச் சிறைவாசம்தான்

கடுகளவும் நினைவில்லை

 

ம்ஹூம்இவை

அம்மா சொன்னதாய் நினைவுகள்

அவள் கண்ணுறக்கம் கலைத்த பொழுதுகள்

 

அவள் துயிலாத பொழுதுகளே

என் துயிலாத நினைவுகள்....


<3 p="">
<3 p="">-த.க.தமிழ் பாரதன்
<3 p="">(அனைத்துக் கல்லூரிகளுக்கிடையிலான கவிதைப் போட்டியில் பரிசு வென்ற கவிதை ) நாள் : 25.02.2018 | இடம் : அதிராம்பட்டினம் 


வாயிலூற்றெடுத்த நாற்றமொழி…


வாயிலூற்றெடுத்த நாற்றமொழி…

சாகப் பிறக்கும் மனிதன் -
செத்துக் கொண்டிருக்கும் மொழி.

ஊமையாய் இருந்திருக்கலாம் மொழி
பேசிக்கொண்டேயிருப்பதால்,

அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது
அறிவிப்பின்றி…
இது ஓரதிசியம்
நோயாளி ஒரு மருத்துவர்.

அவருருவாக்கிய நோய்த் தாக்குதலுக்கு
அறுவை சிகிச்சை செய்பவர் அவரே..,

மொழிகளெத்தனை
பண்பாடுகள் அத்தனை.

மொழிகள் நிறைந்த உலகில்
முகவரி யற்றவை மொழிகள்

நிறத்திற்கு, நிலப்பரப்பிற்கு,
நீயா நானா வெல்வதற்கென மொழிகள்.

எழுத்துகள் நிறைந்த தொன்று.
எழுத்தே இல்லாத தொன்று

எப்போதோ பிறந்தது ஒன்று – இவை
எப்படித்தான் பிறந்திருக்குமோ இன்று

சாகப் பிறந்தவன் வாழத் தொடங்குகையில்
வாயிலூற்றெடுத்த நாற்ற மொழியெல்லாம்
வாழுமொழியிலிருந்து சாகத் தொடங்குமோ…!

குருதிக்கு நிறம் ஒன்று
வகைகள் வேறு.,

மொழிக்கு முகங்கள் வேறு
மூலம் ஒன்று.

யாமறிந்த மொழிகளெலாம்
ஏதுமில்லை ஒன்றைத்தவிர.

அதையே கவிஞர் சொன்னார் நெஞ்சம் நிமிர,

அமிழ்தம் அவனுடை மொழியாகும்;
அன்பே அவனுடை வழியாகும்.


த.க.தமிழ் பாரதன்
06.03.2018

வியாழன், 19 ஏப்ரல், 2018

செதுக்க வேண்டியது - சிற்பிகளையா ? சிலைகளையா ?

பெயர் சொல்லக்கூடாத மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் அவர்.

பிரதமர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக முதலமைச்சரிடம் விருது பெற்றிருந்தார்.

பெயரிடப்படாத நாளொன்றின் காலைப்பொழுதில் அவரைச் சந்திக்க முகாம் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன்.

____________ தாண்டியிருப்பேன், நான் தேடிச்சென்ற அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தன் அரசு வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

நான் அவரைத் தேடிச் சென்றேன். அவர் என்னைத் தாண்டிச் சென்றுவிட்டார்.

அவரைப் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் அவரைப் பின்தொடர்ந்தேன்.

கிட்டத்தட்ட என் வீட்டிற்குப் பக்கத்துத் தெருக்களின் வழியே சீறவேண்டிய வாகனம்,  காலை வேளை என்பதால் பள்ளிப் பிள்ளைகளின் நெருக்கத்திற்கு மத்தியில் மிகவும் ஊர்ந்து ஊர்ந்து சென்றது.

இந்த நேரத்தில் எங்கு செல்கிறது, என்பது எனக்கே ஆச்சரியம். தொடர்ந்தேன்.

இறுதியாக ஒரு கிறித்தவ ஆங்கில வழிப் பள்ளி வளாக வாசலில் நான் வெளியே நிறுத்தப்பட்டேன். உள்ளே அவர் வாகனம் சென்றது.

பள்ளிப் பாதுகாவலர் சொன்னார், “கலெக்டர் சார், புள்ளைங்க இங்க படிக்குதுங்க, தினெக்கும் வந்து விட்டுட்டு போவாரு”ன்னு சொன்னார்.

இந்தக்காலத்துல இவ்வளவு வேலைப்பளுவிற்கு மத்தியில் தகப்பனாக பிள்ளைகளைக் கொண்டு வந்து விட்டுச்செல்கிறாரே என்று மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், இதுவல்ல நான் உங்கள் நேரத்தை செலவழித்து நான் கூற வந்த செய்தி.

அவரது முகாம் அலுவலகத்திலிருந்து, அவரது பிள்ளை படிக்கும் பள்ளிக்கு வந்த வழியில்,

5 ஆங்கிலவழி தனியார் பள்ளீகள்
3 தமிழ்வழி தனியார் பள்ளிகள்
1 நகராட்சி தொடக்கப் பள்ளி

ஆகியன உள்ளன. இதில் அவர் முகாம் அலுவலகத்திற்கு அருகாமையில் வேறு சில அரசாங்க பள்ளிகளும் இருக்கின்றன. அரசாங்கமே அரசாங்கப் பள்ளிகளையும் அதன் தாய்மொழியையும் நம்பாத போது, அதன் மக்கள் மட்டும் எப்படி நம்பிக்கைக் கொள்வார்கள் என்கிற கேள்வி எழுகிறது.

அதுசரி,

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளே அரசுப் பள்ளிகளை நம்பாத போது, அரசாங்க அதிகாரிகளைக் குறைசொல்லி என்ன ?

உவகைபூரிக்காத உதடுகளுடைய சிலைகளையே சிற்பிகள் வடிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்னச் சொல்லிட முடியும்.!

-த.க.தமிழ்பாரதன்
08.04.2018






சனி, 14 ஏப்ரல், 2018

நாடகப்பயிற்சி முகாம் 2018 | LEADERSHIP TRAINING THROUGH THEATRE

ஆளுமை வளர்ச்சி – நாடகப் பயிற்சி - கோடை முகாம் – 2018
உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்  2018 மே 21 முதல் 31 வரை (பதினொரு நாட்கள்)


LEADERSHIP TRAINING THROUGH THEATRE, 16th Summer Camp - 2018
RESIDENTIAL CAMP - 2018 May 21st To 31st. (11 Days)

வணக்கம். 16 ஆண்டாக, இவ்வாண்டு எமது தூய நெஞ்சக் கல்லூரியில் கோடை முகாம் நடைபெறவுள்ளது. நாடகப் பயிற்சி முறைகளைத் தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கும் உளவியல் மருத்துவ முறைக்கும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கோட்பாடு. நாமும் அந்த வகையில் இப்பயிற்சிகளை மேற்கொண்டு வியத்தக்க வளர்ச்சிகளை எட்டியிருக்கிறோம். எனவே, முழுமையான மனிதனை உருவாக்குவதற்கான பயிற்சியாக இப்பயிற்சியை வடிவமைத்து வருகிறோம்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயிற்சியாளர்கள் வருகைதந்து பயிற்சியளிக்கிறார்கள். ஒவ்வோராண்டும் பங்கேற்கும் மாணவர்களின் உணர்வுப்பூர்வமான பின்னூட்டமே (Feed Back) நம்மைத் தொடர்ந்து இம்முகாமை நடத்தும் உந்துசக்தி ஆகிறது.
இப்பயிற்சிகள் உங்களிடம் நல்ல ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும். வாழ்க்கையின் திசைப்போக்கை மாற்றும் பயிற்சிகளாகவும் இவை அமையும் என்பது உறுதி. உற்சாகத்தோடு பங்கேற்க வாருங்கள்.

வழங்கப்படும் பயிற்சிகள்
  • யோகாசனப் பயிற்சி (Yoga), 
  • சிலம்பம் – தஞ்சாவூர் குத்துவரிசை முதலான வீரக்கலைகள்(Martial Arts), 
  • ஒயிலாட்டம் – கழியலாட்டம் – தப்பாட்டம் – கும்மி முதலான கிராமிய நடனங்கள் (Folk Dances), 
  • உடல் இயக்கம் (Body Movement), 
  • சைகைகள்(Gestures), 
  • முகபாவனைகள்(Face Expressions), 
  • உடல் மீள் தன்மைப் பயிற்சி(body Flexibility), 
  • குரல் பயிற்சி(Voice Cultue), 
  • உடற்பயிற்சி(Exercise), 
  • கற்பைனைத் திறன் பயிற்சி(Imagination), 
  • உடல்-குரல்-மனம் ஒருங்கிணைப்பு(body-Voice-Mind co-ordination), 
  • உச்சரிப்புப் பயிற்சி(Pronunciation), 
  • ஏற்ற இறக்கத்தோடு மொழியாடல்(Modulation), 
  • இசைப்பயிற்சி(Music), 
  • தாள-லய உணர்வு(Rythmic Sense), 
  • கவனக்குவிப்புப் பயிற்சி(Concentration),
  • நினைவாற்றல் பயிற்சி(Memory), 
  • நடிப்பு முறைகள்(Acting Methods), 
  • காலம்- இடம் பற்றிய புரிதல்(Understanding Time and Space), 
  • மனவழி உருவாக்கம்(Improvisation), 
  • தனித்தன்மை பேணுதல்(Indivituality), 
  • தன் அடையாளம் காத்தல்(Self Identity), 
  • கருத்தியல் வளர்ச்சி(Ideology), 
  • அரசியல்-சமூக விழிப்புணர்வு(Political-Social Awarness), 
  • நம்பிக்கை வளர்த்தல்(trust), குழு ஒத்திசைவு(Team sprit), 
  • பிரச்சினைகளைப் புரிதல்(Problem Understanding), 
  • பிரச்சினைகளைக் கையாளுதல்(Problem Handling), 
  • பாத்திரங்கள் அவதானிப்பு(Understanding Characters), 
  • கதை உருவாக்குதல்(Plot Making), 
  • கதை சொல்லல்(Story Telling), 
  • சூழலை வளர்த்தெடுத்தல்(Situation Build-up), 
  • பின் அரங்கப் பயிற்சி(Back Stage Management), 
  • மேடை நிர்வாகம்(Stage Management), 
  • முக ஒப்பனை(Make Up), 
  • உடையமைப்பு(Castumes), 
  • முகமூடிகள் உருவாக்கம்(Mask Making), 
  • மேடை ஒளியமைப்பு(Stage Lights), 
  • வண்ணங்கள் புரிதல்(Understanding Colours), 
  • நாடகங்களைப் புரிதல்(Drama Appreciation), 
  • நாடக விமர்சனம்(Drama Criticism), 
  • ஒலி-ஒளி சாதனங்களைக் கையாளுதல்(Handling modern equipments)
நாடக விழா: 
முகாமின் ஒரு பகுதியாக மே 28 முதல் 31 வரை நான்கு நாட்களும் நடைபெறும் நாடக விழாவில் பங்கேற்று தமிழகத்தின் பல்வேறு குழுக்களின் நவீன நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு உண்டு.

இப்பயிற்சிகளால் என்ன பயன்?
- உங்களிடமுள்ள தனித்திறன்களை அடையாளம் கண்டு வளர்த்துக் கொள்ள முடியும்.
- தயக்கத்தையும் மேடைக்கூச்சத்தையும் அகற்றிக் கொள்ள முடியும்.
- கருத்துக்களை வெளிப்படையாக, துணிச்சலாக வெளிப்படுத்த முடியும்.
- உடன்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளமுடியும்.
- நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும்.
- பல்வேறு சூழல்களில் தனியாக-குழுவாக முடிவெடுக்கும் திறன் பெற முடியும்.
- தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள முடியும்.
- தன் அடையாளத்தைக் கண்டடைந்து வளர்த்துக் கொள்ள முடியும்.
- தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் தற்சார்பு உடையவர்களாகவும் வடிவெடுக்க முடியும்.
- படிப்பு மற்றும் வேலையில் கவனத்தைக் குவிக்கவும் சிறப்பாகச் செயல்படவும் முடியும்.

பயிற்சி எந்த நாட்களில் நடைபெறுகிறது?
2018, மே 21 முதல் 31 வரை. மொத்தம் 11 நாட்கள்.

பயிற்சி நேரம் என்ன?
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?
கல்லூரிகளில் பயிலும் இளநிலை, முதுநிலை பிரிவு ஒன்று மற்றும் பிரிவு இரண்டு மாணவ, மாணவிகள்.

தங்குமிடம்? உணவு?
இருபாலருக்கும் கல்லூரி விடுதிகளில் தனித்தனி தங்கும் வசதியும் உணவும் ஏற்பாடு செய்யப்படும்.

பயிற்சிக் கட்டணம் எவ்வளவு?
ரூ.1,500. (மூன்று வேளை உணவு, தேநீர், பயிற்சிப் பொருட்கள், பயிற்சியாளர் கட்டணம் உட்பட)

தொடர்புக்கு: 
முனைவர் கி.பார்த்திபராஜா
மாற்று நாடக இயக்கம்
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர் - 635601
வேலூர் மாவட்டம்.
அலைபேசி: 9094107737
மின்னஞ்சல்:  kiparthib@gmail.com

Prof K. PARTHIBA RAJA
SACRED HEART COLLEGE,
TIRUPATTUR - 635601,
VELLORE DIST.
MOBILE : 9094107737


குறிப்பு : 
கல்லூரி மாணவர்கள் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அல்லது கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதம் இரண்டில் ஏதேனும் ஒன்றை முகாமின் தொடக்க நாளில் அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக் கடிதம் அளிக்காதவர்கள் முகாமில் பங்குபெற இயலாது.