தொல்காப்பியமும் குறியியலும் - கட்டுரை மதிப்புரை
தொல்காப்பியமும் குறியியலும் எனும் இக்கட்டுரை பேராசிரியர் பெ. மாதையன் அவர்களால் எழுதப்பட்டது. இது அவருடைய கட்டுரை
நூல் தொகுப்பான உரையியல் நூலில் முதலாவது கட்டுரையாக இருக்கிறது. மொழி குறிகளின் தொகுப்பாக உள்ளது. சொற்கள் மொழியின்
குறிகளாக இருந்து அவற்றின் சேர்க்கையால் குறிப்பிட்ட கருத்தை உணர்த்தும் கருத்தாடல்கள்
உருவாக அடிப்படைக் கருவிகளாக உள்ளன. ஒரு பொருள் காலத்தின்
ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களைப் பொருண்மை ரீதியில் அடைந்து வருகிறது. ஒன்றைப் பொதுவாக அழைக்க அது குறியீடாகவும், குறிப்பிட்டுத்
தெளிவாக அழைக்க சிறப்புக் குறியாகவும் அழைக்கப்படுகிறது.
சான்று – குறியீடு – மலை
சிறப்புக்குறி – கல், குன்று,
குன்றம், விண்டு
குறி, குறியீடு இவ்விரண்டு
சொற்களும் ஒன்றுபோல இருந்தாலும், அவை கொண்ட பொருள் வேறுபாடுடையது.
குறி என்பதை ஒன்றைச் சுட்டி இனங்கண்டு கொள்வதற்கான அடையாளம்.
குறியீடு என்பது மற்றொரு பொருளுக்காக அப்பொருளின் இடத்தில் தானே நின்று
பொருளுணர்த்துவதாகும். இலக்கியத்தில் ஒரு பொருளையோ அல்லது
நிகழ்ச்சியையோ குறிப்பிட வரும் ஒரு சொல் அல்லது சொற்தொகுதி தன் இயல்பான பொருளைத் தவிர்த்த
பிறிதொன்றினைக் குறிப்பிடுவதே குறி எனப்படுகிறது.
பெர்டினன்ட் டி சசூர்
ஒரு சொல்லின் குறிப்பீடும் மதிப்பீடும் வெவ்வேறுபட்டன என்கிறார். மேற்கண்டவற்றின்
அடிப்படையில் தொல்காப்பியத்தை நோக்குகையில், தொல்காப்பியர் பொருண்மைக்கு
முக்கியத்துவம் கொடுத்துள்ளமையை அவரது இலக்கண அமைப்பை காட்டுகிறது. கிளவியாக்கத்தில் சொல்பயன்பாட்டுச் சூழல்களையும் அதன் வேறுபாடுகளையும் சுட்டிக்
காட்டி விளக்குவார். இதேபோல், வினையால்
வேறுபடும், வேறுபடாப் பல்பொருட் சொற்கள் குறித்தும் பேசுவார்.
வேற்றுமையியலில் வேறுபடப் பொருள்தரும் ஆகுபெயர்களையும் எச்சவியலில் பொருள்கோள்
முறைகளையும், தொகைகளையும் விளக்குவார். தத்தம் குறிப்பிற் இடைச்சொற்கள் குறித்து இடையியலில் பேசுவார். ஆண், பெண் பெயர்களை ஆளவேண்டிய பொருண்மை நிலைகளை மரபியலிலும்,
உரியியலில் கடினச் சொற்களின் பொருண்மை நிலைகளையும் விளக்குவார் தொல்காப்பியர்.
தொல்காப்பியத்தில் இரு
மொழி அமைப்புகள் உள்ளன.
அது இலக்கண நூல் என்பதால், இலக்கண விளக்கத்திற்கு
முதன்மையான தரவு மொழியும், இந்த மொழியின் இலக்கணத்தை விளக்குவதற்கான
கருவி மொழியும் ஆகும். அவர் கையாண்ட சொற்களின் தன்மையில் அக்கலைச்சொற்கள்
முழுக்க, கருவிமொழி (அ) அதனோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. பொருண்மை குறித்துத்
தொல்காப்பியம் பேசும் நூற்பாக்களை ஆய்ந்து நோக்கவேண்டும். “மொழிப்பொருட்காரணம்
விளிப்பத் தோன்றா” என்ற நூற்பா சொற்களின் இடுகுறித் தன்மையைப்
பற்றிப் பேசுகிறது. பொருண்மை உண்டென்பதும் அது வெளிப்படையாகத்
தோன்றாதென்பதும் இதன்வழி அறியமுடிகிறது.
சொல் தன்னைக் குறிக்கும்
என்கையில் ஒலித்தன்மையது என எடுத்துக் கொண்டால், சசூரின் Signifier கருத்துடனும் பொருள் பற்றிய மன உணர்வே பொருண்மை என எடுத்துக் கொண்டால்
signified கருத்துடனும் ஒப்பிடத்தக்கது. பொருண்மையை
தெரிபு, குறிப்பு என இரண்டாகப் பாகுபடுத்தியுள்ளார் தொல்காப்பியர்.
தெரிபுவேறு நிலையலும்
குறிப்பிற் தோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை
நிலையே.
ஒரு சொல் பல பொருண்மையை உணர்த்துகையில், அதை எல்லா இடங்களிலும்
பயன்படுத்த முடியாது. (அம்மா எனும் சொல், எல்லா இடத்தும் தாய் எனும் பொருளில் வருதலில்லை) பொருளதிகாரத்தில்
திணை, அதன் பெயர்கள், புறத்திணைகட்கு பெயர்
வைத்தலில் போன்றவற்றில் தொல்காப்பியர் குறித்தன்மையிலேயே பெயரிட்டுள்ளார். இவற்றின் அடிப்படையிலெல்லாம் ஒரு சங்கப்பாடலை நோக்குகையில், அது தரும் நேரடிப் பொருளைவிடவும், பாடலில் நெறியாளுகையில்
கட்டமைக்கப்பட்டுள்ள கருப்பொருட்கள் அடிப்படையிலான குறிப்புப் பொருட்கள் தரும் செய்திகளே
முதன்மையானவை. சிலநேரம் இது உரைநடைகளிலும் காணப்படுவது உண்டு.
இவ்வாறு எழுத்துவழக்கு, பேச்சு வழக்கு எனும் நிலைகள்
பற்றிப் பேசும், தொல்காப்பியம் சொல், சொன்மை,
பொருண்மை எனும் கருத்தின் வழி அவற்றை வெளிப்படுத்தும் குறியியல் நூலாகவே
இருக்கிறது என்பதை கட்டுரையின் வழி கட்டுரையாளர் நிறுவுகிறார்.
மதிப்புரை
கட்டுரை நெடிய கட்டுரையாகும், எங்கேயும் அயர்ச்சியுறாத
வண்ணம் மொழிநடை அமையப்பெற்றுள்ளது. குறியியல் குறித்தத் தெளிவான
விளக்கத்தைப் போதுமான அளவில் கட்டுரை கொடுத்துள்ளது. கட்டுரையின்
தொடக்கம் குறி, குறியீடு குறித்து விளக்குவதாகவும், நடுவணில் தொல்காப்பியத்தின் குறியீட்டுத் தன்மையில் அணுகுவதாகவும்,
நிறைவில் சொன்மை-பொருண்மை குறித்து சங்க இலக்கியத்
தரவின் சான்றுகளுடன் நிறுவுவதாகவும் அமைகின்றது. இக்கட்டுரையில்
அடிக்குறிப்போ, ஆய்வுக்குதவிய துணைநூற்பட்டியலோ கொடுக்கப்படவில்லை.
குறி-குறிப்பீடு இவற்றின்
வழி ஒன்றை அணுகுதலில் உள்ள தேவையை, அதனால் வெளிப்படும் பொருண்மையைச்
சுட்டுவதே இதன்மையமாக கட்டுரையாளர் கொண்டுள்ளார்.இக்கட்டுரை தொல்காப்பியத்தைக்
குறியீட்டுத் தன்மையில் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பைத் தருகிறது. இதனுழி உண்டாகும் திறனால் சங்க இலக்கிய வாசிப்பு மேம்படுமென்பதும் ஐயப்பாடற்றது. தொல்காப்பியமும் குறியியலும்

குறியீட்டுத் தன்மையில் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பைத் தருகிறது. இதனுழி உண்டாகும் திறனால் சங்க இலக்கிய வாசிப்பு மேம்படுமென்பதும் ஐயப்பாடற்றது.
-தக
24.10.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக