ஜேஎன்யு
பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்.
அனைவருக்கும் தொடக்கக்கல்வி என்பது இந்தியாவில் சட்டம். ஆனால், இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப்படிப்பு, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர், முதுமுனைவர் என கல்விநிலை செல்லச் செல்ல கல்வி பயில்வோரின் எண்ணிக்கை
வெகுவாகக் குறைந்து கொண்டே போகிறது. இன்றைய சமூகத்தில் கல்வி என்பது பெரும்பாலும்
வணிகமாகிவிட்டது. உயர்கல்வி குறித்து பெரும்பாலானோர் அச்சம் கொள்வதற்கான காரணமாகக்
கல்விக்கட்டணமே இருக்கிறது.
ஏனெனில், இன்று
பள்ளிப்படிப்புக்கே சில ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள்
என்றால் கேட்கவே வேண்டாம். லட்சங்களில்தான் கட்டணம். இந்தச் சூழ்நிலையில்
உயர்கல்வியின் நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை.ஆய்வுப் படிப்புகள் எனும்போது
கல்லூரிகள், மாநிலப்
பல்கலைக்கழகங்கள், மத்தியப்
பல்கலைக்கழகங்கள் என எதுவான போதும் கட்டணம் ஆயிரத்துக்கும் குறைவாக இல்லை. ஆனால், இந்தியாவின்
தலைநகரில் அமைந்துள்ள ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு
பருவத்துக்கான கல்விக்கட்டணம் வெறும் 128 ரூபாய் மட்டுமே.
ஜேஎன்யு
இந்தியப்
பல்கலைக்கழகங்களில் முதன்மையானது, சிறந்த
பல்கலைக்கழகத்துக்கான ஜனாதிபதி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது
இப்பல்கலைக்கழகம். 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு 2019 ஆகும்.
தில்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்பெறும் ’முனிர்கா’வின் பின்புறம் அமைந்துள்ளது பல்கலைக்கழகம். தலைநகரில் உள்ள மத்தியப்
பல்கலைக்கழகம் என்பதால் துறைசார்ந்த முக்கிய நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பு
கிடைக்கப் பெறும். தலைநகரில் அமைந்துள்ளதால் அறிவுசார் விடயங்களை எளிதில்
பெறுவதற்கான வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.
கல்விக்கட்டணம்
இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம், பருவத்துக்கு 128ரூபா ய் மட்டுமே. ஆம், இவ்வளவு குறைந்த
கட்டணம் உலகின் எந்தப்
பகுதியிலும் இருக்க வாய்ப்பில்லை. கல்விக் கட்டணம் மட்டும் அல்ல, சான்றிதழ்கள்
வாங்க 100 ரூபாய்க்குமேல்
கட்டவேண்டியதில்லை. இதை எல்லாம்விட முனைவர்பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்க வெறும் 100 ரூபாய்தான்.
இந்தியாவின் ஏனைய பல்கலைக்கழகங்களில் இதற்காக ஆயிரக்கணக்கில் கட்டணம்
வசூலிக்கப்படும்போது இத்தொகை மிகக் குறைவு. ஒரு பருவத்திற்கான
விடுதிக்கட்டணம் ஏறக்குறைய 1500 ரூபாயாகும். இது தவிர்த்து மாதாந்திர உணவுக்கட் டணம்
ஏறத்தாழ 2,500 ரூபாய் பெறப்படுகிறது. சேர்க்கையின்
போது ஆய்வு மாணவர்களுக்கு 240ரூபாயும் இளநிலை,முதுநிலை மாணவர்களுக்கு 216 ரூபாயும் கல்விக்கட்டணமாகும். (துறை, பட்டப்படிப்பு பொறுத்து கட்டணத்தில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்)
பல்கலைக்கழக தன்மை
இது
ஓர் உறைவிடப் பல்கலைக்கழகம் ஆகும். அதாவது, பல்கலைக்கழகத்தில்
சேரும் மாணவர்களின்
இருப்பிடத் தொலைவை வைத்து விடுதியில்
இடம்பெற முன்னுரிமை வழங்கப்பெறுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் மொத்தம் 18 விடுதிகள்
உள்ளன. விடுதியின் ஒவ்வோர் அறைக்கும், இருவர்
என்பதாகவும் மூத்த முனைவர்பட்ட
ஆய்வாளர்களுக்குத் தனி அறை என்பதாகவும் ஒதுக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும்விடச்
சிறந்தது இங்கே இருக்கும் பி.ஆர். அம்பேத்கர் நூலகம். 9 தளங்களை உடைய
நூலகத்தின் தரைத்தளத்தில் ஒரேநேரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வசதி உள்ளது. இது, தவிர்த்து 24*7 படிப்பக அறை, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நூலகமும் உள்ளது.
அரசியல்
ஆளுமைகள், பொருளாதார
வல்லுநர்கள், அறிஞர்கள் எனப்
பலத்தரப்பட்ட நபர்களின் பொழிவுகள் அவ்வப்போது ஆங்காங்கு நிகழ்ந்துகொண்டே
இருக்கும். இலவச வைஃபை வசதி. மாற்றுத்திறனாளிகளுக்கு
சேர்க்கை, விடுதி போன்றவை
பிரத்யேகமாக இருக்கின்றன. கட்டிடங்கள், சாலைகள்
தவிர்த்து பல்கலைக்கழகம் முழுமையும் மரங்கள் இருப்பதால், தில்லியில்
நிலவும் மாசு பிரச்சினை இங்கு குறைவு.
மாணவர்கள்
சமூக விஞ்ஞானத்தின் ஆய்வுக் கருவூலமாக ஜேஎன்யு விளங்குகிறது. இப்பல்கலைக்கழகம்
அரசியல் முதற்கொண்டு பலதுறைகளின் ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. நிர்மலா சீதாராமன், சீதாராம்யெச்சூரி, பிரகாஷ் காரத், கண்ணையா குமார்
உள்ளிட்ட பல அரசியல் ஆளுமைகளுக்கான விதை இங்கு விதைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் பொருளாதரத்திற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி முதலான ஆளுமைகள் பலர் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர்களே. சமூக ஆர்வலர்களாகவும், சமூக செயற்பாட்டாளர்காகவும் உருவெடுப்பதற்கான வாய்ப்பு இங்குள்ளது. அரசு உயர்ப் பொறுப்புகளிலும் தனியார் வேலைகளிலும் பலர் பணியாற்றி வருகின்றனர். உலகில்
எந்த மூலையில் உரிமை மறுக்கப்படுகின்றதோ, அதை எதிர்த்து
ஒலிக்கும் குரலாக ஜேஎன்யுமாணவர்களின் குரல் இருக்கும். இங்குள்ள கட்டற்ற
சுதந்திரம், கட்டுப்பாடற்ற
அறிவுத்தேடலும் மாணவர்களுக்கான சமூகப் புரிதலை ஏற்படுத்துவதாக
இருக்கிறது.
மாணவர் தேர்தல்!
ஜே.என்.யு
பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான அமைப்பாக ஜேஎன்யு மாணவர் சங்கம் செயல்படுகிறது.
இம்மாணவர் அமைப்பு 1971-ம் ஆண்டில் மாணவர்களால்
உருவாக்கப்பட்டது. அதாவது, இந்தப்
பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது.
இதற்கான விதிமுறைகள் எல்லாம் மாணவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இது, நிர்வாகத்தின்
தலையீடு இல்லாமல் இயங்கும் ஓர் அமைப்பாகும். இதற்கான தேர்தல் ஒவ்வொரு
கல்வியாண்டின் தொடக்கத்திலும் நடைபெறும். தேர்தலில் பொதுக்குழுவுக்கான தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர்
என்ற 4 பதவிகளுக்கான
உறுப்பினர்களும் ஒவ்வொரு துறைக்குமான ஆலோசகர்களும் வாக்கெடுப்பின்மூலம்
தேர்ந்தெடுக்கப்படுவர். இத்தேர்தலை நடத்தும் தேர்தல் குழுவினரும் மாணவர்களாகவே
இருப்பர். இத்தேர்தலின் முக்கியமான சிறப்பம்சம் போட்டியாளர்கள் மாணவர்களின்
முன்னிலையில் பொதுவெளியில் தங்களது வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். மாணவர்கள்
அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவ
அமைப்பின் மீதான விமர்சனங்கள் அவ்வமைப்பின் சார்பாகப் போட்டியிடும் மாணவரிடம்
கேட்கப்படும். ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுவோர் பிற
அமைப்புகளின் மீதான விமர்சனங்களையும் கேள்விகளையும் வைப்பர். அது தொடர்பான
பதில்களையும் விளக்கங்களையும் அம்மேடையிலேயே பகிர்ந்துகொள்வர். இத்தகைய விவாதங்களே
அவ்வாண்டின் மாணவத் தலைவரைத் தேர்தெடுப்பதில் அடிப்படையாக அமையும். இத்தகைய
தன்மையானது பொது அரசியலில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு.
2020-21 சேர்க்கை
2020-21ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கான அறிவிப்பு அண்மையில்
வெளியானது. கடந்த ஆண்டுகளில் எழுத்துத் தேர்வாக இருந்த நுழைவுத் தேர்வு, கடந்த
ஆண்டிலிருந்து ஆன்லைன் தேர்வாக நடந்துவருகிறது.
இந்நுழைவுத்தேர்வினை ஜேஎன்யு மற்றும் National Test
Agency உடன் இணைந்து
நடத்துகிறது. சரியான விடையைத் தெரிவு செய்யும் Objective type முறையில்
நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. ஏற்கெனவே, தமிழ், வரலாறு, சமூகவியல் உள்ளிட்ட
துறைகளிலும் தமிழ் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழக மாணவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொள்ளவும்.
தேர்வு விவரம்
இணையத்தில்
விண்ணப்பிக்கக் கடைசி நாள் – 15 ஜூன் 2020
நுழைவுத்தேர்வுக்கான
அனுமதிச்சீட்டு பதிவேற்றப்படும் நாள் –____2020
ஆன்லைன் தேர்வு
நடைபெறும் நாள்கள் – _____2020
தமிழகத்தில்
தேர்வு நடைபெறும் இடங்கள் - சென்னை, மதுரை,கோவை, திருச்சி, நாகர்கோயில்
-தக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக