பட்டிமன்றத்தில் ஒரு பயணம்
பல முறை பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. தொலைக்காட்சி மேடைகள், வானொலி ஒலிபரப்புகள், பள்ளி விழாக்கள், கல்லூரி நிகழ்வுகள், கிராமத்து நிகழ்வுகள், நற்பணி மன்ற நிகழ்ச்சிகள் என பல இடங்களிலும் பட்டி மன்றங்களில் கலந்திருக்கிறேன்.13.௦8.2௦15 முதல் முறையாக பட்டிமன்றத்தை Professional ஆக பேச ஆரம்பித்திருக்கிறேன்.
பட்டி மன்றம் பொய் அதிகம் புழங்குகிறது, அதில் உயிர்ப்பு போய் விட்டது, அதன் பிம்பத்தை மாற்றலாம் என்று பட்டி மன்றத்தை அதிகம் சாடிய என்னிடம் அதனைப் பற்றி விளக்கி, நெடுநேரம் அறிவுரை செய்து இன்றைக்கு பட்டிமன்றத்தில் Professional ஆக பயணிக்க வைத்த நண்பர் Arun Giri அவர்களுக்கு நன்றிகள். ஜாம்பவான்களின் உலகம்
ஏனெனில், பேச்சு, உரை, சொற்பொழிவு, கருத்தரங்கம், கவியரங்கம், என பல தளங்களில் பயணித்த என் வாய்மொழி நெடுநாள் பட்டிமன்றத்தில் பயணிக்க தவறிக் கொண்டிருந்தது. பட்டிமன்றத்தில் பயணித்தாலும் என் "பழைய உரு" மாறாதவாறு பார்த்துக் கொள்ள நினைக்கிறேன்.
13.௦8.2௦15 அன்று கீழ சன்னாநல்லூர் சின்னான் சுவாமிகள் ஆலயத்தில் நடந்த பட்டி மன்றத்தில் புலவர்.மு.விவேகானந்தன் தலைமையில் அன்றும் இன்றும் பக்தியில் சிறந்தவர்கள் ஆண்களே எனும் தலைப்பில் பேசினேன். ஆலயத்தில் உற்சவம் என்பதால் கூட்டம் உட்கார்ந்து ரசித்ததை விட நகர்ந்து கொண்டே கேட்டது என்கிற காரணத்தால் எதிரே எண்ணிக்கை அதிகமில்லை. ஆயினும், பலருக்கும் சென்று சேர்ந்தது. ஆலயத்தின் உட்புறம், சாலைகளின் வழி நெடுகும் கூட்டம் இருந்தது என் மகிழ்வுக்குரியது. கடைசி வரை உண்மைக்கு புறம்பாக ஒன்று கூட சொல்லவேயில்லை. இதே கொள்கை கடைசி வரை தொடரும்.
மக்களிடம் கருத்தைச் சொல்வதற்கு ஏற்ற பல வழிகளில் இதுவும் ஒன்றாக எடுத்துக் கொண்டேன். பட்டிமன்றம் எங்கேயாவது நடந்தா சொல்லுங்க ! நானும் வர்ரேன் @ பார்க்கவும் நிறைய கத்துக்கவும் பேசவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக