பாரதியாரின் பாஞ்சாலி சபதமும் சேக்ஸ்பியரின்
மேக்பெத்தும் - கட்டுரை மதிப்புரை
க. சுரேஷ் எழுதிய பாஞ்சாலி சபதமும் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தும்
என்கிற இக்கட்டுரை 2018 ஜூன் புதுப்புனலில் வெளியானது. தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் மேன்மையோடு வளர்த்தெடுத்த புலவர்கள் பலர்
தோன்றியுள்ளனர் அதில் பாரதியார் குறிப்பிடத்தக்கவர் பாரதியார் பாடல்கள் அதிகமாக
எழுதி இருந்தாலும் அவரது பாஞ்சாலி சபதம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும்
பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி படைத்த படைப்பே பாஞ்சாலி சபதம்.
தமிழ் இலக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பாஞ்சாலி சபதத்தை ஆங்கில
இலக்கியத்தில் சிறந்த கவிஞராக விளங்கிய சேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகத்தோடு அழகியல்
தன்மையில் ஒப்பிட்டு ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. இதன் நோக்கத்தைக் கட்டமைக்க கட்டுரையாளர் பின்வரும் ஒப்பாய்வு முறைகளைக்
கையாண்டிருக்கிறார். இவற்றின் போக்கிலேயே
கட்டுரை செல்கிறது
·
நாடக அழகியல்
·
துன்பியல்நாடகக்கூறு
·
கவிதை நடை
·
காட்சிப்பாடு
மேக்பெத் என்பது பாவத்தின் பயங்கரத்தைச் சித்தரிக்கும் அவல நாடகமாகும். போர்வீரமும் நாணயமும் கொண்ட தளபதி ஒருவன், ஆசைகொண்டு, அந்த ஆசை தூண்டும் தீய சக்திகளுக்கு இரையாகி, கொலைபுரிகிறான். அரச பதவியின்
மீதான ஆசை வெறியாகிறது. தன் அரசனைக் கொல்கிறான். கொஞ்சம் தண்ணீர் கொண்டு பாவத்தைக் கழுவச் சொல்கிறாள் மேக்பெத் மனைவி.
“காவிய பாணி நாடகக் கலையானது தெளிவான வரலாற்றியல் தன்மைகொண்டு
உண்மையான நிகழ்காலத்தைச் சிந்திக்கத் தூண்டுவது என்று ஜெர்மனி நாடகவியலாளர் ‘பிரெக்ட்’ கூறுகிறார். முறையான வடிவமைப்பு நாடகம் ஒதுக்கத்தக்கது. இது எதிர்பார்ப்புஆவலை அதிகமாய் உருவாக்கும் தேவையைத் தவிர்க்கிறது.காட்சிகள் அல்லது நாடக நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தளர்வாக இணைக்கப்பட்டுள்ள
நிலையில் இருக்கும். உச்ச நிலையை நோக்கி நாடகம் வளர்ச்சி உயர்ந்து செல்லாது.
துண்டு துண்டான சம்பவங்களை கொண்டு இது
விளங்கும் ஒரு முழுமையான தன்மையிலிருந்து தனித்தனி அறைகளாக சம்பவக் கோவைகளைக்
கொண்டும் விளங்கும்.
நாடகம்
பார்வையாளர்கள் மனிதர்களுக்கிடையிலான உறவுகளைப் புதியன கண்டுபிடிக்கும் பார்வையோடு
விமர்சனநிலையில், மனவிலகலோடுபார்க்கச் சொல்லித்த்டரப்படவேண்டும் என்பதே நாடக அழகியலாகும். என்பது ப்ரெய்ட்டின் கருத்து.
துன்பியல்
போச்சுது
போச்சுது பாரதநாடு!
போச்சுது
நல்லறம்! போச்சுது வேதம்!
ஆச்சரியக்
கொடுங்கோலங்கள் காண்போம் !
ஐய இதனைத்
தடுத்தல் அரிதோ!
எனும் வரிகளில்
மக்கள் பிரச்சினைகளை மக்களுக்கே பதியவைக்கிறான் பாரதி.
துச்சாதன்ன்
எழுந்தே அன்னை
துகிலினை
மன்றிடை உரிதலுற்றான்…
எனும் வரிகளின்
மூலம் திரௌபதி துகில் எனக் கூறாது, அன்னை துகில்
என்று சொல்லுவதால் தாயின் துகிலை உரிந்தவன் தீயசெயல் உடனடியாக மக்களைப் போய்சேர்கிறது.
மேக்பெத்
நாடகமும் துன்பியலாகவே முடிகிறது.. மேக்பெத் அரசனையும், தளபதியையும் கொலைசெய்த பின் தானும் மாண்டுபோகிறான். துன்பியல் தன்மையை வெளிப்படுத்துவதாக இவ்விரண்டும் இருக்கிறது.
காட்சிப்பாடு
காட்சிப்பாடு மேக்பெத் நாடகத்தில் இருக்கின்றன. தேவதைகள் தோன்றிப் பேசுவது. மேக்பெத்தும் பாங்கோவும் திரும்பும் போது மாயக்காரிகள் பேசுவது
போன்ற காட்கள் மக்கள் மனதில் பதியும் வகையில் அமையும்.
அத்தின
புர முண்டாம்; இவ்
வவனியி
லேயதற் கிணையிலை யாம்;
பத்தியில்
வேதிகளாம்; வெள்ளைப்
பனிவரை
போற்பல மாளிகையாம்;
எனும் முதல்
சருக்கத்தில் அத்தினபுரத்தை வருணிக்கும் பாடலில் பாரதியின் காட்சிப்படுத்தலை அறியலாம்.
மதிப்புரை:
பாரதியின்
பாஞ்சாலி சபதத்தை ஒரு நவீன நாடகம் ஆக மாற்றும் சாத்தியக்கூறுகளை கட்டுரைகளை முன்னிறுத்துகிறது.
ஆங்கில
இலக்கிய உலகின் ஷேக்ஸ்பியரின் நாடகத்தோடு தமிழ் இலக்கிய உலகில் பாரதியின் பாஞ்சாலி
சபதத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் பாஞ்சாலி சபதம் அதற்கான அடிப்படைக் கூறுகளைக் கொண்டுள்ளதென்பது
தெளிவாகிறது.
இதுவரை
இசைநாடகம் மற்றும் கூத்துநாடக மரபிலே மட்டும் நிகழ்த்தப்பட்டு வந்த பாஞ்சாலி சபதம்
தன் பரிமாணத்தைப் புதிப்பித்துக் கொள்வதற்கு இடமளிப்பதை இக்கட்டுரைச் சுட்டுகிறது. நவீன நாடகமாக
மாற்றுவதற்கான அடிப்படைப் பண்புகள் என்னென்ன என்பதை ஒப்பியல்வழி சுட்டுகிறது.
அதற்கு
அழகியல் எனும் கோட்பாட்டை மட்டும் பாஞ்சாலி சபதம்-மேக்பெத்தோடு இணைந்து சுட்டிக்காட்டுகிறது. அமைப்பியல் – வடிவியல் நோக்கில் ஆராய்ந்து கவிதைக் கட்டமைப்பிலிருந்து நாடகக்
கட்டமைப்புப் பெறுவதற்கானக் களன் இருக்கிறாதா? என்பதை நோக்குதலும் அவசியமானதாகும். ஆனால், மேலும் வலுவான அணுகுமுறைகளின் வழியே இதனைக் கட்டமைக்க வேண்டியது
அவசியமானாதாகும். சேக்ஸ்பியர் - பாரதியார்
காலம், இவர்களின் மொழிநடை, படைப்புகளில் எடுத்தாளப்பெற்ற தாக்கம், படைப்புகளின் சமூகத் தேவை, என்பது குறித்தெல்லாம் நோக்கவேண்டி இருக்கிறது.
மேலும், நாடகத்திற்கான பல்வேறு கூறுகளை ஆராய்ந்தால் பாஞ்சாலி சபதம் நாடகமாக
உருப்பெறுதலில் வலுப்பெறும்.
- தக
24.09.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக